வியாழன், 1 ஏப்ரல், 2010

பத்ம விருதுகளை வழங்கினார் பிரதிபா பாட்டீல்புது தில்லி, மார்ச் 31: புது தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வழங்கினார்.
÷தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், கர்நாடக இசைக் கலைஞர் உமையாள்புரம் சிவராமன், நாடகத் துறையைச் சேர்ந்த இப்ராஹிம் அல்காஜி, அப்பல்லோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப் சந்திர ரெட்டி ஆகியோருக்கு பாரத ரத்னாவுக்குப் பிறகு நாட்டின் 2-வது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.
÷இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹிந்தி நடிகர் ஆமிர் கான், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நாராயணன் வகுள் ஆகியோர் பத்ம பூஷண் விருது பெற்றனர்.
÷பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால், கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், ஹாக்கி வீரர் இக்னேஸ் திர்கே, நடிகை அருந்ததி நாக், மத்திய புலனாய்வுத் துறை முன்னாள் இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன், தமிழகத்தைச் சேர்ந்த திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி (கல்வியாளர்), டாக்டர் ஜலகண்டபுரம் ராமசாமி கிருஷ்ணமூர்த்தி (மருத்துவம்), டாக்டர் ரங்கநாதன் பார்த்தசாரதி (இலக்கியம், கல்வி), சர்வதேச கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், தொழிலதிபர்கள் டி.என்.மனோகரன், வேணு சீனிவாசன் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

கருத்துக்கள்

பத்ம விருதுகளையும் சமற்கிருதம், அரபி மொழி அறிஞர்களுக்கான விருதுகளையும் வழங்கக் குடியரசுத் தலைவருக்கு நேரம் இருக்கும் பொழுது தமிழ் அறிஞர்களுக்கான விருதுகளை மட்டும் வழங்க ஏன்நேரம் இல்லை என்பது புதிராக உள்ளது! வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/1/2010 3:14:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

1 கருத்து:

  1. தமிழ் அறிஞர்களுக்கு விருது தர நேரம் இல்லையா? உண்மமயாகவே?! நானும் வருந்துகிறேன். ஆனால் சோர்வு கொள்ளவில்லை. தமிழ் மொழியின் அருமை பெருமைகள் இந்தியாவுக்கு மட்டும் பெருமை சேர்ப்பவை அல்ல, மாந்த குலத்துக்கே பெருமை சேர்ப்பவை. இதெல்லாம் ஏதோ வெறும் உயர்வு நவிற்சி போல தோன்றலாம் ஆனால் உண்மை. இவை எல்லாம் உணரும் நாள் வரும்.

    பதிலளிநீக்கு