மக்கள் பேரணிக்கு ஆதரவாக மனித உரிமைகளுக்கான கனடிய தமிழ் முதியோர்களும் குரல்
26 March 2012 No Comment

ஐநா மனித உரிமைச் சபையில் இலங்கை சிங்கள ஆட்சியாளர்களினால் தமிழ் மக்களுக்கெதிராகப் புரியப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித இனத்திற்கெதிராகச் செய்யப்பட்ட குற்றங்களுக்கெதிராக ஐநா மனிதஉரிமைச் சபையில் இலங்கைக்கெதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அடிநாதமாக முந்நின்று செயற்பட்ட எங்களின் கனடிய அரசிற்கும்இ சென்ற ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தில் இலங்கையின் படுகொலைகளுக்கெதிராக தனியொரு தலைவராகத் துணிந்து நின்று எதிர்த்துக் குரல்கொடுத்த எங்களின் கனடியப் பிரதமர் மாண்புமிகு இசுரீபன் காப்பர் அவர்களுக்கும் நன்றிதெரிவித்து நடைபெறவிருக்கும் இப்பேரணியில் கனடாவாழ் தமிழ் மக்கள் அனைவரும் பெருமளவில் கலந்துகொள்வதோடுஇ மனிதாபிமான முறையில் ஆதரவளித்த அத்தனை நாடுகளுக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக்கொள்வதினூடாக மென்மேலும் உலக அரங்கில் எம்மினத்தின் விடிவை நோக்கிய பயணத்திற்கு உலகநாடுகளின் ஆதரவினைத் தொடர்ந்து பெறுவதற்கு உறுதுணையாகவிருக்குமென நாங்கள் ஆணித்தரமாக நம்புகின்றோம்.எனவே நடைபெறுகின்ற பேரணியில் கனடா வாழ் தமிழ் மக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளவேண்டுமென மனித உரிமைகளுக்கான கனடிய தமிழ் முதியோர் அமைப்பானது வேண்டிநிற்கிறது
- World Tamils.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக