குடும்பத்தினர் சந்திப்பை எலலாம் செய்தியாகப் போட வேண்டுமா? ஒரு புறம் பக்கத்தை வீணடிக்கிறீர்கள். மறுபுறம் சிறையில் இருப்பதை மக்களுக்கு நினைவூட்டிப் பாதிக்கப்பட்டவருக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறீர்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
கனிமொழியுடன் தமிழரசு, செல்வி சந்திப்பு
First Published : 26 May 2011 12:39:42 AM IST
புது தில்லி, மே 25: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி, மகன் மு.க. தமிழரசு உள்ளிட்ட குடும்பத்தினர் கனிமொழியை தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை சந்தித்து நலம் விசாரித்தனர்.2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு விசாரணைக்காக வழக்கம்போல் நீதிமன்றத்தில் கனிமொழி புதன்கிழமை காலை 10.15 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.அவருடன் மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் ஆஜராயினர்.திகார் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட கனிமொழி, காலை 9.30 மணியிலிருந்து நீதிமன்ற லாக்-அப் அறையில் காத்திருந்தார். அதன் பிறகு 10.15 மணிக்கு நீதிமன்ற அறைக்கு அவர் அழைத்து வரப்பட்டார். இருக்கையில் அமர்ந்து கணவர் அரவிந்தனுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.இதையடுத்து காலை 10.30 மணிக்கு நீதிமன்ற அறையில் பரபரப்பு ஏற்பட்டது. செல்வி, மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா, மு.க.தமிழரசு, அவரது மனைவி மோகனா, மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் தாயார் மல்லிகா ஆகியோர் நீதிமன்ற அறைக்கு வந்தனர்.கனிமொழியைப் பார்த்ததும் அவர் அருகே சென்று அனைவரும் நலம் விசாரித்தனர். இருக்கைகளில் அடுத்தடுத்து அவர்கள் அமர்ந்துகொண்டு, கனிமொழியிடம் தைரியமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டனர். அவர்களுடன் கனிமொழி சிரித்தவாறு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்.அப்போது கனிமொழியின் தாயார் ராஜாத்தி நீதிமன்ற அறைக்கு வந்தார். எவருடனும் பேசாமல், தனியாக ஓர் இருக்கையில் அமர்ந்துகொண்டார். குடும்பத்தினரின் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. பிறகு கனிமொழியிடம் அவர்கள் விடைபெற்றுக்கொண்டு நீதிமன்ற அறையிலிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.முன்னதாக கருணாநிதியின் குடும்பத்தினர் கனிமொழியைச் சந்திப்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 9.20 மணிக்கு தில்லி வந்து சேர்ந்தனர். அங்கிருந்து நேராக நீதிமன்றத்துக்கு வந்தனர்.தமிழக முன்னாள் அமைச்சர்கள் செல்வராஜ், தமிழரசி, திமுக எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஹெலன் டேவிட்சன் ஆகியோரும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.தில்லிக்கு திங்கள்கிழமை வந்த கருணாநிதி, அன்று மாலை திகார் சிறையில் தனது மகள் கனிமொழியைச் சந்தித்துப் பேசினார். அதன் பிறகு மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காலை நீதிமன்றத்துக்கு வந்து கனிமொழியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தது நினைவுகூரத்தக்கது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திரு மதிகுமார் அவர்களே! முன்பு திருமண அழைப்பிதழுக்காவும் வேறு காரணங்களுக்காகவும் அப்பா மகன், அண்ணன் தம்பி, அண்ணன் தங்கை எனக் குடும்பத்தவர் சந்தித்ததை எல்லாம் செய்தியாகப் போட்ட பொழுதும் எதிர்த்துக் கருத்தைத் தெரிவித்து இருந்தேன். தினமணி வெளியிடவில்லை. இப்பொழுதும் அதே வகையில்தான் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றேன். (இக்கருத்தைத் தினமணி வெளியிடாவிட்டாலும் என் வலைப்பூவில் இடம்பெறும்.) கல்மாடி முதலான பிற குற்றம் சாட்டப்பட்டவர்களைச் சந்திப்பவர்கள் பற்றியெல்லாம் செய்தியா வெளியிடுகிறார்கள்? புறக்கணிக்கப்பட வேண்டிய செய்திகளுக்கு முதன்மை எதற்கு? மேலும் கனிமொழி உலகறிய தான் இன்னார் மகள் என்று சொல்லும் வாய்ப்பைப் பெறும் வரை எவ்வளவு துன்புற்றிருப்பார்? அதற்குப் பின்னரும் மூத்தார் குடும்பத்தினருடன் இணக்கமான சூழலை உருவாக்க எவ்வளவு துன்புற்றிருப்பார்? தொடக்கத்தில் எளிமையாகத்தானே வாழ்வை நடத்தினார்? மண வாழ்க்கையும் முறிவுற்றுத் துன்பத்தில் ஆழ்த்தி உள்ளது. தற்போதைய கணவனும் பெரும்பாலும் வெளிநாடுகளில்தானே உள்ளார். இந்தச் சூழலில் அந்தக் குடும்பத்திற்கு இணையான அதிகார மையத்தை உருவாக்க வேண்டும் என்னும் அரசியல் பதவி வெறிக்குத் தள்ளப்பட்டு இப்பொழுது துன்புறுகிறார். குற்றம் செய்த யாவருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும் என்பதுதான் சரி. அதே நேரம் அவர்களையும் நாம் மனித நேயத்துடன் அணுக வேண்டும் என்பது தவறா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கருத்துகள்
தேர்தல் என்று வந்தால் மட்டும்,மக்கள் ஊழலை,பார்ப்பது இங்கு கதையாய்,இருக்கு.ஊழலை பேச,அரசியல்வாதிக்கு,தகுதில்லை,எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.இப்ப தன் வாக்கு ,பணம் வாங்கும் ,வாக்காளனுக்கும்,தகுதி இல்லை.
By கலை
5/26/2011 12:10:00 PM

ஐயா தமிழ் அரசு சென்னை மாகாண நில ஆக்கிரமிப்பு சங்க தலைவர்.. உங்களுக்கு சென்னை புழல் ஜெயில் கத்துக்கிட்டு இருக்கு.
By செல்வன்
5/26/2011 12:10:00 PM
5/26/2011 12:10:00 PM
நல்ல ஊயல் பண்ண பண்ணாத எல்லாம் சாப்டு இப்ப கணிமொழிய மட்டும் மாட்டி விட்டுடிங்கள அதன் ராஜாதி அம்மா உங்க குட பேசாம கோவமா இருகாங்க மோகன் டோக்யோ
By Mohan
5/26/2011 10:17:00 AM
5/26/2011 10:17:00 AM
குற்றவாளிகள் ஜெயிலில் இருப்பதும் அதை அவர்கள் குடும்பத்தினர் பார்ப்பதும் செய்திதானே அதுவும் கோடிகணக்கில் மோசம் செய்தவர்கள் ஜெயிலிலில் யாரை சந்தித்தாலும் அது கவனிக்கப்பட வேண்டியதே மக்கள் யாரும நிச்சயம் மறந்து விட கூடாது .மொழியை காப்போம் தப்பில்லை இதை போல் மோசம் செய்தவர்களை நாம் ஊகிவிக்க கூடாது. அதனால் இலக்குவனார் திருவள்ளுவன் சொல்வது தவறு
By ர.சு.மதிகுமார்
5/26/2011 7:27:00 AM
5/26/2011 7:27:00 AM
குடும்பத்தினர் சந்திப்பை எலலாம் செய்தியாகப் போட வேண்டுமா? ஒரு புறம் பக்கத்தை வீணடிக்கிறீர்கள். மறுபுறம் சிறையில் இருப்பதை மக்களுக்கு நினைவூட்டிப் பாதிக்கப்பட்டவருக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறீர்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
By Ilakkuvanar Thiruvalluvan
5/26/2011 5:12:00 AM
5/26/2011 5:12:00 AM
போங்க போங்க எல்லோரும் வரிசையா போக வேண்டிய இடத்துக்கு போங்க ! அப்படியே கனிமொழிய நலம் விசாரிக்கும் போது இடது புறம் சிறையில் கிடக்கும் பாகிஸ்தானிய உளவாளி எப்படி இருக்குறாங்க....வலது புறம் சிறையில் வாடும் அந்த டெல்லி விபச்சாரி எப்படி இருக்குறாங்க.....எதிர் புறம் சிறையில் உள்ள ஆயுள் தண்டனைக் கைதி ....பின் புற சிறையில் உள்ள கொலைக்காரி எல்லாம் எப்படி இருக்குறாங்கன்னு கேட்காம விட்டுறாதீங்க ! அப்புறம் வருத்தப் படுவாங்க ! என்னத்த இருந்தாலும் நம்ப வீட்டுப் பொண்ணோட உடன்பிறவா சிறை நண்பர்கள் அல்லவா! இனி வாழ்க்கையில் எஞ்சிய காலத்தை அங்கேயே கழிக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டால் என்ன செய்வது ? எதற்கும் இனி போகும் போது எல்லோருக்கும் ஆரஞ்சுப் பழம் சேர்த்து வாங்கிக் கொண்டு செல்லவும் ! திகார் கைதிகள் சங்கத் தேர்தல் எப்பொழுது வருகிறது என்று கேட்டு வாருங்கள் தி மு க சார்பாக கனிமொழியை களம் இறக்கி டெல்லியை கலக்கிப் புடுவோம் !!! @ rajasji
By rajasji
5/26/2011 1:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++5/26/2011 1:18:00 AM