புதன், 31 மார்ச், 2010

தேசிய ஆலோசனைக் குழு தலைவராக சோனியா மீண்டும் நியமனம்புது தில்லி,​​ மார்ச் 29:​ தேசிய ஆலோசனைக் குழு ​ ​(என்.ஏ.சி.)​ தலைவராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திங்கள்கிழமை மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.முன்னதாக ஆதாயம் தரும் பதவியை வகித்த சர்ச்சை காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இந்த பதவியில் இருந்து சோனியா விலகினார்.ஏற்கெனவே ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவியாக உள்ள சோனியா காந்தி,​​ தற்போது தேசிய ஆலோசனைக் குழு தலைவராக நியமிக்கப்பட்டதன் மூலம் கேபினட் அமைச்சர் அந்தஸ்தைப் பெறுகிறார்.அவரது நியமனம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.​ தேசிய ஆலோசனைக்குழுவின் பிற உறுப்பினர்கள் கூறியபடி சோனியா அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.​ அவர் ஓராண்டுக்கு இப்பதவியை வகிப்பார்.​ குழு உறுப்பினர்கள் விரும்பினால் தலைவரின் பதவிக் காலத்தை நீட்டிக்க முடியும்.இந்தப் பதவியை அவர் வகித்தாலும் இதற்கான அலவன்ஸ் உள்ளிட்ட பணப் பயன்களை அவர் பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முதல்முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தபோது 2004-ல் தேசிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது.​ மத்திய அரசின் குறைந்த பட்ச செயல் திட்டத்தை செயல்படுத்துவதே இக்குழுவின் முக்கியப் பணி.முன்னதாக மக்களவை எம்.பி.யாக இருந்த சோனியா ஆதாயம் தரும் தேசிய ஆலோசனைக் குழு தலைவர் பதவியையும் வகித்ததால் சர்ச்சை எழுந்தது.​ இதையடுத்து கடந்த 2006-ல் இரு பதவிகளையும் அவர் ராஜிநாமா செய்தார்.​ பின்னர் அதே ஆண்டில் ரே பரேலி தொகுதியில் போட்டியிட்டு அவர் மீண்டும் எம்.பி.யானார்.​ இப்போது தேசிய ஆலோசனைக் குழு தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துக்கள்

இந்தியக் கண்டத்து ஆளை மணந்ததால் இந்த நிலைத்தை ஆளும் உரிமை உண்டென்றால் மண்ணின் மைந்தர்களான ஈழத் தமிழர்களுக்கு அவர்கள் தாய் நாட்டை ஆளும் உரிமையும் உண்டென்பதைச் சோனியா புரிந்து கொள்ள வேண்டும். அவரைத் தலையில் தூக்கி வைத்து ஆடும் எடுபிடிகளாவது புரிந்து கொண்டு உண்மையை உணர்த்த வேண்டும். இங்கே அயல்நாட்டார் ஆளலாமாம் ! ஈழத்தில் தாய்நாட்டார் ஆளக் கூடாதாம்! என்ன நீதி! ஒரு வேளை இங்குபோல் அங்கும் அயல் நாட்டார்தான் ஆள வேண்டும் என்பதால் சிங்களத்தானுக்கு அடிபணிந்து காவடி தூக்கித் தமிழினத்தை அழிக்கிறாரா? சோனியாவின் வெற்றிகளுக்கு ஏமாளித் தமிழ் மக்களின் பஙக்ளிப்பும் உள்ளதென்பதால் அந்த நன்றிக்கடனுக்காவது அவர் தன் பாரவையை - செயல்பாட்டை - மாற்றிக் கொள்ள வேண்டும் சீன- சிங்களக் கூடடணியைப் புரிநகு கொண்டு இந்திய நில நலனுக்காகவாவது ஈழத்தமிழர்களுக்குத் துணை நிற்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/31/2010 2:45:00 AM

ALL THE BEST SONIAJI.

By ajit
3/30/2010 8:35:00 PM

Ethu enna pathvi, Ethanl nattukku enna payan?

By Sha
3/30/2010 2:56:00 PM

இதனால் இந்தியாவிற்கு எந்தப் பயனும் இல்லை !...மாறாக அம்மையாருக்கு ...................!!!!!

By rajasji
3/30/2010 2:06:00 PM

Hey Also Tamil, all those websites you created for your interest...its a waste yaahhh..no one going to explore all those false news..tamils worldwide very clear and sensefull, they are aware of true n false..i think you must be typical indian joker that's why your mentality is like local politician..ha ha ha.

By Tamilan
3/30/2010 9:19:00 AM

If you are so much agitated, you vote against her. This is not LTTE attai puli thesam. Majority people decide at election at the end of every five years. This country seen the ups and down of many political leaders. But Attai Pulikalin thesam witnessed murder of all political groups. These people should feel shame for what they have done to brother thamizh people. Read Gracian's experience with Attai Puli in sooddram website.

By Also Tamil
3/30/2010 8:28:00 AM

INDIANS AGAIN PROVED THAT THEY ARE SLAVES..ONCE TO MAGULS..THEN TO BRITISH...NOW TO EX-BABY SITTER..HE..HE..HE

By KOOPU
3/30/2010 1:02:00 AM

INDIANS HAVE ONCE AGAIN PROVED THAT THEY ARE SLAVES....ONCE SLAVES TO MOGALS..THEN TO BRITISH..NOW TO AN ITALIAN EX-BABY SITTER....HE.HE.HE

By KOOPU
3/30/2010 1:00:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக