புதன், 21 செப்டம்பர், 2011

ban to rajapakshe to go out of New YOrk: நியுயார்க்கைவிட்டு வெளியே செல்லஇராசபட்சவுக்குத் தடை?

நியுயார்க்கைவிட்டு வெளியே செல்ல ராஜபட்சவுக்கு தடை?

First Published : 21 Sep 2011 11:29:49 AM IST


நியுயார்க், செப்.21: ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள இலங்கை அதிபர் ராஜபட்சவை நியுயார்க் நகரைவிட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று அமெரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக ஆங்கில இணைய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.நியுயார்க் நகருக்கு வெளியில் ஏனைய மாநிலங்களுக்குச் செல்வதால், போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படக் கூடும் என்பதாலேயே இலங்கை அதிபரை அங்கிருந்து வெளியே செல்ல வேண்டாம் என்று அமெரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு நியுயார்க்கில் மட்டுமே அதிகாரப்பூர்வ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.இலங்கை அதிபர் ராஜபட்ச தனது உறவினர்களை சந்திப்பதற்கும், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவும், அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.அமெரிக்க அதிகாரிகளின் ஆலோசனையினால் அவரது திட்டங்கள் கைவிடப்பட்டு நியுயார்க்கில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகத்தின் செய்தி தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக