சனி, 24 மார்ச், 2012

ambition is wonஇலட்சியம் வென்றுவிட்டது!

சொல்கிறார்கள்                                                                                                                               

இலட்சியம் வென்றுவிட்டது!


  மலைவாழ் பெண்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக உள்ள சுசீலா: தூத்துக்குடி மாவட்டம் தான் என் சொந்த ஊர். என் அப்பா கிராம முனிசீப்பாக பணியாற்றியதால், சிறுவயதிலேயே திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காட்டிற்கு வந்துவிட்டோம். என் தந்தை, பெண்கள் சுதந்திரமாகச் செயல்படவேண்டும் என்ற முற்போக்குச் சிந்தனையைக் கொண்டிருந்ததால், அந்தக் காலத்திலேயே என்னை, பி.எஸ்சி., நர்சிங் படிக்க வைத்தார். படிப்பு முடித்த பின், களக்காடு மலைவாழ் மக்களுக்காக, அடிப்படை சுகாதாரப் பணிகளை இலவசமாகச் செய்தேன். இங்குள்ள பெண்கள், பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டிருந்ததால், அவர்களுக்கு நோய்த் தொற்று அதிக அளவில் இருந்தது. இந்தப் பெண்களுக்கு, மாற்றுத் தொழிலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று முடிவெடுத்தேன். "காஸ்ட்' என்ற அமைப்பை உருவாக்கி, பீடி சுற்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். என் விடாமுயற்சியால், படிப்படியாக பீடி சுற்றும் தொழிலிலிருந்து, அப்பெண்கள் விடுபட்டனர். மாவட்டத் தொழில் துறை அலுவலகம் மூலம், கைத் தொழில்களைப் பற்றிக் கேட்டறிந்தேன். கேரளாவில் வாழை மற்றும் கற்றாழை நாரிலிருந்து, உபயோகமுள்ள பல பொருட்களை, பெண்களே செய்கின்றனர் என்று கேள்விப்பட்டேன். ஐந்து பெண்களுடன், நானும், அங்கு சென்று, கைவினைப் பொருட்கள் செய்வது குறித்து, பல தொழில்நுட்பங்களைக் கற்றேன். கேரளாவில் பயிற்சி பெற்ற பெண்களைக் கொண்டு, மற்ற பெண்களுக்கும் பயிற்சி கொடுத்தேன். கற்றாழை நாரிலிருந்து, நூல், பேன்சி பொம்மைகள், பெண்கள் பயன்படுத்தும் பேக், குளிக்கும் பஞ்சு என, பல கைவினைப் பொருட்களை இப்பெண்கள் செய்கின்றனர். மலைவாழ் மகளிர் முன்னேற்றத்திற்காக, 10 பெண்களுடன் ஆரம்பித்த இந்நிறுவனத்தில், தற்போது, 400க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர். மலைவாழ் மக்களை முன்னேற்ற வேண்டும் என்ற என் லட்சியம், இன்று வென்றுவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக