செவ்வாய், 20 மார்ச், 2012

Kalaiganar's hunger strike ends before begins

அன்று 3 மணி நேரம்.. இன்று ஆரம்பிக்கும் முன்பே முடிந்து போன கருணாநிதியின் உண்ணாவிரதம்!

http://www.uyarvu.com/index.php?option=com_content&view=article&id=15778:-3---------&catid=43:normal-news&Itemid=18

திங்கட்கிழமை, 19 மார்ச் 2012 11:51 அன்று வெறும் 3 மணி நேரம் மட்டுமே உண்ணாவிரதம் இருந்து ஈழப் போரையே 'நிறுத்தினார்' திமுக தலைவர் கருணாநிதி. ஆனால் இன்று உண்ணாவிரதம் இருப்பதாக அறிவிப்பை மட்டும் வெளியிட்டு விட்டு, அதைத் தொடங்காமலேயே ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டு வரப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை 'வெல்ல வழி வகுத்து விட்டார்' கருணாநிதி.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்பதை சுற்றி வளைத்து மூக்கைத் தொடுவது போல பிரதமர் மன்மோகன் சிங் பேசிய நிலையில், உடனடியாக தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்துவதாகவும், உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்திற்கு அவசியமில்லை என்றும், பிரதமரின் அறிவிப்பு ஈழப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்றும் அதிரடியாக பேசியுள்ளார் கருணாநிதி.

முன்னதாக இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கருணாநிதி தலைமையில் 22ம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பை திமுக தலைமை வெளியிட்டது. மார்ச் 22ம் தேதி தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் உண்ணாவிரதம் நடைபெறும். இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறும் என்று முன்னதாக திமுக தலைமை இன்று காலை அறிவித்திருந்தது.

அண்ணா அறிவாலயம் வளாகத்தில் கருணாநிதி உண்ணாவிரதம் இருப்பார். மாவட்டத் தலைநகரங்கள், வட்டத் தலைநகர்களில் கட்சியினர் உண்ணாவிரதம் இருப்பார்கள் என்றும் அது கூறியிருந்தது.

இந்த நிலையில்தான் லோக்சபாவில், பிரதமர் இதுதொடர்பாக விளக்கம் அளித்துப் பேசினார். இதை திமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளார். அவரது பேச்சு திருப்தி தருவதாகவும், வெற்றி என்றும் கூறி தனது போராட்டத்தையும், உயர் நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தையும் சேர்த்து கைவிட்டு விட்டது திமுக.
  • கருணாநிதியின் முந்தைய உண்ணாவிரதம்
ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்த கடைசி நாட்களில், இப்படித்தான் கருணாநிதி ஒரு உண்ணாவிரதத்தை அறிவித்து மெரீனா பீச்சில் போய் படுத்தார். வெறும் 3 மணி நேரமே அந்த உண்ணாவிரதம் நீடித்தது.

காலையில் வாக்கிங் போனவர் நேராக பீச்சுக்குப் போய் கட்டிலில் படுத்து விட்டார். கூடவே மனைவி தயாளு அம்மையார், துணைவி ராசாத்தி அம்மையார், மகள் கனிமொழி, திமுக தலைவர்கள் என தடபுடலாக தொடங்கியது போராட்டம்.

ஆனால் 3 மணி நேரத்திலேயே போராட்டத்தை முடித்து விட்டார்கள். மத்திய அரசு ராஜபக்சேவிடம் நேரடியாகப் பேசி விட்டது. போர் நிறுத்தப்பட்டு விட்டது. குண்டு வீச்சு நின்று விட்டது. தமிழர்கள் அத்தனை பேரும் பத்திரமாக உள்ளனர் என்று கூறி பேட்டியளித்து விட்டு கிளம்பிப் போனார் கருணாநிதி.

ஆனால் அதற்குப் பிறகுதான் போரற்ற பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தஞ்சமடைந்த பல ஆயிரம் அப்பாவித் தமிழர்களை சிங்களப் படையினர் கொத்து குண்டுகளை வீசி கொடூரமாகக் கொன்று குவித்தனர் என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் இப்போதும் ஒரு உண்ணாவிரதத்தை அறிவித்து அதை தொடங்கக் கூட வாய்ப்பில்லாமல் முடித்தும் விட்டது திமுக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக