<வெடிகுண்டு எடுத்துவந்தபோது தவறிவிழுந்து வெடித்ததில் ஒருவர் படுகாயம் >இதன் பொருள் தொடர்பில்லாத மூன்றாமவர் காயம் அடைந்தார் என்பதாகும். ஆனால், வெடிகுண்டு எடுத்து வந்தவர்தான் காயமுற்றுள்ளார். ஒருவர் என்னும் சொல்லை நீக்கிவிட்டால் பொருள் சரியாகும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
First Published : 30 Nov 2011 03:40:33 PM IST
கமுதி, நவ.30: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் கொத்தனார் ஒருவரைக் கொல்வதற்காக நாட்டு வெடிகுண்டு கொண்டுவந்தபோது தவறிவிழுந்து வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்தார்.கணபதி என்பவர் கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார். அவரிடம் கம்பிகட்டும் வேலைபார்ப்பவர் மகேந்திரன். இவருக்கும் மாணிக்கநாதனுக்கும் பணத் தகராறு இருந்துள்ளது. இந்த நிலையில் மாணிக்கநாதனை கணபதி இதுதொடர்பாக கண்டித்துள்ளார். எனவே உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன் என்று கணபதியைக் கொல்வதற்காக வீட்டுக்குச் சென்று நாட்டுவெடிகுண்டு எடுத்துவந்துள்ளார் மாணிக்கநாதன். அப்போது பாதிவழியில் திடீரென அது தவறிவிழுந்து வெடித்ததில் மாணிக்கநாதனுக்கு படுகாயம் ஏற்பட்டது. சாலை முழுவதும் மாணிக்கநாதனின் ரத்தம் சிதறிக் கிடந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். நேற்று இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. இதையடுத்து இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அப்பகுதிக்கு உடனடியாக வந்து விசாரித்தனர். எஸ்பி காளிராஜ் மகேஷ்குமாரும் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.இந்த சம்பவத்துக்குப் பிறகு மாணிக்கநாதன் படுகாயத்துடன் தலைமறைவாகிவிட்டார். அவர் ஏதாவது மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக