உலகம் முழுதும் சனிக்கிழமையன்று இணையத் தளத்தை முடக்க சதி:
திரு
பதிவு செய்த நாள் : 31/03/2012உலகம் முழுதும் சனிக்கிழமையன்று இணையதளத்தை முடக்க சதி: இன்டர்போல் எச்சரிக்கை
- தினமணி First Published : 30 Mar 2012 10:32:08 PM IST
புது தில்லி, மார்ச் 30: உலகம் முழுவதும் இண்டர்நெட் சேவையை சனிக்கிழமை முடக்க சமூக விரோதிகள் (சைபர் கிரிமினல்) சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என்று இண்டர்போல் – சர்வதேச போலீஸ் அமைப்பின் செக்ரட்டரி ஜெனரல் ரொனால்டு கே. நோபல் எச்சரித்தார். சி.பி.ஐ. (மத்திய புலனாய்வுத் துறை) இயக்குநராகப் பணியாற்றிய டி.பி. கோலியின் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சி தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.அதில் சிறப்பு விருந்தினராக இண்டர்போல் அமைப்பின் செக்ரட்டரி ஜெனரல் ரோனால்டு கே. நோபல் கலந்து கொண்டார். “ஆபரேஷன் அன்மாஸ்க்’ என்ற பெயரில் அவர் ஆற்றிய உரை:இணையதளங்களில் “அனானிமஸ்’ (அநாமதேயம்) என்ற பெயருடன் ஒருவித தாக்குதலை நடத்த சர்வதேச சைபர் குற்றவாளிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக என்னை எச்சரித்தும் மின்னஞ்சல்கள் வந்துள்ளன. இண்டர்போலுக்கு சவால் விடும் வகையில் எனது தந்தை குறித்த விவரங்கள், வீட்டு தொலைபேசி எண் போன்றவற்றையும் அவர்கள் இணையம் வாயிலாக இடைமறித்து இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர். அவர்களின் நோக்கம் உலகம் முழுவதும் இண்டர்நெட் சேவையை அரை நாளாவது முடக்க வேண்டும். அதன் மூலம் உலக நாடுகளுக்கு இழப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் இலக்கு வைத்துள்ள நாள் மார்ச் 31, 2012.யார், எவர் இந்த சதி வேலையில் ஈடுபடுகிறார்கள் என்று சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. சர்வதேச அளவில் உள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி குற்றவாளிகளைத் தேடி வருகிறோம். இந்தக் குழுக்கள் கொலம்பியா, சிலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளன. இதையடுத்து சந்தேகத்துக்கு இடமளிக்கும் 31 பேர் உலகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், “”ஆப்பரேஷன் பிளாக் அவுட்” என்ற பெயரில் உலகம் முழுவதும் இணையம் வாயிலாகத் தாக்குதல் நடத்தி இண்டர்நெட் சேவையை முடக்க முயற்சியினை மேற்கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக