திங்கள், 23 மே, 2011

புலிகள் அமைப்பின் புதிய தலைவர் மீது இலங்கை தீவிரக் கண்காணிப்பு

தமிழ்த்தேசிய ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் கொல்லப்பட்டார் என அடிக்கடி தினமணி குறிப்பிடுவதை விடச்,  சிங்கள அரசால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் அவர் பற்றிய விவரம் தெரியவிலலை என்றாவது எழுதலாம் அலலவா? தமிழ் ஈழ எழுச்சியை ஏற்படுத்தி வரும் தினமணிக்கு அதுதானே அழகு. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

புலிகள் அமைப்பின் புதிய தலைவர் மீது இலங்கை தீவிர கண்காணிப்பு

First Published : 22 May 2011 12:00:00 AM IST


கொழும்பு, மே 21: விடுதலைப் புலிகள் அமைப்பின் (எல்டிடிஈ) புதிய தலைவரின் செயல்பாடுகளை இலங்கை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இலங்கை ராணுவத்தால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார். அதன் பிறகு அந்த அமைப்பின் தலைவராக குமரன் பத்மநாதன் பொறுப்பேற்றார். ஆனால் அவரையும் இலங்கை அரசு கைது செய்தது. இந்நிலையில் இந்த அமைப்புக்கு தலைவராக நார்வேயில் வசிக்கும் இலங்கை தமிழர் பேரின்பநாயகம் சிவபரன் என்கிற நெடியவன் பொறுப்பேற்றார். எல்டிடிஈ அமைப்பின் புதிய தலைவராக இவர் கருதப்படுகிறார். கடந்த வாரம் இலங்கையில் வசிக்கும் தமிழர்களின் உறவினர்களை அச்சுறுத்துவதாக குற்றம் சாட்டி இது குறித்து விளக்கம் அளிக்குமாறு நெடியவனுக்கு நார்வே நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இலங்கையில் உள்ள தங்களது உறவினர்கள் அச்சுறுத்தப்படுவதாக நார்வேயில் உள்ள தமிழர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த வழக்கு விசாரணையை உன்னிப்பாகக் கவனித்து வருமாறு நார்வேயில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2002-ம் ஆண்டு இலங்கையில் அமைதி ஏற்படுத்துவதற்காக விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தையை நார்வே மேற்கொண்டது. ஆனால் நார்வே குழுவினரின் அமைதி பேச்சுவார்த்தை எவ்வித பலனையும் அளிக்கவில்லை. இதையடுத்து நடந்த கடுமையான சண்டையில் இலங்கை ராணுவத்தின் கை மேலோங்கியது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். இந்நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நார்வே உதவுவதாக இலங்கை குற்றம் சாட்டியுள்ளது. அதை நார்வே அரசு மறுத்துள்ளது.
கருத்துகள்

ராஜபக்சே வ எப்போ சுட்டு கொல்றங்களோ அப்போ தான் நம்ம இனத்துக்கு நிம்மதி கிடைக்கும் ....அந்த நாள் சீக்கிரம் வரும். நம்ம தலைவர் திரும்ப வருவர்.. அது வரைக்கும் பொறுத்திருப்போம்
By தமிழன் sankar
5/22/2011 11:27:00 AM
ராஜபக்ஷ சகோதர்கள் உருத்திர குமாரைமட்டுமா தீவிர கண்காணிப்பு செய்கின்றனர் இவர்கள் சோனியா கருணாநிதி ஜெயலித வைகோ நெடுமாறன் மன்மோகன் சிங் பிரணாப் முகர்ஜி சிதம்பரம் வீரமணி திருமாவளவன் எல்லோரையும் தான் கண்காணிப்பு செய்கின்றனர் . காரணம் இவர்களை கொலைவெறி சனியன் பிடிச்சுடுத்து இது தெரியாதவர் உலகத்தில் யாருமே இல்லையே இது என்ன புதிசா சாமி .
By ஜனம்- thanjai
5/22/2011 5:04:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக