சனி, 15 அக்டோபர், 2011

great wall of china is in damaging condition: சேதம் அடைந்ததால் இடிந்து விழும் சீனப்பெருஞ்சுவர்

 
சேதம் அடைந்ததால் இடிந்து விழும் சீனப்பெருஞ்சுவர்

 பெய்ஜிங், அக். 15-
 
உலக அதிசயங்களில் ஒன்றாக சீனப்பெருஞ்சுவர் திகழ்கிறது. இது சீனாவில் கி.பி. 3-ம் நூற்றாண்டில் மிங் அரசர் காலத்தில் கட்டப்பட்டது. 5,500 மைல் நீளமுள்ள இந்த சுவர் சீனாவின் 11 மாகாணங்களை உள்ளடக்கியுள்ளது. இத்தனை சிறப்பு வாய்ந்த சீனபெருஞ்சுவர் தற்போது இடிந்து வருகிறது.
 
அதற்கு பல இடங்களில் அந்த சுவர் சேதமடைந்து இருப்பதுதான் காரணமாக கருதப்படுகிறது. மோசமான தட்பவெப்ப நிலையும் இந்த சுவர் சிதிலமடைந்து வருவதற்கு மற்றொரு காரணமாகும். மேலும் சீனா - ஜப்பான் நாடுகளுக்கு இடையே நடந்த போரின்போது இது பல கட்ட தாக்குதலுக்கு ஆளானது. அதே நேரத்தில் 1950 முதல் 1960-ம் ஆண்டுகளில் சீன பெருஞ்சுவரில் இருந்த செங்கற்களை அப்பகுதி கிராம மக்கள் இடித்து கொள்ளையடித்தனர். அவற்றை அதிக விலைக்கு விற்றனர்.
 
இதனாலும் சுவர் சேதம் அடைந்தது. அவை தவிர சீனபெருஞ்சுவர் கட்டப்பட்ட பகுதியில் தங்கம், இரும்பு போன்ற உலோக தாதுக்கள் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே அங்கு நிலத்தை தோண்டும் பணியில் சிலர் திருட்டு தனமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த காரணத்தினாலும் பெருஞ்சுவர் இடிந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக