சனி, 27 ஜூலை, 2013

அரைத்த மாவையே அரைக்க கூடாது!

அரைத்த மாவையே அரைக்க கூடாது!

இலட்சத்தில் சம்பளம் வாங்கும் ஐ.டி., வேலையை ராஜினாமா செய்து, மனதிற்கு பிடித்த கேக் செய்யும் தொழிலில் வெற்றி பெற்ற, திவ்யா: நான், வட இந்தியாவில் உள்ள, குர்கானை சேர்ந்தவள். ஐ.டி., துறையில் பிரபலமான மல்டிநேஷனல் நிறுவனத்தில், உயர்ந்த பதவியில் வேலை பார்த்தேன். நிறுவனத்தின் புராஜெக்ட் காரணமாக, இங்கிலாந்து மற்றும் ஹாலந்து நாடுகளில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினேன். ஐரோப்பிய மக்கள், எல்லாவிதமான மகிழ்ச்சியான உணர்வையும், கேக் வெட்டி தான் கொண்டாடுவர். அதிலும், மகிழ்ச்சியான காரணங்களுக்கு ஏற்ப, கேக்கை விதவிதமான வடிவங்களில் தயாரிப்பதே அவர்களின் வழக்கம். பள்ளி செல்லும் குழந்தை முதல் மதிப்பெண் பெற்றால், ஒரு குட்டி பையன் மெடல் வாங்குவது போல், கேக்கை வடிவமைப்பர். இந்த, "கேக் ஆர்ட்' கலை, எனக்கு மிகவும் பிடித்து போனதால், கிடைக்கும் ஓய்வு நேரங்களில், கேக் செய்வதை ஒரு பொழுது போக்காக கற்றுக் கொண்டேன். புராஜெக்ட் முடித்து நாடு திரும்பியதும், பழையபடி அரைத்த மாவையே அரைக்க வேண்டி இருந்ததால், வேலையில் வெறுப்பு ஏற்பட்டது. கேக் செய்வது, என் மனதிற்கு மகிழ்ச்சி தரும். அதை ஒரு தொழிலாக ஏன் செய்யக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. ஐரோப்பிய முறையிலான கேக் ஆர்ட் தொழிலை ஆரம்பிக்க, ஐ.டி., வேலையை ராஜினாமா செய்தேன். "டி கேக்கரி' என்ற பெயரில், குர்கானில் கேக் தயாரிக்கும் யூனிட் ஆரம்பித்தேன். பேஸ்புக்கில் அக்கவுன்ட் ஆரம்பித்து, நான் தயாரித்த வித விதமான கேக்குகளை, "அப்லோட்' செய்ததால், குர்கான் மற்றும் டில்லியிலும் விற்பனை சூடுபிடித்தது. தற்போது வாரத்திற்கு, 30 கேக்குகள் நவீன முறையில் டிசைன் செய்து விற்கிறேன்.நீச்சல் குளம், அதை சுற்றிலும் ரிலாக்ஸ் செய்ய குடைகள், அமைதியான இடத்தில் பேசிக் கொண்டிருக்கும் கணவன், மனைவி என, தற்போது வாடிக்கையாளர்களே கேக் வடிவமைக்கும் சூழ்நிலையை சொல்கின்றனர். நானும் அதற்கு ஏற்ப தயாரித்து, வாடிக்கையாளர்களை திருப்தி படுத்துவதில், மிகுந்த மகிழ்ச்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக