வியாழன், 13 செப்டம்பர், 2012

அருந்திறலுக்கு அகவை தடை யல்ல!

சொல்கிறார்கள்
 
 
அருந்திறலுக்கு அகவை தடை  யல்ல!  
 
தன் 86 வயதிலும், மாணவர்களுக்கு கைப் பந்து விளையாட்டு பயிற்சி அளிக்கும், நடேச ரெட்டி: திருத்தணியிலுள்ள, டாக்டர் ராதாகிருஷ்ணன் மேல் நிலைப் பள்ளியில் படித்த போது, தாலுகா அலுவலகத்தில், "கிளார்க்'காகப் பணிபுரிந்த, பாலகிருஷ்ணன் என்பவரின் தூண்டுதலால், பள்ளியில் நடக்கும், கைப்பந்து விளையாட்டில் பங்கேற்றேன். பள்ளியில் படித்த போதே குண்டு எறிதல், தட்டு எறிதல் போட்டிகளிலும் பரிசுகள் வென்றுள்ளேன். சைதாப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லூரியில், ஓராண்டு படிப்பு முடித்ததும், நான் படித்த பள்ளியிலேயே, எனக்கு வேலை கிடைத்தது. அங்கு இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த பின், ஒரு கல்லூரியில் உதவி உடற்கல்வி இயக்குனராகப் பணியாற்றினேன். அப்போது, கைப்பந்து அணியை தயார் செய்து, மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைத்தேன். எங்கள் கல்லூரி அணியினர், முதல் பரிசு வென்றனர். கைப்பந்து பயிற்றுனர் பயிற்சிக்காக, தமிழக கைப்பந்து சங்கம் என்னை, பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவுக்கு அனுப்பி வைத்தது. அங்கு பயிற்சி முடித்த பின், கடலூர், அண்ணா விளையாட்டு மைதானத்தில், கைப்பந்து பயிற்றுனராக, அரசு வேலை கிடைத்தது. அந்தப் பணியின் போது, 10க்கும் மேற்பட்ட மாநில அளவிலான, கைப்பந்துப் போட்டிகளை நடத்தி உள்ளேன். 26 ஆண்டுகள் கைப்பந்து பயிற்றுனராக இருந்து, ஓய்வு பெற்றேன். உத்தர பிரதேசத்தில் நடந்த முதியோர் தடகளப் போட்டியில், குண்டு எறிதல், ஈட்டி எரிதல், வட்டு எறிதல் போட்டிகளில் பங்கேற்று, தங்கப்பதக்கம் வென்றேன். வரும், நவம்பர் மாதம், சீனாவில் நடக்கும், ஆசிய அளவிலான மூத்தோர் தடகளப் போட்டியில் பங்கேற்க முயற்சிக்கிறேன். இன்னும் எவ்வளவு நாள் விளையாட முடியுமோ, விளையாடிக் கொண்டே இருப்பேன். தினமும் காலை ஒரு மணி நேரம் உடற்பயிற்சி, நடைப் பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, மாணவர்களுக்கு கைப் பந்து விளையாட்டுப் பயிற்சி ஆகியவையே, என் இளமை ரகசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக