ஆனால், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசினாலோ ஈழத்தலைவர்களின் படங்களை மாடடினாலோ உயிர்க்கொடை கொடுத்த தமிழர்களின் படங்களை வைத்திருந்தாலோ தமிழ்நாட்டில் குற்றம் என்கிறது காவல்துறையும் கோவன் குழுவும். எப்பொழுது தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் .
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
புது தில்லி, பிப். 4: தடை செய்யப்பட்ட இயக்கத்தின் உறுப்பினராக இருப்பது குற்றமல்ல என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அசாமைச் சேர்ந்த அருப் பூயான் என்பவர், தடை செய்யப்பட்ட அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி (உல்ஃபா) அமைப்பைச் சேர்ந்தவர் எனக் கூறி அவருக்கு குவாஹாட்டியில் உள்ள சிறப்பு தடா நீதிமன்றம் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விசாரணையின்போது நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, ஞானசுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறியதாவது: ஒருவர் வன்முறையில் ஈடுபட்டாலோ அல்லது வன்முறையில் ஈடுபடும்படி பொதுமக்களைத் தூண்டினாலோதான் அவரைக் குற்றவாளி என கருத முடியும். இவற்றில் ஈடுபடாமல், தடை செய்யப்பட்ட அமைப்பின் செயல்படக் கூடிய அல்லது செயல்படாத உறுப்பினராக இருந்தால் அதைக் குற்றமாகக் கருதக் கூடாது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் உல்ஃபாவின் உறுப்பினர் என்பதற்கு போலீஸôரிடம் அவர் அளித்த வாக்குமூலம் ஆதாரமாகக் காட்டப்பட்டுள்ளது. ஒப்புதல் வாக்குமூலம் என்பது மிகவும் பலவீனமான ஆதாரம். குற்றம்சாட்டப்பட்டவரிடம் இருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெற இந்தியாவில் போலீஸôர் மூன்றாம் தர நடைமுறைகளைப் பின்பற்றுவது அனைவரும் அறிந்ததே. எனவே, ஒப்புதல் வாக்குமூலத்துடன் வலுவான ஆதாரங்கள் உள்ளதா என்பதை தீர்ப்பு வழங்குவதற்கு முன் நீதிமன்றங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். நம் நாட்டில் விஞ்ஞானரீதியில் விசாரணை நடத்துவதற்கு போலீஸôருக்கு பயிற்சி இல்லை. அதற்கு வேண்டிய சாதனங்களும் இல்லை. எனவே, சுலபமான வழியாக, குற்றம்சாட்டப்பட்டவரை துன்புறுத்தி வாக்குமூலங்களைப் பெறுகின்றனர் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர், தடா நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிபதிகள் ரத்து செய்தனர். மாவோயிஸ்டுகளுக்கு உதவினார் என மனித உரிமை ஆர்வலரும், டாக்டருமான விநாயக் சென்னுக்கு அண்மையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கூறிய கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக