மிகவும் வருத்தத்திற்குரிய துயரச் செய்தி. அவரது குடும்பத்தினருக்கும் சுற்றத்தினருக்கும் கட்சியினருக்கும் தினமணி வாசகர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள். வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
சாலைவிபத்தில் அமைச்சர் பலி: எம்எல்ஏக்கள் பதவியேற்பு ஒத்திவைப்பு?
First Published : 23 May 2011 08:34:46 AM IST
Last Updated : 23 May 2011 09:19:02 AM IST

திருச்சி, மே 23: திருச்சி அருகே நடந்த சாலைவிபத்தில் அமைச்சர் மரியம் பிச்சை உயிரிழந்தார். பெரம்பலூர், பாடாலூர் அருகே இன்று காலை நிகழ்ந்த சாலைவிபத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை உயிரிழந்தார். சட்டசபை உறுப்பினராக இன்று பதவி ஏற்பதற்காக திருச்சியில் இருந்து சென்னைக்கு காரில் பயணித்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், வேறொரு காரில் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவபதியும் சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தார். கால் மணி நேர இடைவெளியில் அவர் யதேச்சையாக விபத்துக்கு உள்ளான மரியம் பிச்சையின் காரைக் கண்டு நிறுத்தி உதவியுள்ளார். உடனடியாக அடுத்த கட்ட ஏற்பாடுகளைச் செய்ய, அங்கிருந்து அவர் திருச்சி திரும்பினார். ஆனால், சிவபதியின் காரும் விபத்துக்கு உள்ளானதாக காலையில் தகவல் பரவியது. இதை அடுத்து, தகவல் அறிந்து கொள்வதற்காக அமைச்சரிடம் தொடர்பு கொண்ட தினமணி நிருபரிடம், அமைச்சர் சிவபதி தான் நலமாக இருப்பதாகவும், தன் விபத்தில் சிக்கவில்லை, தனக்கு காயம் எதுவும் படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சட்டப்பேரவை செயலர் மற்றும் அதிகாரிகள் இதுகுறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்று காலை தொடங்கவிருக்கும் சட்டசபைக் கூட்டத்தை நடத்துவது குறித்தும், சாலைவிபத்தில் பலியான அமைச்சர் மரியம்பிச்சைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு எம்.எல்.ஏக்கள் பதவியேற்பைத் தொடர்ந்து நடத்தலாமா அல்லது வேறொரு நாளுக்கு ஒத்திவைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.
கருத்துகள்


By sulaiman
5/23/2011 9:24:00 AM
5/23/2011 9:24:00 AM


By vivek
5/23/2011 9:00:00 AM
5/23/2011 9:00:00 AM


By Abdullah.B,Dubai
5/23/2011 8:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *5/23/2011 8:57:00 AM
தமிழக அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் மரணம்; முதல் சட்டசபை கூட்டத்திற்கு சென்றபோது விபரீதம்