சாதி, சமய வேறுபாடின்றி எக்கருத்தையும் ஆராய்ந்த இதழாளர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள். இளம் இதழாளர்கள் அவரைப்பின்பற்றினால் நன்று. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி காலமானார்
First Published : 22 May 2011 10:52:12 AM IST
சென்னை, மே 22: மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 77. இரா.தியாகராஜன் என்பது அவருடைய இயற்பெயர். கடந்த ஒரு வருடமாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் உயர்சிகிச்சை பெற்று வந்தார். தன் உடல்நிலையைக் கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து கட்டுரைகள் பல எழுதிவந்தார். 15.06.1934ல் திருவாரூரில் பிறந்தவர். ராமநாதன் - கமலா தம்பதியரின் புதல்வர். திருவாரூரில் பள்ளிப்படிப்பு முடித்து, ஆசிரியர் பயிற்சி பெற்று, பல்வேறு பள்ளிகளில் ஆசிரியராகப் பணி புரிந்தவர். பின்னாளில் பத்திரிகையாளராகப் பரிமளித்த அவர், பல்வேறு இதழ்களிலும் எழுதியுள்ளார். பத்திரிகையாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பொதுவாழ்க்கை - எழுத்துப்பணி இவற்றுக்காக திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தவர் இவர்.இவரது இறுதிச் சடங்கு, இன்று (மே 22) மாலை 4 மணி அளவில் பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்


By பி.டி.முருகன் திருச்சி
5/22/2011 12:08:00 PM
5/22/2011 12:08:00 PM


By Paamaran
5/22/2011 11:34:00 AM
5/22/2011 11:34:00 AM


By vaayaadi
5/22/2011 11:25:00 AM
5/22/2011 11:25:00 AM


By RSekar
5/22/2011 11:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *5/22/2011 11:12:00 AM