இலவச ச் சமையல் கூடம்!
சுகாதார ச் சீர்கேட்டை த் தடுக்க, மனித கழிவில் கிடைக்கும் கழிவு வளிமம்(பயோ காஸ்) மூலம், இலவச சமையல் கூடம் கட்டி தந்த, சிவசுப்பிரமணியன்: நான்,
சென்னைக்கு அருகில் உள்ள, தாம்பரம் நகராட்சியின் ஆணையராக பணியாற்றுகிறேன்.
குடிசை பகுதியில் சர்வே எடுப்பதற்காக, சேலையூரின் பாரத் நகருக்கு
சென்றோம். அங்குள்ள பாதி வீடுகளில், கழிப்பறை வசதியே இல்லை. பொது
கழிப்பறைகளும், எவ்வித பராமரிப்பின்றி அசுத்தமாக இருந்தன. மனித கழிவுகளால்,
சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயத்தை, எங்களால் அறிய
முடிந்தது. அப்பகுதி மக்கள் கூலி வேலைக்கு போவதால், வசதியின்மை காரணமாக,
விறகு அடுப்பிலேயே சமையல் செய்து வந்தனர். மழைக்காலத்தில், விறகு அடுப்பில்
சமைப்பது மிக கடினம். சுகாதார சீர்கேட்டை தடுக்க வேண்டும். அதே நேரத்தில்,
அது, அங்குள்ள ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். இந்த
நோக்கத்தில், பராமரிப்பு இல்லாத கழிப்பறைகளை சீர் செய்து, பொதுமக்கள்
பயன்பாட்டிற்கு திறந்து வைத்தோம். அதில் இருந்து கிடைக்கும் மனித கழிவுகள்
மூலம், "பயோ காஸ்' கிடைக்கும் தொழில் நுட்பத்தை செயல்படுத்தினோம். மொத்தம்,
100 பேர் பயன்படுத்தும் ஒரு பொது கழிப்பறையில், 40 சதவீத பயோ காஸ்
கிடைக்கும். இதை, காஸ் அடுப்புகளுக்கு எரிபொருளாக பயன்படுத்தலாம். தற்போது,
தமிழகத்திலேயே முதன் முறையாக, தாம்பரம் நகராட்சி சார்பில், சேலையூர்
பகுதியில் இலவச சமுதாய சமையல் கூடம் செயல்படுகிறது. இங்கு, 14 காஸ்
அடுப்புகள் வைக்கப்பட்டு, ஒரே நேரத்தில், 14 குடும்பங்கள் என, எந்நேரமும்
பொதுமக்கள் இலவசமாக சமையல் செய்யலாம். வீட்டில் காஸ் அடுப்பு இல்லாத ஏழை
பெண்களுக்கு, இவ்வசதி மிகவும் பயனுள்ளதாகவும், சமையல் பணியை விரைவில்
முடித்து, வேலைக்கு செல்லவும் உதவியாக உள்ளது. இத்திட்டங்களுக்கு, தமிழக
எரிசக்தி வளர்ச்சி முகமை மானியம் தருகிறது. இத்திட்டத்தால், மனித கழிவை
மனிதனே அள்ளும் அவலமும், அதனால் விஷ வாயு தாக்கி மனித உயிரிழப்பு
ஏற்படுவதும், முற்றிலும் தடுக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக