வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

Resolutions of D.M.K. general body: கச்சத்தீவில் உரிமைகளை நிலைநாட்ட புதிய ஒப்பந்தம்

ஒரு  வகையில் எல்லாத் தீர்மானங்களும் பாராட்டப்பட வேண்டியவையே. மற்றொரு நோக்கில் பார்த்தால் கச்சத்தீவைத திரும்பப் பெறக் கோர  இயலாமல் ஒப்பந்தம் குறித்த சறுக்கல் ஏற்பட்டுள்ளது.  தமிழ் ஈழம் தமிழர் தாயகம் என்பதை ஏற்காமல் அதிகாரப் பகிர்வு என்ற போலிப் பாட்டு எதற்கு?  தமிழ் மொழிக் குடும்பம் என்று சொல்லாமல் திராவிட மொழிக் குடும்பம் என்று சொல்வது ஏன்? தீர்ப்புகளை அந்தந்த மாநில மொழிகளில் வெளியிட வேணடும் எனக் குழப்பாமல் தமிழை  உயர் நீதிமன்ற மொழியாகவும் உச்ச நீதி மன்ற மொழியாகவும்  ஆக்குமாறு வலியுறுத்தாதது ஏன்? வளவள  கொழ கொழாத் தீர்மானங்கள் ஒப்பிற்காகப் போடப்பட்ட சடங்கா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கச்சத்தீவில் உரிமைகளை நிலைநாட்ட புதிய ஒப்பந்தம் : மத்திய அரசை வலியுறுத்தி திமுக பொதுக்குழு தீர்மானம்

First Published : 04 Feb 2011 01:27:48 AM IST

Last Updated : 04 Feb 2011 02:57:34 AM IST

சென்னை அண்ணா அறி​வா​ல​யம் கலை​ஞர் அரங்​கத்​தில் முதல்​வ​ரும் கட்​சித் தலை​வ​ரு​மான கரு​ணா​நிதி தலை​மை​யில் வியா​ழக்​கி​ழமை நடை​பெற்ற திமுக பொதுக்​கு
சென்னை, பிப். 3: கச்சத்தீவில் தமிழக உரிமைகளை நிலைநாட்ட புதிய ஒப்பந்தம் போடப்பட வேண்டும் என்று திமுக பொதுக்குழு வலியுறுத்தியுள்ளது.  தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், இலங்கைத் தமிழர் பிரச்னை உட்பட ஏழு முக்கிய விஷயங்களில் மத்திய அரசை வலியுறுத்தி திமுக பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளது.  சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:  மத்திய-மாநில உறவுகளை ஆய்வு செய்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன.  இந்தக் குழுக்களிடம் திமுக தனது கருத்துகளை எடுத்துரைத்து, முழுமையானதும் உண்மையானதுமான கூட்டாட்சி முறையை மாநில சுயாட்சி அடிப்படையில் அமைத்திட வேண்டுமென்பதை திமுக வலியுறுத்தியுள்ளது.  மாநிலத்தில் சுயாட்சியும், மத்தியில் கூட்டாட்சியும் ஆக்கப்பூர்வமாக உருவாகி கூட்டாட்சி அமைப்பு வலுப்பெற இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.  நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டப் பேரவைகளில் மகளிர்க்கு 33 சதவீத தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் சட்ட முன்வடிவு அவ்வப்போது ஏற்படும் கருத்து மாறுபாடுகளால் இன்றளவும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.  எனவே, நாடாளுமன்றம், சட்டப் பேரவைகள் ஆகிய ஆட்சி மன்றங்களில் மகளிர் உரிமை பெறுவதை மேலும் காலம் தாழ்த்தாமல் 33 சதவீத இடஒதுக்கீடு மகளிர்க்கு அளிக்கும் சட்டத் திருத்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.  தமிழக மீனவர்கள் தாக்கப்படாமல் இருக்க, இனியும் இத்தகைய விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறாது எனவும், மேலும் இந்தப் பிரச்னையில் அவ்வப்போது சுமுக முடிவுகள் மேற்கொள்வதற்காக இரு சாராரையும் உள்ளடக்கிய ஒரு கூட்டுக்குழு நியமிக்க இலங்கை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது.  இந்திய-இலங்கை இடையே நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டு, பிறகு கைவிடப்பட்ட கச்சத்தீவில் தமிழகத்துக்கு உள்ள உரிமைகளை மீண்டும் நிலைநாட்டுவதற்கேற்ற வகையில் புதிய ஒப்பந்தம் போடப்பட வேண்டும்.  இலங்கைத் தமிழர் பிரச்னை: இலங்கையில் இதுவரை ஏறத்தாழ ஒரு லட்சத்து 25 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் தங்களது சொந்த இடங்களுக்குச் சென்றுள்ளனர். அதற்குள் இலங்கையில் அதிபர் தேர்தல் வந்த காரணத்தால் எஞ்சியவர்களை வாழ்விடங்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது.  அவர்களும் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்குத் திரும்பவும், அவர்களது நல்வாழ்வுக்கான உதவிகள் இலங்கை அரசினால் வழங்கப்படவும் மத்திய அரசு இலங்கை அரசினை வலியுறுத்த வேண்டும்.  ஏற்கெனவே உறுதியளித்தபடி இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு செய்வது ஒன்றுதான் நிரந்தர சகவாழ்வுக்கு வழிவகுக்கும் என்பதால் அதற்கான அரசியல் தீர்வினைக் காண தேவையான முயற்சிகள் அனைத்தையும் மத்திய அரசு விரைவில் மேற்கொள்ள வேண்டும்.  சேது சமுத்திர திட்டம்: இந்த திட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து முடித்திட முயற்சி மேற்கொள்ள வேண்டும். மீனவர்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரம் உயரவும், நாட்டின் கடலோரப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படவும், தென் மாவட்டங்கள் பெருமளவுக்கு வளர்ச்சி பெறவும் வழிவகுத்திடும் சேது சமுத்திர திட்டத்தின் எஞ்சிய பணிகளை நிறைவேற்ற வேண்டும்.  இந்தியாவின் அனைத்து மாநில மொழிகளையும் மத்திய ஆட்சி மொழிகளாக்க வேண்டும். அதில் தாமதம் ஏற்பட்டால் முதல் கட்டமாக திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியும், கலை இலக்கியப் பண்பாடும், வளமும் நிறைந்த தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்க வேண்டும்.  உயர் நீதிமன்றத்தில் தமிழ்: உயர் நீதிமன்றங்களை மக்கள் அணுகக் கூடிய நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளும், தீர்ப்புகளும் தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில ஆட்சி மொழிகளிலும் வெளியிடப்படுவதை அந்தந்த மாநில நீதிமன்றங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக