டெங்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டெங்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 அக்டோபர், 2012

முறிவுநோய் குறித்து அஞ்சற்க!

சொல்கிறார்கள்

"டெங்கு குறித்து ப் பீதி வேண்டாம்!'
"டெங்கு' காய்ச்சல் பற்றி, மருத்துவர் மதுபாஷிணி: எல்லா காய்ச்சலையும் போலத் தான், "டெங்கு'வும். முதல் இரண்டு நாட்கள் இருக்கும். "பாரசிட்டமால்' மருந்துகளை எடுத்துக் கொண்டால் போதும். இதிலேயே, 99 சதவீதம் பேருக்கு சரியாகி விடும். காய்ச்சல், உடல் வலி, தலைவலி, மயக்கம், வாந்தி என, இதில் ஏதாவது ஒன்று இருக்கலாம்; ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகள், சேர்ந்தும் வரலாம். 2009ம் ஆண்டு, உலக சுகாதார நிறுவனம், டெங்கு காய்ச்சலை, இரண்டு வகையாகப் பிரித்தது. ஒன்று, சிக்கல் இல்லாத சாதாரண காய்ச்சல்; இரண்டாவது ரத்தக் கசிவுள்ள தீவிர காய்ச்சல்.
டெங்குவால் ஏற்படும் சாதாரண காய்ச்சலுக்கு, பொதுவாக, பாரசிட்டமால் மாத்திரை எடுத்துக் கொண்டாலே, சரியாகி விடும். பெரும்பாலானோருக்கு ஏற்படுவது, இந்த வகை காய்ச்சல் தான். இரண்டாவது வகையில், ரத்த அழுத்தம் குறையும். 1 சதவீதம் பேருக்கு மட்டுமே, இந்த வகை டெங்கு ஏற்படுகிறது. இதில், நம் ரத்தத்திலுள்ள தண்ணீர், உள் உறுப்புகளில் கசியக் கூடும்; இது தான் ஆபத்தானது. நம் ரத்தத்தின், ஒரு மைக்ரோ லிட்டரில் (ஒரு மில்லி லிட்டருக்கும் குறைவான அளவு), 1.5 முதல், 4.5 லட்சம் வரை தட்டை அணுக்கள் உள்ளன. இந்தத் தட்டை அணுக்கள் குறைந்தால் ஆபத்து. தட்டை அணுக்கள், 10 ஆயிரத்திற்குக் கீழே குறையும் போது, நாங்கள் அதை உடலில் செலுத்துவோம். டெங்கு பாதிப்பு உள்ளது என தெரிந்தால், முதலிலேயே தட்டணுக்களை செலுத்தலாமே என, சிலர் கேட்கின்றனர். அதனால், எந்தப் பலனும் இல்லை. தேவையில்லாத போது செலுத்தும் தட்டை அணுக்கள், அழிந்து போய்விடுமே தவிர, உடலில் தங்காது.
"ஆன்ட்டிபயாட்டிக்'குகள், பாக்டீரியா தொற்றுக்கு மட்டுமே, பலன் தரக் கூடியவை. தேவையில்லாமல், "டெங்கு' காய்ச்சலுக்கு சிலர் இதை சாப்பிடுகின்றனர். சிலர், வலி நிவாரணிகளையும் எடுத்துக் கொள்கின்றனர். இவை இரண்டுமே, தவறு. வலி நிவாரணிகள், ரத்தத் தட்டை அணுக்களைக் குறைக்கும் வாய்ப்புள்ளது. "டெங்கு' பாதித்தவர்கள், நிறைய திரவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியும் குறையவில்லை என்றால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. மற்றபடி இந்தளவிற்கு பீதியடையத் தேவையில்லை. ஏனெனில், "டெங்கு' காய்ச்சலால் இறப்பவர்கள், 1 சதவீதம் பேர் தான்.

வியாழன், 18 அக்டோபர், 2012

நான் ஒரு மருத்துவ த் தூதர்: மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு

நான் ஒரு மருத்துவ த் தூதர்: மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு


சென்னை:"டெங்கு' காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளி மாணவர்களை "மருத்துவ தூதராக' மாநகராட்சி அனுப்பி வருகிறது.சென்னையில் "டெங்கு' காய்ச்சலால், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொசு ஒழிப்பு குறித்து, பள்ளி மாணவர்கள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி ஈடுபட்டுள்ளது."மருத்துவ தூதர்'மண்டல சுகாதார அதிகாரிகளால், பள்ளி மாணவர்கள் அனைவருக்கும், ஒரு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அதில், "என் வீட்டிற்கும் தெருவுக்கும், நான் ஒரு மருத்துவ தூதர்' எனவும், மாணவ, மாணவியர் பெயர், படிக்கும் வகுப்பு, பள்ளியின் பெயர் போன்ற விவரங்களும், குறிப்பிடப்பட்டுள்ளன.தூய்மையான நீரில்...அட்டையின் மறுபக்கம், ஆட்டுக்கல், தேங்காய்ஓடு, வாழை மரம், டயர், வாளி, குளிர் சாதனங்கள், திறந்த கிணறு, திறந்த மேல்நிலை தொட்டி, பூந்தொட்டி, அடைபட்ட மாடிகள், பிளாஸ்டிக் கப் போன்ற படங்கள் அடங்கிய வாசகத்துடன் அட்டை உள்ளது.

மேலும், இந்த பொருட்களில் தேங்கி நிற்கும், தூய்மையான நீரில் இருந்து, கொசு உற்பத்தியாகி, "டெங்கு' உள்ளிட்ட நோய்கள் பரவுகிறது என, குறிப்பிடப்பட்டுள்ளது.இது குறித்து மண்டல நல அலுவலர் ஒருவர் கூறியதாவது:கொசு ஒழிப்பு குறித்து, தங்கள் வீட்டுக்கு மட்டுமில்லாமல், தெருவில் உள்ள அனைவருக்கும் மாணவ, மாணவியரை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

என்புமுறிவுக் காய்ச்சலில் உயிர் தப்புவது எப்படி?

பகலில் கடிக்கும் கொசுக்களால் பரவுகிறது: என்புமுறிவுக் காய்ச்சலில் உயிர் தப்புவது எப்படி?
பகலில் கடிக்கும் கொசுக்களால் பரவுகிறது: டெங்கு காய்ச்சலில்
 உயிர் தப்புவது எப்படி?
எலிக் காய்ச்சல், பறவை காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் என்று உலகில் உருவெடுக்கும் புது புது காய்ச்சல்கள் அத்தனையும் நம்மை ஒரு புரட்டு புரட்டி விட்டது. இப்போது “டெங்கு” காய்ச்சல் மிரட்டுகிறது. லேசான உடல் வலி... கொஞ்சம் வெப்பம் உடலில் தெரிந்தாலே டெங்குவாக இருக்குமோ என்ற பயம் தொற்றிக் கொள்கிறது.

டெங்குவை நினைத்து பீதி அடைவதை விட அதைப் பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். பொதுவாக கொசுக்களால்தான் பல வியாதிகள் பரவுகிறது. ஆனால் டெங்குவை பரப்பும் கொசுக்கள் பகல் நேரத்தில்தான் கடிக்கும் ஏடிஸ் ஏஜிப்டி என்ற வகையை சேர்ந்த இந்த கொசுக்கள் தென் கிழக்கு ஆசியா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய வெப்ப மண்டல நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது.

டெங்கு வைரசில் டைப்-1, டைப்-2, டைப்-3 மற்றும் டைப்-4 அகிய 4 வகை வைரஸ்கள் உள்ளது. தண்ணீர் தேங்கும் பகுதிகள், மக்கள் நெரிசல் மிகுந்த இடங்கள், பாசன பகுதிகளில் ஈடிஸ் கொசுக்கள் உற்பத்தி தாராளமாக இருக்கும். டெங்கு காய்ச்சலாக இருந்தால் காய்ச்சல் திடீரென ஏற்பட்டு திடீரென உடல் வெப்பம் அதிகரிக்கும். தலைவலி, உடல்வலி, எலும்பு மூட்டுகளில் வலி இருக்கும்.

2 நாட்களுக்கு மேல் தொடர் காய்ச்சல் இருந்து கொண்டே இருக்கும். காய்ச்சல்தானே ஒரு மாத்திரை வாங்கி போட்டால் சரியாகிவிடும் என்று நாமே மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உடனே ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டும்.

டெங்கு டைப்-1 பாதிப்பால் தொடர்ந்து ஒரு வாரம் காய்ச்சல் இருக்கும். வேறு பாதிப்புகள் இருக்காது. ஒரு முறை டெங்குவால் பாதிக்கப்பட்டு சில நாட்கள் இடை வெளியில் மீண்டும் டெங்கு காய்ச்சல் வந்தால் 2-ம் நிலையில் இருப்பவர்களாக கருதப்படுவார்கள். ரத்தம் உறைவதற்கு தேவையான ரத்த வட்டுகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படும், வாய், மூக்கு பகுதிகளில் ரத்தம் வெளிவரும். இதில் நோய் முற்றியவர்கள் டைப்-3க்கு தள்ளப்படுகிறார்கள்.

இவர்களுக்கு ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து ரத்த அழுத்தம், நாடி துடிப்பு குறையும். மயக்கம் ஏற்படும். உடலில் ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள் ஏற்படும். டைப்-2, டைப்-3 நிலையில் இருப்பவர்கள்தான் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும். ஆனால் இப்போது முதல் நிலை பாதிப்பு மட்டுமே இருப்பதால் பீதி அடைய வேண்டியதில்லை. டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்த:- வெள்ளை அணுக்களின் மொத்த அளவை பரிசோதனை செய்தல், அதாவது ரத்தத்தில் சாதாரணமாக இருக்க வேண்டிய லியூகோ சைட்ஸ் என்ற வெள்ளை ரத்த அணுக்களின் அளவு (4000-10,000 சி.எம்.) எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை பலிசோதனை செய்தல். எதிர்ப்பு சக்தியை பரிசோதனை செய்யும் ரத்த நிண நீர் பரிசோதனை ஆகியவைகள் இந்த நோயை கண்டுபிடிக்க பயன்படும்.

கொசுக்கடியில் இருந்து காப்பதன் மூலம் டெங்கு வராமல் தடுக்கலாம். எனவே வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தொட்டிகள், குடங்களில் பல நாட்கள் தண்ணீரை சேமித்து வைப்பதை தவிர்க்க வேண்டும். எப்போதும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.