Washington செவ்வாய்க்கிழமை, நவம்பர் 29, 10:54 AM IST
வாஷிங்டன், நவ. 29-
அமெரிக்காவின் நாசா விண்வெளி விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி ஓடத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அது எடுத்து அனுப்பியுள்ள போடடோக்களில் செவ்வாய் கிரகத்தில் மணல் குன்றுகள் மற்றும் அடுக்கடுக்கான மணல் அலைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, அமெரிக்காவின் ஜோன்ஸ் காப்கின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி நாதன் பிரிட்ஜஸ் கூறும் போது, செவ்வாய் கிரகத்தில் மிக பலத்த புயல் காற்று வீசுகிறது. அதனால் அங்கு பறக்கும் மணல்கள் குன்றுகளாக உருவாகியுள்ளன. மேலும் மணலும் அலைகளாக மாறி அடுக்கடுக்காக தெரிகின்றன என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக