ஞாயிறு, 25 மார்ச், 2012

சொல்கிறார்கள்                                                                                                                                

"மன நிறைவைத்தருகிறது!': ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்து, படிக்க வைக்கும் வினோத்: சிறு வயதில் நான் வளர்ந்த சூழ்நிலை தான், எனக்குள் சேவை மனப்பான்மையை ஏற்படுத்தியது. நான் சிறுவனாக இருக்கும் போதே, என் பெற்றோர் இறந்துவிட்டனர். பாட்டி தான் எனக்கு ஆதரவளித்து, படிக்க வைத்தார்.அன்பு காட்டவோ, ஆதரவு காட்டவோ யாருமில்லாத நிலையில், கஷ்டப்பட்டுத்தான், பி.ஏ., அரசியல் அறிவியல் படித்தேன். எனவே, படிப்பின் அருமை எனக்கு தெரியும். நான் படித்த படிப்பிற்கு அன்று வேலை கிடைக்கவில்லை. அதனால், டிரைவர் வேலைக்குச் செல்கிறேன்.ஆதரவற்ற குழந்தைகளுக்கான என் குருகுலத்தில், மொத்தம், 30 குழந்தைகள் உள்ளனர். ஆதரவற்றவர் என்ற ஒரு காரணத்திற்காக, யாருடைய உரிமைகளும் மறுக்கப்படக் கூடாது என்று நினைத்துத் தான், இக்குழந்தைகளைப் படிக்க வைக்கிறேன். இங்குள்ள அனைத்துக் குழந்தைகளும், அரசுப் பள்ளியில் தான் படிக்கின்றனர். பள்ளியே சீருடை, புத்தகம் அனைத்தையும் கொடுத்து விடுவதால், மற்ற செலவுகளை நான் கவனித்துக் கொள்கிறேன். நல்ல மனம் படைத்த நண்பர்களும், பணம் கொடுத்து உதவுகின்றனர். சிலர், தங்கள் பிறந்த நாள், திருமண நாள் போன்ற விசேஷ தினங்களை, எங்கள் குழந்தைகளுடன் கொண்டாட ஆசைப்பட்டு, இங்கு வருகின்றனர். குழந்தைகளுக்குத் தேவையான நோட்டுப் புத்தகங்கள் வாங்கித் தருவர் அல்லது உணவுக்கான பொருட்களை வாங்கித் தருகின்றனர்.என் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் உருவானது தான் குருகுலம் என்றாலும், அதைத் தொடர்ந்து நடத்த உதவியாய் இருப்பது, பல நல்ல உள்ளங்கள் தான்.இங்குள்ள குழந்தைகள், படிப்பில் மட்டுமல்லாமல், மற்ற திறமைகளிலும் ஜொலிக்கின்றனர். பெரிய பிள்ளைகள், சிறியவர்களுக்குப் பாடம் சொல்லித் தருகின்றனர். ஒருவருக்கொருவர் அன்பாக இருக்கின்றனர். தாங்கள், ஆதரவற்றவர்கள் என்ற நினைப்பே இல்லாமல் வளர்கின்றனர். அதுவே, எனக்கு மன நிறைவைத் தருகிறது.தொடர்புக்கு: 98402 -78981

"குழந்தையின்மைக்கும் தீர்வு உண்டு!' : 
 அக்குபஞ்சர் மருத்துவர் ரமா வெங்கட்ராமன்: வலியைப் போக்கும் ஒரு வலியில்லாத சிகிச்சை முறைதான் அக்குபஞ்சர். தலைவலி, முதுகுவலி, தோள்பட்டை வலி என இப்படி பலதரப்பட்ட வலிகளுக்கும் உடனடி நிவாரணத்தை அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கிறது. எக்ஸ்ரேவோ, ரத்தப் பரிசோதனையோ எடுக்காமல், வலியிலிருந்து விடுதலை கிடைத்து விடுகிறது.பொதுவாக ஒருவருக்கு, மஞ்சள் காமாலை நோய் இருக்கிறதா எனக் கண்டறிய, கண்களைத்தான் பார்ப்போம். ஒருவரின் கண்களைக் கட்டுப்படுத்துவது அவர்களின் கல்லீரல் பகுதிதான். கண்களில் கோளாறுடன் வருபவர்களுக்கு, கல்லீரல் பகுதியில் உள்ள பாயின்ட்களைச் சீர் செய்து விட்டாலே, தானாகவே அவர்களின் கண்கள் சீராகி விடும்.அதேபோலத்தான் மூளையை இதயம் கட்டுப்படுத்துகிறது. ஒருவர் மனச்சோர்வுடன் இருக்கும் போது, அவரின் இதயத்தில் உள்ள நாடியின் சக்தியை அதிகப்படுத்தினால், மனச் சோர்வுக்குத் தீர்வு கிடைக்கும். அதேபோல், மனப் பதற்றம் உடையவர்களுக்கு, அவர்களின் இதயப் பகுதியில், உள்ள நாடியின் சக்தியைக் குறைத்தால், மனப் பதற்றம் குறையும். நம் காது மடலில், உடலில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் பாயின்ட்கள் உள்ளன.முதுகில் வலி ஏற்பட்டால், காது மடலில் உள்ள குறிப்பிட்ட ஆற்றல் புள்ளிகளை ஊசி மூலம், குத்தினாலோ அல்லது மசாஜ் செய்தாலோ போதும்; வலி நிவாரணம் என்பது கட்டாயம் கிடைக்கும்.இந்த அக்குபஞ்சர் மூலம், குழந்தையின்மைக்கும் தீர்வு உண்டு. நம் கிட்னியில் உள்ள புள்ளிகள் தான் குழந்தைப் பேறுக்கான சக்தியைக் கொடுத்து கட்டுப்படுத்துகிறது. குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகளின் சிறு நீரகப் பகுதிக்கு, அக்குபஞ்சர் வழியாக வீரியம் கொடுத்தால், குழந்தைப் பேறு கிடைக்கும். 45 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரம் ஒருவருக்கு, அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.மருந்து, மாத்திரை இல்லாமல், ஒருவரின் பிராண சக்தியைச் சீர் செய்து, நாடியில் உள்ள பிளாக்குளை நீக்கி விடுகிறது அக்குபஞ்சர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக