திங்கள், 29 மார்ச், 2010

மேயராக இருந்து பாலத்தை திறக்க முடியவில்லையே!: ஸ்டாலின் ஏக்கம்



சென்னை, ​​ மார்ச் 28:​ ​ சென்னை மாநகராட்சி மேயராக இருந்து பெரம்பூர் மேம்பாலத்தைத் திறக்க முடியவில்லையே என்கிற ஏக்கம் தன்னை வாட்டி வதைப்பதாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.சென்னை பெரம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேம்பாலத் திறப்பு விழாவுக்கு முன்னிலை வகித்து அவர் பேசியது:""1971}ல் திமுக ஆட்சியில் இருந்த போது,​​ சென்னை அண்ணா சாலையில் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு,​​ 1973}ல் திறக்கப்பட்டது.​ அதற்குப் பிறகு சென்னை நகரின் முக்கிய சந்திப்புகளில் மேம்பாலங்கள் கட்டப்படவில்லை.1996}ம் ஆண்டு,​​ 4}வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற போது சென்னை மாநகராட்சிக்குத் தேர்தல் நடத்தப்பட்டது.​ வெற்றி பெற்று மேயராகப் பொறுப்பேற்ற பிறகு,​​ நகரின் முக்கிய சந்திப்புகளில் பாலங்கள் கட்ட முடிவு செய்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டோம்.​ அரசின் ஒப்புதலையும் பெற்றோம்.சென்னையில் 10 இடங்களில் மேம்பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது.​ நாட்டில் எத்தனையோ மாநகராட்சிகள் உள்ளன.​ ஆனால்,​​ மாநகராட்சி சார்பில் பாலங்கள் கட்டப்பட்டது இல்லை.​ சென்னை மாநகராட்சி சார்பில் தான் முதல் முதலாக பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.ரூ.30 கோடி மீதம்:​​ சென்னையில் 10 மேம்பாலங்களை கட்ட முடிவு செய்து 1999}ம் ஆண்டு அதற்கான பணிகளில் மாநகராட்சி ஈடுபட்டது.​ ரூ.90 கோடியில் பாலங்களை கட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.​ குறித்த காலத்துக்குள் ரூ.60 கோடிக்குள் 9 மேம்பாலங்கள் கட்டப்பட்டன.​ ஆனால்,​​ பெரம்பூர் மேம்பாலம் மட்டும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்ட முடியவில்லை.அதன்பிறகு,​​ தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.​ பெரம்பூர் பாலம் கட்டும் திட்டத்தை கிடப்பில் போட்டனர்.​ சென்னையில் கட்டிய 9 மேம்பாலங்களில் முறைகேடு நடந்தது என அபாண்டமாக குற்றம்சாட்டி வழக்கு தொடுத்தனர்.பாலங்களை கட்டிய இப்போதைய முதல்வர் கருணாநிதியையும்,​​ என்னையும் ​(ஸ்டாலின்)​ வேறு சிலரையும் கைது செய்வதற்கான கோப்பில் மாநகராட்சி ஆணையர் முதல் அப்போதைய முதல்வர் வரை ஒரே நாளில் கையெழுத்திட்டனர்.​ எங்களை அவசர அவசரமாக கைது செய்த கொடுமைகள் நடந்தன.இப்போது மேயராக இருந்து இந்த மேம்பாலத்தைத் திறக்க முடியவில்லையே என்கிற ஏக்கம் தான் என்னை வாட்டி வதைக்கிறது'' என்றார் ஸ்டாலின்.
கருத்துக்கள்

இவர் மாநகரத் தலைவராக (மேயராக) இருந்தால் இவர்தான் திறந்து வைப்பார். வேறு யாரேனும் (மேயராக) இருந்தால் முதல்வர்தான் திறந்து வைப்பார் என்கிறாரா? அடுத்துஆட்சியில் இல்லாவிட்டால் 'மேயராக' வருவேன் என்கிறாரா? இப்பொழுதே து.மு. பதவியைத் துறந்து விட்டு 'மேயர்' ஆனாலும் ஆவேன் என்கிறாரா? கேள்விக் கணைகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/29/2010 3:19:00 AM

மேயராக இருந்து பாலத்தை திறக்க முடியவில்லையே!....என்ற ஏக்கம் வாட்டி வதைப் பதைப் போல....கலந்து கொள்ளும் திருமண நிகழ்சிகளில் எல்லாம் மாப்பிள்ளையாக இருக்க முடிய வில்லையே என்று ......ஏங்கி வாடி வதங்குவது எனக்கு நன்றாக தெரியும் !!!

By rajasji
3/29/2010 1:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக