தடைசெய்யப்பட்ட வெடிகளால்
சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் கண்டம்(அபாயம்)
தேவதானப்பட்டிப் பகுதியில் தடை செய்யப்பட்ட வெடிகளை வெடிப்பதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் கண்டம் உள்ளது.
தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி,
எருமலைநாயக்கன்பட்டி, சில்வார்பட்டி, செயமங்கலம் முதலான பகுதிகளில்,
திருமணம், மங்கல நிகழ்ச்சிகள், காதுகுத்துதல், வீடு திறப்பு விழா, கடை
திறப்பு விழா எதுவானாலும் வெடிகள் வெடிப்பது வாடிக்கையாக உள்ளது.
இதற்காகத் அதிக ஒலியையும் அதிக புகைகளையும் வெளியிடும் தடை செய்யப்பட்ட
வெடிகளை வெடிக்க வைக்கின்றனர். இதன்மூலம் அப்பகுதியில் கரும்புகைகளும்,
தாள்துண்டுகளும் குவிந்து கிடக்கின்றன. மேலும் அதிக ஆற்றல்வாய்ந்த வெடி
வெடிப்பதால் வீடுகள், மருத்துவமனைகள் போன்றவை அதிர்கின்றன. இதனால்
சிறுகுழந்தைகள், நோயாளிகள் முதலான அனைவரும் பாதிப்படைகின்றனர்.
பல ஊராட்சி, பேரூராட்சிகளில் விழாக்களில்
வெடிகள் வெடிப்பதற்குத் தடை இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே தடை
செய்யப்பட்ட வெடிகளை வெடிப்பவர்கள்மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து
விசாரணை செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக