சொல்கிறார்கள்
ஆங்கிலப் பேச்சாற்றலில்,
சர்வதேச அளவில், தங்க விருது பெற்ற தமிழ்ப் பெண், ஸ்ருதி: லண்டன்,
"கேம்ப்ரிட்ஜ்' பல்கலைக் கழகம் சர்வதேச அளவில் நடத்திய போட்டி அது. ஒன்றரை
ஆண்டுகளுக்கு முன், போட்டிக்கான நடைமுறைகள் துவங்கி விட்டன. அதன்படி, உலகம்
முழுவதும் ஒவ்வொரு துறையிலும், ஆங்கிலத்தின் ஆதிக்கம், தொடர்பு மொழியாக
அதன் விரிந்த பயன்பாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, சென்னையில், "டெஸ்ட்'
எழுதினேன்.இப்படி அடுத்தடுத்த நிலையில் நிறைய தேர்வுகள். அனைத்து
தேர்வுகளிலும், பாசான பிறகு, லண்டனில் இறுதித் தேர்வு நடந்தது. உலகம்
முழுவதுமிருந்து, 100 பேர் கலந்து கொண்டனர். ஆங்கிலத்தை, "ஸ்டைலாக'
பேசுவது, வேகம், உச்சரிப்பு என, போட்டியின் விதிமுறைகளில் கடுமை அதிகம்.
முதலில், கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். நான், மக்கள் தொடர்புத்
துறையில் (பி.ஆர்.,), முதுகலை முடித்துள்ளேன். அதனால், அந்தத் துறையில்,
தொடர்பு மொழியாக, ஆங்கிலத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதை விளக்கக்
கூறினர். என்னோடு, ஆசிய, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களும்
போட்டியிட்டனர். நடுவராக, "கேம்ப்ரிட்ஜ்' பல்கலையின் ஆங்கிலப் பேராசிரியர்
சைமன் ரைட் அமர்ந்திருந்தார். பேசி முடித்து, நான் மேடையை விட்டுக் கீழே
இறங்கிய போது, கைதட்டி ரசித்தவர், என் அருகே வந்து, "எக்சலென்ட்' என்று
தட்டிக் கொடுத்தார். இது, மிகப்பெரிய கவுரவம். அப்போதே, என் வெற்றி
உறுதியாகி விட்டது. இங்கிலாந்தில் உள்ள பத்திரிகைகள், "ஆசிய நாடுகளின்
மிகச் சிறந்த இளம் ஆங்கிலப் பேச்சாளர்' என, எனக்கு முக்கியத்துவம் கொடுத்து
செய்தி வெளியிட்டிருந்தன. உலகப் புகழ் பெற்ற, "லண்டன் ஸ்கூல் ஆப் பிசினஸ்'
நிறுவனத்தில், எம்.பி.ஏ., படிக்க வேண்டும் என்ற என் கனவும், இந்தப்
போட்டியின் மூலம் நிறைவேறி இருக்கிறது. இதற்கு, "கேம்ப்ரிட்ஜ்' பல்கலையே
ஸ்பான்சரும் செய்கிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக