சனி, 3 டிசம்பர், 2011

ஒருசில மணி நேரத்துக்குள் அரிவாள், மண்வெட்டி தயாரிப்பு: மக்கள் வியப்பு

நாமக்கல்:வேலகவுண்டம்பட்டி வாரச்சந்தை வளாகத்தில், ராஜஸ்தானை சேர்ந்தோர் பல்வேறு வகையான இரும்புப் பொருட்களை, சிலமணி நேரத்தில் தயார் செய்து கொடுப்பது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால், விவசாயம் சார்ந்த பொருட்கள் கணிசமான அளவில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, அரிவாள், களைக்கொத்து, மண்வெட்டி உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது.அப்பொருட்கள், மோகனூர் மணப்பள்ளி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அரிவாள் உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்ய சராசரியாக ஒரு வாரம் வரை பிடிக்கும்.ஆனால், நாமக்கல் அருகே வேலகவுண்டம்பட்டியில், செவ்வாய்க்கிழமை தோறும் கூடும் வாரச்சந்தை வளாகத்தில், அரிவாள் உள்ளிட்டவற்றை, ராஜஸ்தானை சேர்ந்த நபர்கள் சிலமணி நேரத்துக்குள் தயார் செய்து கொடுப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.அவற்றைக் கண்டு ஆச்சரியத்துக்குள்ளாகும் மக்கள், சிறிய, பெரிய இரும்புகளை அவர்களிடம் வழங்குகின்றனர். அவற்றை அரிவாள், குத்துக்கோள், மண்வெட்டி உள்ளிட்டவைகளாக தயார் செய்து, 100 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை விலை வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக