செவ்வாய், 11 செப்டம்பர், 2012

"படப்பொறி அருங்காட்சியகம் அமைக்கப் போகிறேன்!'

சொல்கிறார்கள்
அமைக்கப் போகிறேன்!'

ஒளிப்படப் பொறிகளை ச் சேகரிக்கும், ஓவியர் சிரீதர்: எனக்கு சிறு வயதிலிருந்தே ஓவியத்தில் அளவற்ற ஈடுபாடு உண்டு. ஓவியத்தை தாண்டி என் பொழுதுபோக்குகளில் ஒன்று, மாறுபட்ட பழைய பொருட்களைச் சேகரிப்பது. ஒரு முறை மும்பையில் ஓவியக் கண்காட்சியை நடத்தி விட்டு திரும்பும் முன், பழைய பொருட்கள் விற்கும் கடையில் பார்த்த பிரமாண்ட கேமரா தான், அவற்றை சேகரிக்கும் ஆர்வத்தின் துவக்கம். கடந்த எட்டு ஆண்டுகளில், 1,000த்திற்கும் மேற்பட்ட கேமராக்களை சேகரித்துள்ளேன். பாக்கெட் கடிகாரத்தில், கைக்கடிகாரத்தில், மறைத்து வைக்கப்பட்டிருக்கும் துப்பறியும் கேமராக்கள், ஜேம்ஸ் பாண்ட் காலம் வருவதற்கு முன், மார்க்கெட்டில் விற்கப்பட்டிருக்கின்றன. நீருக்குள் மூழ்கிப் படமெடுக்கும், உலகின் முதல் கேமரா, "3டி' கேமரா என, அபூர்வங்களை மட்டுமில்லாமல், பல மாடல் கேமராக்களையும் வைத்துள்ளேன்.கடந்த, 1885லிருந்து, 2000ம் ஆண்டு வரை வெளி வந்த எல்லா கேமராக்களையும் சேர்ப்பது என் திட்டம். உலகின் முதல் பெரிய கேமராவை வைத்திருப்பதால், எது மிகச் சிறியது என, கேட்பவர்களுக்காக, "மினி எச்டி 720' என்ற கேமராவை இணையதளத்தில், "ஆர்டர்' செய்திருந்தேன். சரியாகக் கண்காட்சிக்கு ஒரு நாள் முன்னதாக அது வந்தது. வெளிநாட்டில் நடத்தும் ஓவியக் கண்காட்சியில் கிடைக்கும் பணத்தில், கேமராக்களை வாங்கி சேகரிக்கிறேன். இன்று, "ஆட்டோமேட்டிக் டிஜிட்டல்' கேமராக்களால், குழந்தைகள் கூட படமெடுக்குமளவிற்கு எளிதாகிவிட்ட புகைப்படத் தொழில்நுட்பத்திற்குப் பின் உள்ள ஒரு நீண்ட சரித்திரத்தையும், கேமராக்களின் பரிமாண வளர்ச்சி எப்படி அந்தத் துறையை மாற்றிவிட்டது என்பது பற்றியும் பள்ளிக் குழந்தைகளுக்குச் சொல்ல, ஒரு அமைப்பை துவங்கியுள்ளேன். அடுத்த ஆண்டு, ஊட்டியில், கேமரா அருங்காட்சியகம் அமைக்கப்போகிறேன். இந்தியாவின் முதல் கேமரா அருங்காட்சியகம், உலக தரத்தில் சுற்றுலாப் பணிகளைக் கவரும் வகையில் இருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக