வெள்ளி, 20 மார்ச், 2015

‘மீண்டும் வருவோம்’ – குறும்படம் திரையிடல்


meendum_varuvoam

 தாயக-தமிழகக் கலைஞர்களின் கூட்டு முயற்சியில் தமிழீழ மண்ணில் இக்காலத்தில் இளம் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் தொல்லைகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட ‘மீண்டும் வருவோம்’ குறும்படம் சென்னையில் சிறப்பாக வெளியிடப்பட்டுத் திரையிடப் பட்டுள்ளது.
 பாசறைப் பட்டறை வழங்கிய ‘மீண்டும் வருவோம்’ என்ற இக் குறும்படம் மாசி 24, 2046 / 08.03.2015 ஞாயிற்றுக்கிழமை அனைத்துலக மகளிர் நாளன்று மாலை 6 மணிக்கு வடபழனியில் அமைந்துள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க மண்டபத்தில் வெளியிடப் பட்டது.
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் வெளியிட்டு வைக்க மறவன் புலவு சச்சிதானந்தன், பாபு, யாழினி அரசேந்திரன், கவிஞர் சிநேகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர் .
ஆவல் கணேசன் நிகழ்ச்சினைத் தொகுத்து வழங்க   இலாரன்சு பிரபாகரன் வரவேற்புரையாற்றினார்; காசி ஆனந்தன் தலைமை உரையாற்றினார்; வெளியீட்டு உரையினை மறவன்புலவு சச்சிதானந்தன் நிகழ்த்தினார்,
மதிப்புரையினை யாழினி அரசேந்திரனும், சிநேகனும், ஏற்புரையினைத் தேவர் அண்ணாவும் நன்றி உரையினை தமிழ் பிரபாவும் நிகழ்த்தினர் .
நிகழ்ச்சி இறுதியில்.குறும்படம் மக்களுக்குத் திரையிட்டு காண்பிக்கப்பட்டது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக