தேசியத் தலைவரின் மாமியார் சின்னம்மா காலமானார்
18 September, 2011 by admin
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் மாமியாரும், திருமதி. மதிவதனி பிரபாகரன் அவர்களின் தாயாருமான திருமதி. ஏரம்பு சின்னமா அவர்கள் காலமானார்.சரவணையைப் பிறப்பிடமஅகவும் புங்குடுதீவை வசிப்பிடமஅகவும் கொண்ட திருமதி. ஏரம்பு சின்னம்மா அவர்கள் அண்மைக்காலமாக நோய்வாய்ப் பட்டிருந்தார். இவர் கடந்த 06-09-2011 செவ்வாய்கிழமை காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் திருமதி. அருணாதேவி குமாரதாஸ் (லண்டன்), சிறீதரன் (டென்மார்க்), திருமதி. மதிவதனி பிரபாகரன் (தமிழீழம்), மாவீரரான பாலச்சந்திரன் ஏரம்பு (கப்டன் அருண்)ஆகியோரின் தாயாரும், திரு. குமாரதாஸ் (டென்மார்க்), தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் (தமிழீழம்), திருமதி. சாந்தினி சிறீதரன் ஆகியோரின் மாமியாரும், பூர்னிமா (டென்மார்க்), வித்யா அனஸ் (டென்மார்க்), இந்துமதி (டென்மார்க்), அருணன் (டென்மார்க்), சந்துஜா (டென்மார்க்), சாள்ஸ் அன்ரனி (தமிழீழம், துவாரகா (தமிழீழம்), பாலச்சந்திரன் (தமிழீழம்) ஆகியோரின் பாட்டியும், நீலனின் பூட்டியும் ஆவார்.
மிகத்துயரமான செய்தி. தன் மருமகனையும் அவர் வழியில் குடும்பத்தாரையும் நாட்டு விடுதலைக்கு அளித்த அன்னை மறைவு அனைவருக்கும் வருத்தமான செய்தி.பெருமாட்டியைப் பிரிந்து வாடும் அனைவருக்கும் ஆறுதல்கள். துயரத்தில் பங்கேற்கும் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி ! தமிழா விழி/எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
பதிலளிநீக்கு