வஞ்சம் தீர்க்கும் படலத்தில் வென்றுள்ளனர்: கருணாநிதி அறிக்கை
First Published : 22 May 2011 03:59:01 AM IST
Last Updated :
சென்னை, மே 22: தங்கள் குடும்பத்தினர் மீது வஞ்சம் தீர்க்கும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர் வெற்றிகரமாக முடித்துள்ளனர் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.தனது மகள் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில் சனிக்கிழமை இரவு கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்து ஆட்சியை இழந்திருக்கும் காலகட்டம் இது. இதற்கு என்ன காரணம்?இணைந்த கட்சிகளுக்கு வழங்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையா? அல்லது அவர்கள் வலியுறுத்தி வாங்கிக் கொண்ட தொகுதிகளின் கணக்கா? தேர்தல் கமிஷன் எனும் பிரம்ம ராட்சத பூதமா என்ற கேள்விகளுக்குள் போக விரும்பவில்லை.இந்தியாவில் அல்லது தமிழகத்தில் அதிகாரச் செல்வாக்கைப் பெருக்கி ஏராளமாகப் பணம் சம்பாதித்துள்ளது கருணாநிதியின் குடும்பம் என்று தேர்தலில் பிரசாரம் செய்தவர்கள் இப்போதும் அதே பிரசாரத்தைத் தொடர்கிறார்கள்.அவற்றில் உண்மை ஏதும் இல்லை என்பதைத் தொண்டர்கள் அறிந்து கொள்ள வேண்டும்."சன்' தொலைக்காட்சி நிறுவனத்தில் பங்குதாரராக இருந்து தயாளு அம்மாள் பிரிந்தபோது கிடைத்த ரூ.100 கோடியில் வருமான வரி போக மீதி ரூ.77.5 கோடி கிடைத்தது. அதைப் பகிர்ந்து கொண்டபோது, கனிமொழிக்கு ரூ.2 கோடி கிடைத்தது. அதை பங்குத் தொகையாகச் செலுத்தி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பங்குதாரராக இருக்கச் சொல்லி நான்தான் வலியுறுத்தினேன்.கனிமொழி அதை விரும்பாவிட்டாலும், அப்பா சொல்கிறாரே என அதற்கு ஒப்புதல் அளித்த குற்றத்தைத் தவிர வேறு ஒன்றும் அவர் செய்யவில்லை. எந்த ஒரு நிறுவனத்திலும் பங்குதாரர்களாக இருப்பவர்கள் லாப, நட்டத்தில் பங்குதாரராவது பொதுவான விஷயம். ஆனால் அந்த நிர்வாகத்தின் ஒவ்வொரு நாள் நடவடிக்கைக்கும் அனைத்துப் பங்குதாரர்களும் பொறுப்பாக ஆவதில்லை.தில்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கனிமொழிக்காக வாதாடிய வழக்கறிஞர் ராம்ஜேட்மலானி, இதைத் தெளிவாக சுட்டிக்காட்டியும், கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமாரையும், கனிமொழியையும் ஜாமீனில் விட மறுத்து சிறைக்கு அனுப்பியுள்ளனர்.என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர் கூடி - வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.அப்போதும் அத்துடன் நிம்மதி அடையாமல், நாங்கள் வாழ்ந்த இடம், வாழும் இடம், கட்சிக் கொடி பறக்கும் இடம் அனைத்தும் தரைமட்டமாகி புல் முளைத்த இடமாகப் போக வேண்டும் என தவம் கிடப்பது எனக்குத் தெரியாமல் இல்லை.இறுதிப் போரில் வெல்வோம்: இந்த விவரங்களைத் தொண்டர்கள் படித்து புரிந்துகொண்டு செயல்படுத்தினால், அறப்போர்க் கணைகளை பல ஆயிரம் இளைஞர்கள் வடிவில் நடமாட விடுவார்கள் என்பது என் எண்ணம். அந்த அறப்போர் இறுதிப் போராகி நாம் வெல்வது நிச்சயம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.இளமையில் இருந்து இதுவரை பல்வேறு பதவிகளில் இருந்தபோதும், நாடகம், திரைப்படத் துறைகளின் மூலம் கிடைத்த வருமானம் அதன் மூலம் வாங்கிய சொத்து, அளித்த நன்கொடை என சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட பட்டியலை இப்போது இந்த அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.
5/22/2011 12:17:00 PM
5/22/2011 12:08:00 PM
5/22/2011 12:00:00 PM
5/22/2011 11:56:00 AM
5/22/2011 11:37:00 AM
5/22/2011 11:35:00 AM
5/22/2011 11:32:00 AM
5/22/2011 11:17:00 AM
5/22/2011 11:15:00 AM
5/22/2011 11:14:00 AM
5/22/2011 11:10:00 AM
5/22/2011 11:06:00 AM
5/22/2011 11:04:00 AM
5/22/2011 10:58:00 AM
5/22/2011 10:53:00 AM
5/22/2011 10:49:00 AM
5/22/2011 10:48:00 AM
5/22/2011 10:21:00 AM
5/22/2011 10:20:00 AM
5/22/2011 10:12:00 AM
5/22/2011 9:59:00 AM
5/22/2011 9:59:00 AM
5/22/2011 9:55:00 AM
5/22/2011 9:48:00 AM
5/22/2011 9:27:00 AM
5/22/2011 9:17:00 AM
5/22/2011 9:13:00 AM
5/22/2011 9:05:00 AM
5/22/2011 8:33:00 AM
5/22/2011 8:31:00 AM
5/22/2011 8:27:00 AM
5/22/2011 8:22:00 AM
5/22/2011 8:04:00 AM
5/22/2011 7:57:00 AM
5/22/2011 7:56:00 AM
5/22/2011 7:55:00 AM
5/22/2011 7:38:00 AM
5/22/2011 7:33:00 AM
5/22/2011 7:32:00 AM
5/22/2011 7:29:00 AM
5/22/2011 7:24:00 AM
5/22/2011 7:24:00 AM
5/22/2011 7:23:00 AM
5/22/2011 7:15:00 AM
5/22/2011 7:14:00 AM
5/22/2011 7:06:00 AM
5/22/2011 7:05:00 AM
5/22/2011 6:58:00 AM
5/22/2011 6:54:00 AM
5/22/2011 6:34:00 AM
5/22/2011 6:26:00 AM
5/22/2011 5:49:00 AM
5/22/2011 5:48:00 AM
5/22/2011 5:43:00 AM
5/22/2011 5:33:00 AM
5/22/2011 5:31:00 AM
5/22/2011 5:14:00 AM
5/22/2011 5:06:00 AM
5/22/2011 5:05:00 AM
5/22/2011 4:49:00 AM
5/22/2011 4:40:00 AM
5/22/2011 4:37:00 AM
5/22/2011 4:06:00 AM