புதன், 25 மே, 2011

thamizh kadamaigal 9 : தமிழ்க்கடமைகள் 9 அறிவியல் மொழியாய் தமிழே துலங்குக

தமிழ்க்கடமைகள் 9
அறிவியல் மொழியாய் தமிழே துலங்குக

        உலகமொழி தமிழென்று மொழிதல் மட்டும்
மாற்றுவழி யாகாது விஞ்ஞா னத்தின்
        மருந்துமொழி விருந்துமொழி தமிழ்தான் என்று
போற்றுவதும் உலகத்தார் நாட்டார் எல்லாம்
        புரிந்துகொள வைப்பதுவும் ஆகும். இந்த
மாற்றத்தை உடனேநாம் மேற்கொண் டால்தான்
        மடிநீங்கிக் களிபொங்கித் தமிழ்த்தேர் ஓடும்
- தீப்பொறி பொன்னுசாமி, மலேசியா:
உங்கள் குரல் தமிழ்ச்செம்மொழிச் சிறப்பு மலர்: பக் 36



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக