சொல்கிறார்கள்
வேளாண் ஆம்புலன்ஸ் வேளாண் உதவூர்தி
விவசாயத்துக்கு உதவும் ஆம்புலன்ஸ் சேவையை துவக்கிய பட்டயக் கணக்காளர் ஸ்ரீஹரி கோட்டேலா: விவசாயத்தை லாபகரமானதாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், வட வங்காளத்தில் உள்ள ஆச்சார்யா என்.ஜி., ரங்கா விவசாய பல்கலைக் கழகத்துடன் இணைந்து, இந்த ஆம்புலன்ஸ் சேவையைத் துவக்கினேன். பருத்திச் செடிக்கு இந்த பருவத்தில் என்ன மருந்து தெளிக்கலாம்? இந்த நிலத்தில் எதை விதைத்தால் மகசூல் நன்றாக இருக்கும்; எவ்வளவு நீர் பாய்ச்சினாலும் நெற்பயிர் கருகுகிறது என்ன செய்ய? இப்படி, வேளாண்மை தொடர்பாக எந்த சந்தேகமாக இருந்தாலும், "208' என்ற எண்ணுக்கு போன் செய்தால் போதும், உடனே நிலம் தேடி வரும், "விவசாய ஆம்புலன்ஸ். 'இந்த ரதத்துக்கு, "ரைத்து ரதம்' என பெயர் சூட்டினேன். விவசாயத்திற்கு முக்கியம் என கருதும் மண் பரிசோதனை கருவிகள், ஸ்பிரேயர்கள், எல்.சி.டி., புரஜெக்டர், கம்ப்யூட்டர், பயிற்சி வீடியோக்கள் என்று, வேளாண் தொடர்பான அனைத்து விஷயங்களும் இந்த வாகனத்தில் உள்ளன.எப்படி விவசாயம் செய்தால் லாபகரமாக செய்யலாம், அந்த பகுதியில் என்ன பயிர் செய்யலாம் என்பன போன்ற, விவசாயிகளுக்குத் தேவையான விஷயங்களை நேரடியாக சென்று விளக்குகிறோம்.விவசாயம் பற்றிய விழிப்புணர்வு, ஆர்வத்தையும் ஏற்படுத்த, "208' ஆம்புலன்ஸ் சேவையை நடத்தி வருகிறேன். தற்போது, ஒரு ஆம்புலன்ஸ் தான் உள்ளது. இதன் எண்ணிக்கையை, 20க்கும் மேல் அதிகரித்து, ஆந்திர மாநிலம் முழுவதும், விவசாயிகளிடம் ஆர்வத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். அழைப்பு இல்லாத நேரங்களிலும் ஆம்புலன்ஸ் சும்மா ஓய்ந்திருப்பதில்லை. கிராமம் கிராமமாகச் சென்று, மரத்தடியில் கூடும் விவசாயிகள் நடுவே, விவசாயத்தில் ஏற்பட்டுள்ள நவீனம் உட்பட அனைத்தையும் எடுத்துரைக்கிறோம். இதற்கென இலவச சேவை எண்:1800 2666 208; இணையதள முகவரி: www.Efreshindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக