வெள்ளி, 23 மார்ச், 2012

Can achieve on a large scale!

 சொல்கிறார்கள்



மிஸ்டர்ஆணழகன்!"மிஸ்டர் இந்தியா' உட்பட பல ஆணழகன் விருதுகளைப் பெற்றுள்ள முனுசாமி: சின்ன வயதில் அர்னால்டு நடித்த படப் போஸ்டரை ஒருநாள் பார்த்த போது, இப்படியும் ஒருத்தர் இருக்க முடியுமா என்று ஆச்சர்யம். எனக்கும் அதே போல் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில், அன்றே ஜிம்மிற்குப் போனேன். அங்கு, என்னை கிண்டலடித்து அனுப்பி விட்டனர். பின், வீட்டிற்கு அருகிலேயே உள்ள நகராட்சிப் பூங்காவில், உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களைப் பார்த்து, நானே பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். என் உடம்பும் படிப்படியாக வடிவத்திற்கு வந்தது.

கடந்த, 2004ல் திருப்பூரில் நடந்த, "மிஸ்டர் தமிழ்நாடு' போட்டியைப் பார்த்ததும், "பாடி பில்டிங்' ஆர்வம், வெறியாக மாறிவிட்டது. அன்றிலிருந்து தீவிர உடற்பயிற்சியில் இறங்கி விட்டேன். குன்னூரில், "மிஸ்டர் நீலகிரி' போட்டி நடக்கப் போவதை அறிந்து, அதில் பங்கேற்றேன். அந்தப் போட்டியில் எனக்கு மூன்றாவது இடம் கிடைத்தது. 13 வயதில் எனக்கு கிடைத்த அந்த வெற்றி, பெரிய நம்பிக்கையைத் தந்தது. என்னை கேலி செய்தவர்கள், தங்களின் ஜிம்மில் சேரச் சொல்லி பயிற்சி அளித்தனர். அதன் பின், "மிஸ்டர் நீலகிரி' முதல், "மிஸ்டர் இந்தியா' வரை ஏகப்பட்டப் பட்டங்கள் வாங்கியாச்சு.

கடந்த, 2006ல் சென்னைக்கு வந்தேன். வறுமையும், பாடி பில்டிங் ஆர்வமும், என்னைப் படிக்க விடவில்லை; பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். பிளம்பிங், கட்டட வேலை, ஓட்டல் சர்வர் என்று பல வேலைகளைப் பார்த்து சமாளித்தேன். ஒரு போட்டியில், என்னைப் பார்த்த முன்னாள் மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற, அரசு சார் தான், தன் ஜிம்மில் வேலை கொடுத்து நிறைய உதவிகளும் செய்கிறார்.சில போட்டிகளில் சிறப்புத் தோற்றம் காட்டச் சொல்லி, நேபாளம், சிங்கப்பூர் என்று பல நாடுகளுக்குப் போயிருக்கிறேன். என் அடுத்த கனவு, மிஸ்டர் ஆசியா, மிஸ்டர் உலகம் தான். ஆணழகன் போட்டிக்கும் நல்ல ஸ்பான்சர்ஸ் கிடைத்தால், கண்டிப்பாக பெரிய அளவில் சாதிக்க முடியும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக