வியாழன், 1 ஏப்ரல், 2010

பென்னாகரம் இடைத்தேர்தல் திமுக அரசின் சாதனைக்கு கிடைத்த வெற்றிகாஞ்சிபுரம், மார்ச் 30: பென்னாகரம் இடைத்தேர்தல் திமுக அரசின் சாதனைக்கு கிடைத்த வெற்றி என்று இந்திய தேசிய போக்குவரத்து தொழிலாளர் பேரவையின் மாநிலத் தலைவர் எம்.எல்.ஏ. எம்.கே.விஷ்ணுபிரசாத் தெரிவித்தார்.இந்த அமைப்பின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் பங்கேற்க காஞ்சிபுரம் வந்த செய்யார் எம்.எல்.ஏ. எம்.கே.விஷ்ணுபிரசாத் நிருபர்களிடம் கூறியது: பென்னாகரம் இடைத் தேர்தலில் கிடைத்த வெற்றி திமுக அரசின் சாதனைக்கு கிடைத்த வெற்றி. இன்றைய காலக் கட்டத்தில் பல்வேறு நல்ல விஷயங்கள் தமிழகத்தில் நடந்து வருகின்றன.இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் அரசு ஊழியர் ஊதிய விகித முறையில் ஊதியம் வழங்க வேண்டும், போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதிய திட்டத்தை மின்வாரியம் போல் அரசே ஏற்று நடத்த வேண்டும், ஓய்வூதியர்கள் ஒப்படைப்பு பணத்தை பணியாளர் ஓய்வு பெறும்போதே வழங்க வேண்டும், வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஓட்டுநர், நடத்துநர், பராமரிப்பு பணியாளர்களை ஒப்பந்தம் மற்றும் நிலையான விதிகளுக்கு உள்பட்ட 240 நாள்களில் பணி நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசிடம் வலியுறுத்த உள்ளோம். மேலும் வாரிசுதாரர் வேலை, பயணத்தூரம், காண்ட்ராக்ட் முறை ஒழிப்பு, மிகை பணியாற்றும் ஊழியர்களுக்கு சட்டப்படியான ஊதியம் ஆகியவை வழங்க வேண்டும். போக்குவரத்து கழகங்களில் அலுவலகங்களில் பணியாளர் மற்றும் தொழில் நுட்ப பணியாளர்கள் நியமனத்தை விரைவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை இந்த கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
கருத்துக்கள்

முன்பு நாளொன்றுக்கு 100 உரூபாய் இருந்தாலும் தீராத உணவுச் சிக்கல் இன்று மாதம் உரூபாய் அளவில் முடிந்து விடுகிறது. ஆனால் இப்படிப்பட்ட சாதனைகளுக்காக மக்கள் வாக்கு அளிக்கவில்லை. மக்கள் நன்றி மறவாதவர்கள் என்றால் பணப்பரிமாற்றம் ஏன் நடைபெற்றது?சாதனைகளை எண்ணும் மக்கள் காங்கிரசால் ஏற்பட்ட வேதனைகளையும எண்ணினால் வாக்களிப்புவேறுவகையாக மாறியிருக்கலாம். எனவே இது வாக்கு அளிப்பு வணிகத்தைத் திறம்பட நடததியமையால் கிடைத்த வெற்றி என்பதுவே உண்மை.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/1/2010 3:07:00 AM

தி.மு.க.உக்கு கிடைத்த வெற்றி அல்ல இது ' பணம் படைத்தவன் & அராஜகம் செய்பவனுக்கு கிடைத்த வெற்றி.

By pannadai pandian
3/31/2010 8:06:00 PM

யார் சொன்னது நாங்கள் பின் தங்கி இருக்கிறோம் என்று . 1 . எங்களது ஆட்சியில் டாஸ்மார்க்கின் வளர்ச்சியில் முக்கிய பங்கு தமிழகத்துக்கு உண்டு , கடந்த ஆண்டு இறுதியின் கணக்கு எடுபின் படி நாங்கள் 37 % அரசுக்கு வருமானம் பெற்றுள்ளோம் . இது அடுத்த ஆண்டு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்கிறோம். 2 .தேவை இல்லாமையால் நிறைய பாலங்கள் கட்டப்பட்டுள்ளது . 3 . அனைவருக்கும் அடுத்த ஆண்டு முதல் ஒரு குடும்பதிருக்கு ராந்தல் விளக்கு தரப்படும் , மின்சாரம் இல்லாத நேரத்தில் ராந்தல் பயன் படுத்த அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்படும் . 4 . மணல் கடத்தும் தொழில் உலக நாடுகளுக்கு சொல்லி தரப்படும் , அரிசி கடத்தும் தொழிலும் அடங்கும் . 5 .மக்கள் தொகை கட்டுபடுத்துவதற்காக மருத்துவ துறை வணிகமக்கபடும் , போலி மருந்து கொண்டுவரப்படும் அதனால் பல மக்கள் தொகை பிறப்பு விகிதம் கட்டுபடுத்தபடும் . 6.விளை நிலம் அனைத்தும் கைப்பற்றப்பட்டு , சினிமாவில் அனைவருக்கும் சொகுசு வீடு கட்டி தரப்படும். மலரட்டும் மீண்டு ம் DMK உங்கள் ஆட்சி ! வாழ்க பணநாயகம் ! வளர்க உங்க குடும்பம் ! by S பிரபு,chennai,India 31-03-2010 14:30:31 IST

By pannadai pandian
3/31/2010 3:52:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக