சனி, 3 ஏப்ரல், 2010

ஆங்கில ஆட்சியின் எச்சம்: பட்டமளிப்பு விழா ஆடையை கழற்றினார் மத்திய அமைச்சர்



போபாலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய வன மேலாண்மை நிறுவனத்தின் 7-வது பட்டமளிப்பு விழாவில், மேடையிலேயே பட்டமளிப்பு விழா மேலங்கியைக் கழற்றுகிறார் மத்தி

போபால் ஏப். 2: பட்டமளிப்பு விழாவின் போது அதற்குரிய ஆடையை அணியும் பழக்கம் ஆங்கில காலனி ஆட்சி விட்டுச் சென்ற எச்சம் என்று கூறிய மத்திய அமைச்சர் ரமேஷ், விழா மேடையிலேயே பட்டமளிப்பு விழாவுக்கான மேலங்கியை கழற்றி அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தினார்.
÷போபாலில் உள்ள இந்திய வன மேலாண்மை நிறுவனத்தின் 7-வது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கலந்துகொண்டார். பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் பட்டமளிப்பு விழா அங்கியை அணிவது வழக்கம். பட்டம் பெறும் மாணவர்களும் இதுபோன்ற அங்கி அணிவது வழக்கம்.
ஆனால் இந்த வழக்கத்துக்கு அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
÷சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட நாம் காலனி ஆட்சியின் அடிமைதளைகளை விடுவிக்கவில்லை. இதுபோன்று அங்கி அணிவதை அநாகரிகமான செயலாகவே நான் கருதுகிறேன் என்று கூறிய அமைச்சர் தான் அணிந்திருந்த அங்கியை கழற்றினார். அவர் அவ்வாறு செய்தவுடன் அதிர்ச்சி கலந்து வியப்பில் விழாவில் கலந்துகொண்ட பெரும்பாலானோர் கைதட்டி வரவேற்றனர்.
÷சாதாரணமாக ஆடை அணிந்து பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டால் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கருத்துக்கள்

மழலையர் பள்ளிகள் முதல் பட்டமளிப்பு என ஏமாற்றிப் பணம் பிடுங்கும் தனியார் பள்ளிகளின் கொள்ளைகளை முதலில் தடுத்து நிறுத்துங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/3/2010 2:55:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக