செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

manmohan singh promised to stop attack on fishermen: மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்படும்: மன்மோகன் சிங்

வைகோவிற்கு அனுப்பிய மடல் பற்றிய செய்தி எனில் அவர் படமும் அல்லவா  இருக்க வேண்டும்? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்படும்: மன்மோகன் சிங்


சென்னை, ஜன. 31: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஜனவரி 22-ல் பிரதமர் மன்மோகன் சிங்கை புதுதில்லியில் சந்தித்துப் பேசினார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது குறித்தும், மீனவர்களை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் அப்போது வைகோ வலியுறுத்தினார். பிரதமரை வைகோ சந்தித்த அதே நாளில், வேதாரண்யம் அருகேயுள்ள புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஜெயக்குமார் இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டார். இப் பிரச்னை குறித்து ஜனவரி 23-ல் ஃபேக்ஸ் மூலம் பிரதமருக்கு வைகோ செய்தி அனுப்பினார். இந்நிலையில், வைகோவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.அந்தக் கடிதத்தில் கூறியுள்ளது: இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளர், மத்திய அரசு அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள் கொண்ட குழுவை இலங்கைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். நம் குழுவினர் இலங்கை அரசுடன் இந்தப் பிரச்னை குறித்து விவாதித்து, இந்திய மீனவர்கள் நலனை பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள் கண்டறியப்படும் என்று பிரதமர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.தமிழக அதிகாரிகள் செல்லவில்லை:நிருபமா ராவ் இலங்கைக்கு செல்வதை வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் ஜனவரி 28-ல் அதிகாரபூர்வமாக அறிவித்தார். ஆனால், அதற்கு முன்னதாகவே, வைகோவுக்கு எழுதிய கடிதத்தில் நிருபமா ராவை இலங்கை அனுப்ப உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். எனினும், அந்தக் கடிதம் தாமதமாகவே வைகோவுக்குக் கிடைத்துள்ளது.  மேலும், வைகோவுக்கு பிரதமர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, இலங்கை சென்ற குழுவில் தமிழக அதிகாரிகள் யாரும் செல்லவில்லை.  இது குறித்து வைகோவிடம் கேட்டபோது, அவர் கூறியது:பிரதமர் எனக்குஜனவரி 25-ம் தேதி எழுதிய கடிதம் ஜனவரி 31-ம் தேதி மதியம்தான் கிடைத்தது. வெளியுறவுச் செயலாளர் இலங்கை செல்லவுள்ளார் என்று தெரிவித்து பிரதமர் எனக்கு எழுதிய கடிதம், சுமார் ஒரு வாரத்துக்குப் பின், அதுவும் வெளியுறவுச் செயலாளர் இலங்கை சென்ற பின் அனுப்பப்பட்டது ஏன்?இந்தக் கடிதம் தாமதப்படுத்தி, எனக்கு அனுப்பப்பட்டதாக நான் சந்தேகம் அடைகிறேன்.பிரதமர் கூறியுள்ளபடி, இந்திய வெளியுறவுச் செயலாளருடன் தமிழக அதிகாரிகள் குழு செல்லாதது ஏன்? தமிழக மீனவர்களை பாதுகாப்பதில் தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லையா இது பற்றி முதல்வர் கருணாநிதி விளக்க வேண்டும் என்றார் வைகோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக