வெள்ளி, 14 செப்டம்பர், 2012

இந்தியாவில் முதல்முறையாக த் தொடுதிரை கைக் கடிகாரம் அறிமுகம் touch screen wrist watch



இந்தியாவில் முதல்முறையாக த் 
தொடுதிரை கைக் கடிகாரம் அறிமுகம்



பெங்களூர், செப்.13: இந்தியாவில் முதல்முறையாக தொடுதிரை கைகடிகாரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.டைட்டன் தொழில் நிறுவனத்தின் சார்பில் பெங்களூரில் நடைபெற்றவிழாவில் இந்தியாவில் முதல்முறையாக சொனாட்டா தொடுதிரை கைகடிகாரத்தை, அந்நிறுவன மேலாண் இயக்குநர் பாஸ்கர்பட் அறிமுகம் செய்தார். இது குறித்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இந்தியாவின் கைகடிகாரத்தின் போக்கை மாற்றியமைக்கப்போகும் புரட்சிகரமான தொடுதிரை கைகடிகாரத்தை அறிமுகம் செய்ததில் பெருமையடைகிறேன். தண்ணீரில் விழுந்தாலும் பாதுகாப்பாக இருக்கும் இந்த கைகடிகாரம் 3 வண்ணங்களில் கிடைக்கும். இதுதவிர, மின்விளக்கு, ஸ்டாப்-வாட்ச், பலவகையில் நேரம், நாள், கிழமையை காண்பிக்கும் வசதி, மணியடிக்கும் வசதிகளும் இருக்கும். ஓராண்டு உத்தரவாதத்துடன் கிடைக்கும் இந்த ரக கைகடிகாரம் ரூ.1499 விலைக்கு விற்கப்படும். தொடுதிரை வசதியில் இந்த அளவுகுறைந்த விலை கடிகாரத்தை காணமுடியாது. இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்ப்பார்ப்பு, தேவையை கருத்தில் கொண்டு கைகடிகாரம் தயாரிக்கப்பட்டுள்ளது. ரூ.225 விலையில் இருந்து சொனாட்டா  கைகடிகாரங்கள் சந்தையில் கிடைக்கும். தண்ணீரில் பழுதாகாத 21 வகையான கைகடிகாரங்களில் தொடுதிரை கைகடிகாரமும் ஒன்று. தமிழகத்தின் ஒசூரில் அமைந்திருக்கும் தொழிற்சாலையில் இவ்வகை கடிகாரத்தை தயாரிக்கிறோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக