தம்மம்பட்டி, மார்ச் 28: தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலிலும் தற்போதுள்ள கூட்டணியே தொடரும் என்று, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:தமிழகத்தில் நடந்துவரும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல், எதிர்காலத்தில் இளைஞர் காங்கிரûஸ முதல் இயக்கமாக மாற்றும். இந்தியாவில் உள்ள அனைத்துத் துறைமுகங்களின் வர்த்தகங்களையும் உயர்த்தும் வகையில் துறைமுகங்களை நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 200 சிறிய துறைமுகங்களை இணைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றார் ஜி.கே.வாசன்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
3/29/2010 3:10:00 AM
3/29/2010 2:18:00 AM