புதன், 25 மே, 2011

I will not meet soniya - says kalaignar: சோனியாவைச் சந்திக்க மாட்டேன்: கருணாநிதி

உண்மையாகவே இவ்வாறு கருதினால் தவறாகும். ஏனெனில் இது சரியெனில், மத்திய அரசின் பொறுப்பிலுள்ள கழகத்தவரைக் கூடச்  சந்திப்பது என்பது தவறாகும். புது தில்லியில் ஆசாத்,ப.சி. ஆகியோரைச்  சந்தித்ததும் தவறாகும்.  ஒருபுறம் சட்டம் தன் கடமையைச் செய்யும் பொழுது தந்தை தன் கடமையை ஆற்றுவது தவறல்ல. இவ்வாறு பேசுவது சட்டத்தை மீறிய உதவிக்காகத்தான் பிறரைச் சந்திக்கிறார் என்னும்  நிலைப்பாட்டை உறுதியாக்கும். வேறுகாரணத்திற்காக இப்படிப் பேசியிருந்தால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

சோனியாவை சந்திக்க மாட்டேன்: கருணாநிதி

First Published : 25 May 2011 01:58:52 PM IST

Last Updated : 25 May 2011 02:05:20 PM IST

சென்னை, மே 25- காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க மாட்டேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்."சோனியாவே அழைப்பு விடுத்தாலும் நான் அவரை சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது." என்று கருணாநிதி கூறினார்.இதனிடையே, தில்லி திகார் சிறையில் உள்ள கனிமொழியை சந்திப்பதற்காக, கருணாநிதியின் மகள் துர்கா மறறும் அவரது குடும்பத்தினர், ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று காலை 9.20 மணியளவில் தில்லி வந்து சேர்ந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக