First Published : 21 Sep 2011 02:08:03 AM IST

அமர்காந்த், ஸ்ரீலால் சுக்லா, சந்திரசேகர் கம்பாரா
புதுதில்லி, செப். 20:புகழ்பெற்ற ஹிந்தி எழுத்தாளர்களான அமர்காந்த், ஸ்ரீலால் சுக்லா ஆகியோர் 2009-ம் ஆண்டுக்கான, இலக்கியத்துக்கான மிக உயர்ந்த விருதான ஞானபீட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம், 2010-ம் ஆண்டுக்கான ஞானபீட விருதினை கன்னட இலக்கியவாதியான சந்திரசேகர் கம்பாரா பெறுகிறார். இதற்கான அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. சிறந்த எழுத்தாளரும் ஞானபீட விருது பெற்றவருமான டாக்டர் சீதாகாந்த் மஹாபத்ரா தலைமையில் கூடிய தேர்வுக் குழு 45 மற்றும் 46வது ஞானபீடவிருதுக்குரியவர்களைத் தேர்வு செய்தது. 86 வயதாகும் அமர்காந்த் ஒரு புகழ்பெற்ற நாவலாசிரியர் ஆவார். அவர் எழுதிய நாவலுக்கு 2007-ம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. இவரது பல சிறுகதைகள் பல பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் 1925-ல் பிறந்த சுக்லா, சாகித்ய அகாதெமி மற்றும் வியாஸ் சம்மான், பத்மபூஷன் விருதுகளை பெற்றவர். 74 வயதாகும் கம்பாரா சாகித்ய அகாதெமி, சங்கீத நாடக அகாதெமி விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக