வியாழன், 13 அக்டோபர், 2011

mulivaaykkaal genocide photos :முள்ளிவாய்க்கால் மக்கள் படுகொலை புதிய அதிர்ச்சிப்படங்கள்

முள்ளிவாய்க்கால் மக்கள் படுகொலை புதிய அதிர்ச்சி புகைப்படங்கள் ..! (Photo in)

முள்ளி வாய்க்கள் பகுதியில் தஞ்சம் என தங்கி இருந்த மக்கள் மீது மிகையொலி விமானங்கள் பல் குழல் எறிகணைகள் நச்சு குண்டுகளை வீசி படு கோரமாக அப்பாவி தமிழ் மக்களை இனவெறி கொண்டு சிங்களம் அழித்துள்ளது.உடல் சிதறி அவையவங்கள் தூண்டிக்க பட்டு இரத்த போக்கு அதிகரித்த நிலையில் மருத்துவ சிகிச்சை பலன் இன்றி மக்கள் பலியாகியுள்ளனர் . அப்பாவி மக்கள் தங்கி இருந்த பகுதி மீது குண்டுகளை வீசி கொலை செய்த சிங்களம் அங்கு புலிகள் மறைந்திருந்து  தாக்குதலை நடத்தினர் அவர்கள் மீது நடத்திய தாக்குதலினாலேயே இவர்கள் பலியானார்கள் என கூறியுள்ளது .எமது மண்ணை  அபகரித்து அங்கு பூர்விகமாக  வாழ்ந்த தமிழ் மக்களை ஏதிலிகளாய் ஆக்கி
மாபெரும்  இனவெறி இன அழிப்பு தாண்டவத்தை நடத்தி முடித்துள்ளது .
இந்த சிங்கள இன அழிப்பின் பின் பல்லாயிரம்  மக்களும்  மாவீரர்களின் குருதியில் படிந்த தேசம் இன்று அந்நிய  பேய்களின்
ஆக்கிரமிப்பில் ..சிக்கி தனது முகத்தை சிதைத்துள்ளது .நமது மண்ணை  இழந்து மக்களை இழந்து அவையவங்கள் இழந்த சமுகமாக புதிய ஒரு சமுகம் உருவாக்க பட்டு தமிழ் மக்களின் கலாசார பண்பாடுகளை
சிதைத்து எயிட்ஸ் என்ற கொடிய நோயை திணித்து புதிய போர் ஒன்றை கட்டவிழ்த்து விட்டுள்ள சிங்களத்தின் புதிய தாக்குதல் வியுகங்களை முறியடித்து பிரிந்த அனைத்து  தமிழர்  அமைப்புக்களும் ஒன்று பட்டு ஓரணியில் நின்று எமது மாவீரர் கனவுகளை  நனவாக்கும் ஆற்றலோடு அனைவரும் பயணிப்போம் .
தமிழீழ விடியலுக்காக  தமது இன்னுயிர்களை ஈகம் செய்தவர்கள் நாளில் அணைத்து  மக்களும் ஒருமித்து ஓர் இடத்தில ஒன்று திரண்டுஎமது மாபெரும் ஒன்று பட்ட பலத்தினை உலகிற்கும் எதிரிக்கும்  காட்டி தலைவன் காட்டிய வழியில் வீறு நடை  கொண்டு நடப்போம் .
இந்த மக்களின் கோர காட்சி படங்களை சிங்களத்தின் கோர படு கொலைகளை  பார்த்த பின்னரும் பிரிந்து நின்று பல அணிகளாகதமிழீழ விடுதலை புலிகளின் பெயர்களை வைத்து புலிகள் தலைமை என்று கூறி தமிழர் விடியலுக்கு தடங்கள் ஏற்படுத்துவபவர்களை மக்கள் ஓட்ட ஓட விரட்டியடித்து  எமது மண்ணில் இறந்த மக்களுக்கும் மாவீரக்ளினதும் தமிழீழ தனியரசாம் என்ற கனவை நனவாகக் இவரைகளை விரட்டி அடிப்போம் . விதையாகி வீழ்ந்த மாவீரகள் மக்கள் மீது  சத்தியம் செய்து …நாம் நாம் தமிழர்களாய் பயணிப்போம் ..இது தமிழர்களின் வரலாற்று  நிர்பந்தம்.

Bookmark and Share

About the Author

has written 5248 stories on this site.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக