செவ்வாய், 30 மார்ச், 2010

மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் தேவை!': நாகநாதன்சென்னை மாநில கல்லூரியில் மாநில திட்டக் குழு சார்பில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட நகர்ப்புற கட்டமைப்பு வசதி }​ போக்குவரத்து மற்றும் அது தொடர்பான பிரச்னைகள் குறித்த தேசிய கருத்தரங்கில்,​​ கருத்தரங்கு மலரை மாநில திட்டக்குழுத் துணைத் தலைவர் மு.​ நாகநாதன் வெளியிட,​​ பெற்றுக் கொள்கிறார் போக்குவரத்துத் துறை அமைச்சர் .என்.​ நேரு.​ உடன் ​(இடமிருந்து)​ நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பி.​ அன்பழகன்,​​ மாநில கல்லூரி பொருளாதாரப் பிரிவு தலைவர் டி.​ கோவிந்தப்பா நாயுடு,​​ சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி.
சென்னை, ​​ மார்ச் 29: மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று மாநில திட்டக் குழு துணைத் தலைவர் எம்.​ நாகநாதன் தெரிவித்தார்.​ சென்னை மாநிலக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியதாவது:​ இப்போதுள்ள அரசமைப்பு சட்டத்தின்படி,​​ மாநிலங்களுக்கு போதிய நிதி அதிகாரம் இல்லை.அரசு அமைத்த பல்வேறு கமிட்டிகள் இதுகுறித்து எடுத்துக் கூறிய பின்னரும் மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படவில்லை.​ உள்ளாட்சிகளை வலுப்படுத்துவதில் சரியான திசையில் செல்லும் வகையில் நடவடிக்கையை எடுக்க வேண்டும்.​ அரசமைப்பு சட்டத்தில் 73 மற்றும் 74}வது திருத்தங்கள் தேவையற்ற வகையில்,​​ மாநில அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்துக்கு இடையே விரிசல்களை ஏற்படுத்துவதாக உள்ளது.​ ​ ​​ இதன்மூலம் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.​ உள்ளாட்சி நிர்வாகம் தொடர்பான விஷயங்கள் போன்ற உயர் நிலையில் மேற்கொள்ளப்படும் முடிவுகளால் மத்திய,​​ மாநில மற்றும் உள்ளாட்சிகளிடையே சுமூக நிலை பாதிக்கும்.​ கலர் டிவி பயன்பாடு:​ நாட்டிலேயே ஏழை,​​ எளிய மக்களுக்கு வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை இலவசமாக வழங்கும் ஒரே மாநிலமாக தமிழகம் உள்ளது.​ இதுவரை தமிழகத்தில் 1.08 கோடி வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.​ ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு,​​ மேலும் 44.8 லட்சம் வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளும் வரும் டிசம்பர் மாதத்துக்குள் வழங்கப்படும்.இத்தகைய வசதிகளின் பயனை வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் மட்டுமே அனுபவிக்கின்றனர்.​ ​ ​​ இதில் சீனா மட்டுமே விதிவிலக்கு.​ இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே அதிக குடும்பங்களில் டிவி பயன்பாடு உள்ளது என்றார் நாகநாதன்.​ கருத்தரங்கில் அரசு முதன்மை செயலர் தேவேந்திரநாத் சாரங்கி,​​ கல்லூரி முதல்வர் எம்.​ கலியப்பெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம் தேவை எனத் திடீர்திடீரென்று குரல் கொடுத்துப் பயனில்லை. எந்தெந்த அதிகாரங்கள் மாநில அரசிற்கு வழங்கப்படாமல் இடையூறுகள் ஏற்படுத்துகின்றன. எந்தெந்த அதிகாரங்கள் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனப் பட்டியலிட்டு நாட்டு மக்கள் விழிப்புணர்வு அடையும் வகையில் அறிவி்க்க வேண்டும். அப்பொழுதுதான் ஆளும்கட்சியின் கோரிக்கையாகக் கருதாமல் மக்களின் தேவையாகப் பார்ப்பார்கள். அனைவரும் இணைந்து குரல் கொடுத்து மாநிலத் தன்னாட்சியைப் பெற வேண்டும். காங்கிரசிடம் கொண்டுள்ள அடிமைப் புத்தியை அகற்றினாலேயே இதற்கான வாய்ப்புஉருவாகும்.முன்பு தனிக்கொடி வேண்டிய திமுக இப்பொழுது காங்கிரசு கொடியை ஏந்துவதற்கு வெட்கப்படவில்லையே! கண்களை மறைக்கும் பதவி நலக் கட்டு அவிழ்க்கப்பட்டால் தமிழ்நாடு ஒளி பெறும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/30/2010 3:10:00 AM

imm... கலர் டிவி பயன்பாட்டுல..நாட்டிலேயே தமிழகம் முதலிடம் !.... இலவசம் என்னும் பேரால் மக்களின் வரிப் பணத்த அள்ளி தெளுச்சுப் புட்டீங்கே !! குரங்கு கையில பூ மாலைய கொடுத்த கதையாப் போச்சு !!! மாநிலத்துக்கு அதிக அதிகாரம் வேணுமா ???....இஸ்ட்டத்துக்கு ஆட்டம் போட உங்களை யாரும் தணிக்கை பண்ணப் புடாதுன்னு நெனக்கிறீங்க !!!!! பயப் புடாதீங்க மக்களுக்கு ஒன்னும் விவரம் புரியாது !!!!

By rajasji
3/30/2010 2:17:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக