இலங்கைக்கு நவநீதம் பிள்ளை இன்று திடீர் எச்சரிக்கை
திரு
பதிவு செய்த நாள் : 24/03/2012இலங்கைக்கு நவநீதம் பிள்ளை இன்று திடீர் எச்சரிக்கை
மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை நேற்று நிறைவேற்றப்பட்டதன் பின்னர் இலங்கை மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கைகள் இடம்பெறக்கூடாதென ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை எச்சரித்துள்ளார்.
விவாதத்தில் பங்குகொள்ள வந்திருந்த இலங்கை மனித உரிமைகள் ஆர்வலர்களுக்கு மனித உரிமைகள் மன்றத்தின் அமர்வின்போது முன்னொருபோதும் இல்லாத வகையில், மிரட்டல்கள், பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும் தொல்லைகள் கொடுக்கப்பட்டதாகவும் இதற்கு 71 அங்கத்தவர்களைக் கொண்ட இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவின் அங்கத்தவர்கள் உட்பட பலர் காரணமாக இருந்ததாகவும் நவநீதம் பிள்ளையை மேற்கோள்காட்டி அவரின் பேச்சாளர் றுப்பேட் கொல்வின் கூறினார்.
ஜெனீவாவை சூழவுள்ள பகுதிகளில் சிவில்சமூக செயற்பாட்டாளர்களுக்கு தொல்லைக்கள் கொடுக்கப்பட்டதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் ஜெனீவாவிலுள்ள இலங்கைத் தூதுக்குழுவினருக்கு அனாமதேய மிரட்டில் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதை பொலிஸாரும் ஐ.நா. பாதுகாப்;பு சேவையும் ஆராய்ந்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக