சொல்கிறார்கள்
வினோதமான நோயினால், பாதிக்கப்பட்டுள்ள ஸ்மிதா: கல்லூரி வரை, வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருந்தது. திடீரென்று ஒரு நாள், கல்லூரியில் மயங்கி விழுந்து விட்டேன்; உடலை கொஞ்சமும் அசைக்க முடியவில்லை. சிலர் ஓடி வந்து என்னை தூக்கி நிறுத்தினர். உடம்பில் தெம்பே இல்லாமல், வாழைத் தண்டு போல் வழுக்கி வழுக்கி கீழே சரிந்தேன்.அதன் பின், இரண்டு ஆண்டுகள் படுத்த படுக்கையாகக் கிடந்தேன். உடல் அசைவுக்குக் கூட, அடுத்தவர் உதவியில்லாமல், செய்ய முடியாத நிலைமை இருந்தது. சில நல்ல உள்ளங்கள் உதவியால், நிமிர்ந்து உட்கார்ந்தேன். என்னால் சில நிமிடங்களுக்கு மேல் பேசவும் முடியாது, நிற்கவும் முடியாது."மல்டிபிள் செலக்ட்ரோசிஸ்' என்ற வியாதியால், மரண அவஸ்தைப் படுகிறேன். ஹீமோகுளோபின் குறைபாடும் உள்ளது. இவற்றை குணப்படுத்த, வாரத்திற்கு, 9,279 ரூபாய் செலவழித்து ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், பழையபடி படுக்கைக்கு திரும்ப வேண்டியது தான். என் உடல் பிரச்னையை உணர்ந்த வீட்டு உரிமையாளர், 8,000 ரூபாய் வீட்டை, 4,000 ரூபாய்க்கு குறைத்துக் கொடுத்திருக்கிறார்.என் இந்த நோயை ஓரளவிற்கு குணப்படுத்த, "இண்டர்பிரோன் பீட்டா ஏ' என்ற மருந்தை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் இடைஞ்சல் வந்தால், வாழ்வே இருண்டு விடும். ஆண்டிற்கு, 52 மருந்துக் குப்பிகள் தேவைப்படும். ஒன்றின் விலை 10 ஆயிரம் ரூபாய். வாழ்நாள் முழுவதும் என் குடும்பத்தால், என் வியாதிக்கு வைத்தியம் பார்ப்பது சிரமம்.என்னால் கல்லூரிக்கு செல்ல முடியாவிட்டாலும், வீட்டில் இருந்தபடியே, எம்.பில்., வரை படித்திருக்கிறேன். என் திறமைகளைப் பயன்படுத்தி, என் நோய்க்கான மருந்துகளை வாங்கும் அளவிற்காவது ஒரு நல்ல வேலை, இரக்கமுள்ள மனிதர்கள் சிலரின் உதவி, இவை கிடைத்தால், என் வாழ்வில் கொஞ்சமேனும் விடிவு காலம் பிறக்கும்.
உதவி செய்ய: 98400 87540
- தினமலர்
அன்புடையீர், எல்லோரும் ஆங்கில மருத்துவத்திலேயே உழன்றுகொண்டிருக்கிறார்கள்.இங்கு என் நண்பர் ஒருவருக்கும் மேற்கண்ட நிலை நிகழ்ந்தது.அவர் ஆங்கில மருத்துவப்பட்டம் பெற்றவ்ர்(MBBS).அவர் ஒல்லியல் மருத்துவத்தில்(Homeopathy)நல்ம் பெற்றார்.தகவல் அறிய, உறுதிசெய்ய தொடர்பு:விடிவெள்ளி ஒல்லியல்(Homeopathy) மருத்துவமனை, தருவை,நெல்லை, 0462-2353699.இதுவும் ஓர் உதவிதான். அன்பன் மீ.கணேசன்.
பதிலளிநீக்கு