பக்சேவிற்கு மட்டும் அல்லாமல் இனப்படுகொலைபுரிந்த, இனப் படுகொலைக்க உதவிய அனைத்து நாட்டுக் குற்றவாளிகளுக்கும் பொதுமக்கள் முன்னிலையில் மாறுகால், மாறுகை வாங்கி, மரணத் தண்டனை அளிக்க வேண்டும். இதன் மூலம் எந்த நாட்டு ஆட்சியும் எந்த மக்களுக்கு எதிராகவும் படுகொலை புரியும் எண்ணத்திற்கு வராமல் தடு்க்க வேண்டும். மக்கள் படுகொலையாளர்கள் மடிய விரும்பும் இலக்குவனார் திருவள்ளுவன்
வாஷிங்டன், ஜன.29: இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு எதிராக வாஷிங்டன் நகர நீதிமன்றத்தில் தமிழர் குழு வழக்குப் பதிவு செய்துள்ளது. தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் ஓராண்டுக்கும் மேலாக நடத்திய இனப் படுகொலையைக் கண்டித்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு நஷ்ட ஈடாக 3 கோடி டாலர் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பு (டிஏஜி) என்ற அமைப்பு சார்பில் வாஷிங்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் புரூஸ் வெய்ன், கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார். ராஜபட்ச மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கவில்லையெனில் தன்னிச்சையான தீர்ப்பு அளிக்கப்பட்டுவிடும் என்று வழக்கறிஞர் வெய்ன் குறிப்பிட்டார். சமீபத்தில் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு வந்திருந்தார் இலங்கை அதிபர் ராஜபட்ச. அவர் மீது மனித துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரில் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5 பேர் திரிகோணமலையிலும், ஏசிஎப் அமைப்பைச் சேர்ந்த 17 பேர் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் கொல்லப்பட்டனர். இதற்கு இழப்பீடாக 3 கோடி டாலர் வழங்க வேண்டும் என டிஏஜி அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. போர்க்குற்றவாளியான மஹிந்தா ராஜபட்சவை அமெரிக்காவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று தமிழர் அமைப்புகள் குரல் கொடுத்தன. ஆனால் மருத்துவ சிகிச்சைக்கு வந்து எவ்வித பதிலும் சொல்லாமல் சென்றுவிட்டார் ராஜபட்ச. மனித உரிமை மதிக்கப்படும் அமெரிக்காவுக்கு போர் குற்றவாளியான ராஜபட்ச சர்வ சாதாரணமாக வந்து சென்றது மிகவும் வேதனையளிப்பதாக டிஏஜி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இன்னமும் தமிழர்கள் இரண்டாம் தர மக்களாக நடத்தப்படும் அவலம் தொடர்வதாகவும் அவர்கள் கூறினர். இலங்கையில் தங்களது குடும்ப உறவுகளை இழந்த பலரும் ராஜபட்சவுக்கு எதிராக குரல் எழுப்ப முடியாமல் உள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு எதிராக வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு
First Published : 30 Jan 2011 12:00:00 AM IST

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக