நல்லுறவு உள்ள நாடு என அடிக்கடி இந்தியத்தால் போற்றப்படும் சிங்களம் மீது கொள்ளைக்கார, கொலைகாரக் கூட்டாளி முறையீடு செய்ய வாய்ப்பில்லை. எனவே, இந்தியாவில் உள்ள கட்சி அமைப்புகளும் மனித நேய அமைப்புகளும் பன்னாட்டு நடுவர் மன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
புது தில்லி, பிப். 4: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா கூறினார். இது தொடர்பாக புது தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: இந்திய கடல் எல்லையைத் தாண்டும் மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொல்கிறது. இது எல்லாவிதமான சர்வதேச விதிமுறைகளுக்கும் எதிரானது. இப் பிரச்னை குறித்து தூதரக அளவில் எடுத்துச் செல்வதை இந்தியா நிறுத்த வேண்டும். இப் பிரச்னையை இன்னும் தீவிரமாக மத்திய அரசு அணுக வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவரே (இலங்கை) நடத்தும் விசாரணை நியாயமாக இருக்க முடியுமா? எனவே, இது குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையிட வேண்டும். 1974-ல் செய்து கொண்ட கச்சத் தீவு ஒப்பந்தத்தை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும். இப் பிரச்னையில் தி.மு.க. தனது கடமையிலிருந்து நழுவமுடியாது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக