புதன், 25 மே, 2011

உம்மொழி எம்மொழி பொன்மொழி

நேற்று நீ! இன்று நான்! நாளை யாரோ? புரிந்து செயல்பட்டால் நாளையும் நாமே!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

உம்மொழி எம்மொழி பொன்மொழி
First Published : 24 May 2011 11:21:10 AM IST

மொழி மொழி என்றுதமிழ்மொழியில் தொடங்கிசெம்மொழியில் நனைந்துகனிமொழியில் கடந்து போன நிலை... நான் நீ என்றால் ஒட்டாது நாம் என்றால் ஒட்டுமே என்ற பொன்மொழிகள் எல்லாம்பஸ்ஸில் பயணித்த மாணவமணிகளுக்கு குஷியைத் தந்திருக்கலாம்...ஆட்சி மாற்றம்...இதோ காட்சி மாற்றம்!இங்கே கழிக்கப்பட்ட பொன்மொழிகளுக்கு பதிலாகஅழிக்கப்பட்ட இடத்தில் ஆக்கபூர்வமாக ஏதாவது சொல்லுங்கள்!வாசகரே...உங்கள் கற்பனையில் உம் மொழியை இடுங்கள்!உங்கள் பொன்மொழியைவிதையுங்கள்!
கருத்துகள்

எவ்வளவு உள்ளன? "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்; ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என படித்தவை மறந்தீரோ? உதடோடு உள்ளம் ஒட்டி, படித்தவைதானே?
By KUMAR
5/24/2011 7:05:00 PM
நீ எழுதியதை நான் அழிக்க நான் எழுதியதை நீ அழிக்க நீ சொன்னதை நான் மறுக்க நான் சொன்னதை நீ மறுக்க நீ செய்ததை நான் தடுக்க நான் செய்ததை நீ தடுக்க நீ என் சேலையைப் பிடுங்க நான் உன் வேஸ்டியை பிடுங்க இவையெல்லாம் எதனால் ஏற்பட்ட பிழையோ தமிழக மக்கள் தரணியில் இவர்கள் நல்லாட்சி செய்வார்களென்று தேர்ந்தெடுத்த பிழையோ.
By அப்துல் ரஹ்மான்
5/24/2011 6:28:00 PM
பூக்களை பார்க்க, விதைகளை விதை.! முயற்சி இல்லாமல், முன்னேற்றம் இல்லை. கற்பவன் மனிதன், கற்பித்தவன் கடவுள். உண்மையை பேசு, உலகம் உன் கையில். தாயை வணங்கு, தர்மம் விளங்கும். ஏழ்மையை போற்றிடு, எளிமையாய் வாழ்ந்திடு. நல்ல குடிமகன், நாட்டுக்கு மன்னன். பெண்ணின் பெருமை, பொன்னில் அல்ல.
By பி.டி.முருகன் திருச்சி
5/24/2011 6:12:00 PM
தயாளு, ராசாத்தி, ஸ்டாலின்,அழகிரி, தயாநிதி, கலாநிதி, என்று சொன்னால் கூட உதடுகள் ஒட்டாது. ஆனால் கனிமொழி என்றால் ஒட்டும்.
By Nallavan
5/24/2011 3:48:00 PM
தெரியாமல் செய்தாலும் தெரிந்து செய்தாலும் புரிந்துகொள் பாவத்திற்கு தண்டனை உண்டு.
By KANNAN S S
5/24/2011 3:44:00 PM
உதட்டில் ஒன்று சொல்லி உள்ளத்தில் வேறு கொண்டு நாம் என்பது என் குடும்பம் மட்டுமே எனில் உதட்டினில் மாயம் செய்து உள்ளத்தில் உள்ளதை எந்திரத்தில் வைத்து உலகம் புகழ தமிழன் தலை நிமிர்ந்தனோ?
By ரக்
5/24/2011 3:31:00 PM
இந்த சுறுசுறுப்பு இந்த அதிகாரிகளுக்கு மற்ற வேலை செயும்போது வருவது இல்லை ஏன் முத்துக்குமார்
By Muthukumar
5/24/2011 3:29:00 PM
உதட்டில் ஒன்றும் உள்ளத்தில் வேறொன்றும் கொண்டு நாம் என்பது குடும்பமே என்றதால் மக்கள் உடத்தளவில் ஒன்று சொல்லி எந்திரத்தில் வேறு செய்தனரோ?
By RKR
5/24/2011 3:27:00 PM
திராவிடரை முன்னேற்றுவோம் என்று துவங்கி இன்று திஹாருக்கு முன்னேறிக்கொண்டிருக்கிற கழகத்தின் சரித்திரம் கற்றுத் தரும் பாடம், தமிழர்கள் முற்றும் மறந்து விட்ட, மறக்கடிக்கப்பட்ட நன்னூல்கள் தரும் ஈரடி நான்கடி வாழ்க்கை தத்துவங்களை மீண்டும் படிப்போம் என்பது தான். இவற்றை பேருந்துகளில் எழுதலாம்.
By sankaran
5/24/2011 2:53:00 PM
மாற்றம் ஒன்றே மாறாதது கீதை மொழி மாற்றம் ஆயிரமாயினும் ஏற்றம் தேவை ஆட்சி மாறலாம் ஆர்ப்பாட்டம் இன்றி காட்சி மாறலாம் காட்சி பிழையின்றி உம்மொழி எம்மொழியின்றி உண்மையின் மொழி படைப்பின் உத்தமம் தாம் எம்மக்களுக்கு!!!!!!!!!
By பாலா துரைமாணிக்கம்
5/24/2011 2:34:00 PM
விதை ஒன்று போட சுரை ஒன்றா முளைக்கும் 2 வினை விதைத்தவன் வினியாருப்பன் 3 பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தம்மக்கின்னா பிற்பகல் தானே வரும்
By அழ.lakshmanan
5/24/2011 1:42:00 PM
சிந்தனை செய்! வஞ்சனை கொள்ளாதே!
By Perumal
5/24/2011 1:02:00 PM
ஒளவையாரின் மூதுரையை விட சிறந்த பொன்மொழிகள் வேறுண்டோ ? அதையெல்லாம் எழுதலாமே.!
By barathan
5/24/2011 11:52:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக