ஞாயிறு, 22 மே, 2011

Thamizh kadamaigal 6: தமிழ்க்கடமைகள் 6 : திராவிடன் எனச் சொல்வதா? -நாவலர் சோமசுந்தர பாரதியார்

தமிழ்க்கடமைகள் 6 :
திராவிடன் எனச் சொல்வதா?
தமிழன் என்று சொல்லுக
தமிழன், தன்னைத் தமிழனென்று கூறிக்கொள்ளவும வெட்கப்­பட்டுத் “திராவிடன், திராவிடன்” என்று தோள் குலுக்குவதா? திராவிடன் என்ற பெயர் சங்க நூலிலே ஏது? “சுயமரியாதை சுயமரியாதை” என்று, ஆரிய மொழி பேசினார்கள். நான் சொல்லிச் சொல்லி, இப்போதுதான் ‘தன்மானம்’ என்று தமிழாகப் பேசுகிறார்கள். நீங்கள் அண்ணாதுரை பேசும்போது, அவர் பேச்சை அங்கீகரித்தும், அகமகிழ்ந்தும் அடிக்கடி கை தட்டினீர்கள். எனக்கு அதுபோல் கை தட்டாவிட்டாலும் மனத்தையாவது திறந்து வைத்துக் கேளுங்கள். நோய் தீர மருந்து தர முடியாமல் நஞ்சுகொடுத்து ஆளையே இழிவுபடுத்தித் தமிழ்க் கலையை அழிக்க வேண்டா. மக்களுக்கு அறிவூட்டுங்கள். ஆரிய ஆபாசத்தை எடுத்துக் கூறுங்கள். அதுதான் தக்கவழி!
-நாவலர் சோமசுந்தர பாரதியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக