சனி, 27 மார்ச், 2010

குழம்பிய குட்டையும்,​​ காங்கிரஸூம்...



நாம் உடனடியாக கவனித்தாக வேண்டிய முக்கியமான பிரச்னை நம் நாட்டு பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்தா.​ உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நம்முடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளவை எவை என்பதை முதலில் நாம் தெளிவாக அடையாளம் காண வேண்டும்.​ மாவோயிஸ்டுகளும் பிற தீவிரவாதிகளும் நம் நாட்டில் ஏற்படுத்திவரும் குழப்பங்களைத் தீர்க்க உத்திகள் வகுக்க வேண்டும்.​ மும்பையில் 2008 நவம்பர் 26-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாகவும் அதற்கு மூளையாக இருந்து செயல்பட்டவரும் அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் உளவாளியாக ஒரே நேரத்தில் செயல்பட்டவருமான டேவிட் ​ ஹெட்லியை விசாரணைக்காக இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பது தொடர்பாகவும் அமெரிக்கா முன்னுக்குப் பின் முரணாகவும் சுயநலப் போக்கிலும் நடந்து கொள்வது சற்றே குழப்பம் தருவதாக இருக்கிறது.​ ஆப்கானிஸ்தான் போர்க்களத்தில் தனக்குப் பதிலாக பாகிஸ்தானை முழுதாக இறக்கிவிட்டுவிட்டு தக்க சமயத்தில் வெளியேற அமெரிக்கா நினைத்திருப்பதால் பாகிஸ்தானுக்குச் சாதகமாக நடந்துகொள்ள விரும்புகிறது.​ எனவேதான் பயங்கரவாத எதிர்ப்பு விவகாரத்தில் முன்னுக்குப் பின் முரணாகச் செயல்படுகிறது என்று தோன்றுகிறது.​ ஆப்கானிஸ்தானில் தலிபான்களை எதிர்க்கும் போரை எதிர்காலத்தில் பாகிஸ்தான்தான் முழுப் பொறுப்பேற்று நடத்த வேண்டியிருக்கும்.​ இதற்காக அந் நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா முகம்மது குரேஷியுடன் அமெரிக்க அரசு பேசவிருக்கிறது.​ அந்தப் பேச்சில் பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி ஏ.பி.​ கயானி,​​ ஐ.எஸ்.ஐ.​ என்று அழைக்கப்படும் உளவு அமைப்பின் தலைவர் லெப்.​ ஜெனரல் ஷுஜா பாஷா ஆகியோரும் பங்கேற்கவிருக்கின்றனர்.​ பாகிஸ்தானில் உண்மையில் அதிகாரம் பெற்றவர்கள் இவர்கள்தான்.​ நாம் இப்போதுதான் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும்.​ மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஓராண்டில் சொல்லிக்கொள்ளும்படியாக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.​ பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க வேண்டும் என்று ஓயாமல் கிளிப்பிள்ளை போல சொல்லும் அமெரிக்கா,​​ தலிபான்களை எதிர்த்துப் போராடுவதற்காகப் பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நவீன ராணுவ சாதனங்களையும் ஆயுதங்களையும் வழங்கி வருகிறது.வருகிறது.​ மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி திரும்ப பராக் ஒபாமாவின் வெளிநாட்டுக் கொள்கை எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது என்று அமெரிக்கர்கள் இப்போது பகிரங்கமாகவே கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர்.​ ​​ டேவிட் ஹெட்லி அமெரிக்கக் குடிமகன்.​ அவர் மன்னிப்பு கோரி,​​ உண்மைகளைத் தெரிவிக்க முன்வருகிறார் என்பதற்காக மும்பையில் அவருடைய வழிகாட்டலில் நடந்த படுகொலைகளுக்கான தண்டனையைத் தராமல் எப்படி அவரைவிட்டுவிட முடியும்?​ அவரை இந்தியாவுக்கு மேல் விசாரணைக்காக அனுப்பிவைக்க வேண்டும்;​ பயங்கரவாதிகள் அமெரிக்கக் குடியுரிமை பெற்றிருந்தால் அவர்களுக்கு மட்டும் தனிச்சட்டம் அமலாகுமா என்ன?​ ​​ பாகிஸ்தானை தாஜா செய்யும் அமெரிக்காவின் செயலை இந்திய அரசியல்வாதிகளும் மக்களும் ஏற்கமாட்டார்கள்.​ கடந்த காலங்களில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு அமெரிக்கா அளித்த நவீன ஆயுதங்கள் எல்லாம் இந்தியாவுக்கு எதிராகத்தான் பயன்படுத்தப்பட்டன.​ பராக் ஒபாமா சிறந்த பேச்சாளர்;​ பதவிக்கு வருவதற்கு முன்னர் அவர் நன்றாகப் பேசியதால்தான் உலக சமாதானத்துக்காக அவர் பாடுபடுவார் என்ற எதிர்பார்ப்பில் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.​ பயங்கரவாதத்துக்கு எதிராகப்போரிடுவேன் என்று இடைவிடாமல் அவர் பேசியதற்கும் பாகிஸ்தானுக்கு நவீன ராணுவ ஆயுதங்களை வழங்கியதற்கும் பொருத்தம் இருக்கிறதா என்று கேட்க விரும்புகிறேன்.​ பாகிஸ்தானுடனான யுத்தங்களுக்குப் பிறகு நம்முடைய போர் வீரர்களால் கைப்பற்றப்பட்ட சாபர் ஜெட் போர் விமானங்களும் பேட்டன் டாங்குகளும் நமக்கு உணர்த்திய உண்மைகள் என்ன?​ அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்த எடுத்து வந்தது என்பதைத்தானே?மாவோயிஸ்டுகளால் விளைந்த நாச வேலைகளை நாம் நிறையப்பார்த்துவிட்டோம்.​ மாவோயிஸ்டுகளின் தாக்குதலை முறியடிப்பதில் மாநில அரசுகள் இப்போது முன்பைவிட வலுவாக உள்ளன.​ பழங்குடிகளின் நலனுக்காகத்தான் மாவோயிஸ்டுகள் இப்படி அரசு மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்று தவறாக எண்ணக்கூடாது;​ பழங்குடிகளின் கோரிக்கைகள் -​ பிரச்னைகள் வேறு,​​ மாவோயிஸ்டுகளின் நோக்கமே வேறு.​ மாவோயிஸ்டுகளின் கொள்கைகளையும் கோரிக்கைகளையும் எந்தச் சமூகமும் ஏற்காது.மாயாவதியும் பகுஜன் சமாஜ் கட்சியும் தவறான காரணங்களுக்காகவே தொடர்ந்து செய்தி ஊடகங்களால் பேசப்படுகின்றனர்.​ ​ ​ ​தன்னுடைய பிறந்தநாள் ​பொதுக்கூட்டத்தைச் சீர்குலைக்க மேடைக்கு அருகில் இருந்த தேன் கூடு கலைக்கப்பட்டதாக போலீûஸ விட்டு வழக்கைப் பதிவுசெய்துவிட்டு,​​ முதுபெரும் சோஷலிஸ்ட் ராம் மனோகர் லோகியாவின் சிலைக்கு மாலையிட முடியாமல் முலாயம் சிங் தடுக்கப்பட்டார்.​ இத்தகைய அற்பச்செயல்களால் உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்குதான் அதிகரிக்கும்.​ தேர்தலில் மக்கள் அளிக்கும் அமோக ஆதரவு என்பது ஓர் அரசியல்தலைவரின் சொந்தத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக அல்ல;​ இதற்கு மாயாவதியும் விதிவிலக்காக இருக்க முடியாது என்று நினைவுபடுத்த விரும்புகிறேன்.​ தமிழ்நாட்டில் எதிர்காலத்தில் 2 மனைவியர்,​​ அவர்களுடைய பிள்ளைகள்,​​ அவர்களுடைய குடும்பச் சொந்தங்கள் இடையே சண்டை மூளப்போகிறது.​ நீண்ட காலத்துக்கு சண்டையை நிகழ்த்தும் "ஆற்றல்' சம்பந்தப்பட்ட அனைவரிடமும் இருக்கிறது.​ இதில் காங்கிரஸ் கட்சிக்கு பங்கு ஏதும் இல்லை என்றாலும் பக்கத்திலிருந்து வேடிக்கை ..​​ இதை தன்னுடைய எதிர்காலத்துக்கு எப்படிச் சாதகமாகப் ​ பயன்படுத்திக் கொள்வது என்று சிந்திக்கவும் அதற்கு நிரம்ப அவகாசம் கிடைக்கும்.​ மாவோயிஸ்டுகள் தன்னலம் பாராத தியாகிகள்,​​ ஏழைகள்,​​ பழங்குடிகளின் நலன்களுக்காகத்தான் அவர்கள் ஆயுதம் எடுத்துப் போர் செய்கிறார்கள் என்று எழுதியும் பேசியும் வந்த ஊடகங்கள் இப்போது தங்களுடைய தவறை உணர்ந்து,​​ ஆதரவு அளிப்பதை நிறுத்தி வருகின்றன.​ மத்திய,​​ மாநில அரசுகளின் கூட்டுப்படைகள் இப்போது மாவோயிஸ்டுகளின் மறைவிடங்களை நோக்கி முன்னேறிச் செல்கின்றன.​ இதனால் ஏற்பட்டுள்ள விரக்தியில் இதுவரை இருந்திராத வகையில்,​​ எதிர்பாராத இடத்தில்,​​ எதிர்பாராத நேரத்தில் மூர்க்கத்தனமாக மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தக்கூடும்பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதைப் போல காட்டிக்கொண்டே,​​ இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தைத் தூண்டிவிடும் இரட்டை வேடத்தை பாகிஸ்தான் அற்புதமாகப் போடுகிறது.​ பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை வலு கிடைக்காமல் போனதால் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமற்ற நிலையை அந்த நாட்டு ராணுவமும் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யும் தங்களுக்குச் சாதகமாகவே நன்கு பயன்படுத்திக்கொள்கின்றன.​ பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அவர்களுக்கு உள்ள உண்மையான அக்கறை எப்படிப்பட்டதென்று பாகிஸ்தானுடன் அமெரிக்கா நடத்தும் பேச்சுக்குப் பிறகுதான் ​ தெரியும்.​ உண்மை என்னவென்றால் இராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் ஆழம் தெரியாமல் காலை வைத்துவிட்ட அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் அங்கிருந்து வெளியேறியே தீர வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கின்றன.​ இவ்விரு நாடுகளிலும் அன்றாடம் நடக்கும் மனிதவெடிகுண்டு தாக்குதல்களும்,​ அதையொட்டி தங்கள் நாட்டில் மக்களிடம் பெருகிவரும் அதிருப்தியும் அவர்களை மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக்கி ​.​ அமெரிக்காவும் பாகிஸ்தானும் வெளியுறவு அமைச்சர்கள் நிலையில் பேசவிருக்கின்றன.​ ஒபாமாவும் அவருடைய நெருங்கிய ஆலோசகர்களும் உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்று இந்த பேச்சுக்குப் பிறகு தெரிந்துவிடும்.​ நியூயார்க்கில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை ஒரு கண்ணோட்டத்திலும் மும்பைத் தாக்குதலை வேறு கண்ணோட்டத்திலும் பார்ப்பது என்று அமெரிக்கா தீர்மானித்துவிட்டால் அது மிகவும் துரதிருஷ்டவசமானதுதான்.

திமுகவில் இப்போது அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையில் மோதல் முற்றிவருகிறது.​ வாரிசு அரசியலால் களத்துக்கு வந்த இருவரில்,​​ யார் அடுத்த வாரிசு என்பதில் திட்டவட்டமான நிலைமை இல்லாததால் இந்தச் சண்டைகள் ஏற்படுகின்றன.​ கட்சியின் தலைவர் இவர்களைக் கட்டுப்படுத்தும் திறனை இழந்துவிட்டதால் இத்தகைய சண்டைகளை அவரால் தடுக்க முடியவில்லையோ என்று தோன்றுகிறது.​
பாட்டாளி மக்கள் கட்சியை இனி எந்த அணியும் நம்பாது;​ அடுத்து எந்த அணி வெற்றி பெறுகிறதோ அதில் தேமுதிக இணைந்துவிடக்கூடும்.​ அதிமுக தலைவர் ஜெயலலிதா தன் பங்குக்கு எதையும் அதிகம் செய்ய வேண்டிய தேவையே இருக்காது.​ அரசியலில் நிரந்தரம் என்று எதுவுமே கிடையாது.​ எனவே திமுகவுக்குச் சாதகமாக இப்போது இருக்கும் அலை,​​ எதிராக எப்போது வேண்டுமானாலும் திரும்பலாம்.​ திமுக நல்ல கூட்டணிக் கட்சிதான் -​ எப்போது என்றால் தாங்கள் விரும்பும் துறைகளைப் பெறும்போதும்,​​ பெரும்பான்மை வலு இல்லாவிட்டாலும் தனித்தே ஆட்சி நடத்த அனுமதிக்கப்படும்போதும்தான்.​ தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி புதிய உறுப்பினர்களைச் சேர்த்து தன்னை வலுப்படுத்திக் கொள்வதை திமுக சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கும்;​ ராகுல் காந்தி ஏதோ வருகிறார்,​​ போகிறார் -​ இளைஞர் காங்கிரûஸத்தான் வலுப்படுத்துகிறார் அதனால் என்ன என்று திமுக சும்மா இருந்துவிடாது;​ ராகுல் காந்தியின் செயலால் காங்கிரஸ் கட்சிக்கு வலு கூடிவிடாது என்று திமுக தலைமை குறைத்து மதிப்பிடாது.​
​​ கருணாநிதியின் காலத்திலேயே கட்சிக்கும் ஆட்சிக்கும் அடுத்த வாரிசை அடையாளம் கண்டுவிட வேண்டும் என்ற கட்சிக்குள் தீவிர நடவடிக்கைகள் தொடங்கலாம்.​ மு.க.​ ஸ்டாலின்தான் கருணாநிதியின் அரசியல் வாரிசு என்று திட்டவட்டமாகத் தெரியவந்தால் கொந்தளிப்பு ஏற்படலாம்.​ அது திமுக குடும்பத்திலும் தோழமைக் கட்சிகளிடத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.​ குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கக் காங்கிரஸ் தயாராகிக் கொண்டு வருகிறது என்றுகூட நம்ப இடமிருக்கிறது.விஷம் போல ஏறிவரும் விலைவாசிதான் சாமானிய மக்களுக்கு முக்கிய பிரச்னை.​ அரிசி,​​ கோதுமை போன்ற உணவு தானியங்களின் விலை உயர்வைப் போலவே போக்குவரத்துச் செலவு,​​ கல்விச் செலவு,​​ மருத்துவச் செலவு போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.​ தொலைக்காட்சிகளின் வர்த்தக விளம்பர ஒளிபரப்பினால் மக்களிடம் அதிகரித்துள்ள நுகர்வுக் கலாசாரத்தாலும் குடும்பச் செலவு என்பது எவராலும் கட்டுக்குள் வைக்க முடியாதபடி பெருகிக் கொண்டே வருகிறது.​ மானியங்களைக் குறைக்க வேண்டும் என்று அரசு நினைப்பதைத் தவறு என்று கூறிவிட முடியாது;​ அதேசமயம் மாதம்தோறும் 5,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாய்வரை மட்டுமே ஊதியம் பெறுவோர் நிலைமைதான் என்ன?​ ​​ இந்த ஆட்சிக்குத் தேவையான கொள்கைகளை வகுப்போரும் அமல் செய்வோரும் இந்த விலைவாசி உயர்வால் சிறிது கூட பாதிக்கப்படவேயில்லை என்பது உண்மையே.​ அரசியல் களத்தில் வெற்றி,​​ தோல்வியாளர்களைத் தீர்மானிப்பது சாமானிய மனிதன்தான் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.​ அந்த சாமானிய மனிதன் விலைவாசி உயர்வால் பாதிக்கப்படுபவன்.​ பாதிக்கப்பட்டிருப்பவன்.​ அவனைப் பற்றி கவலைப்படாமல் இருந்தால்கூடப் பரவாயில்லை.​ வலிய விலைவாசி யை அதிகரித்துச் சீண்டினால் விளைவு சாதகமாக இருக்காது!
கருத்துக்கள்

அழகிரி, தாலின் இருவரிடையே அடுத்த வழியுரிமையர் யார் எனப் போராட்டம் இருப்பதாகத் தவறாகக் கணிக்கப்பட்டுள்ளது. மூத்தவருக்குக் கட்சித் தலைமையை அளிப்பதற்காக நடத்தப்படும் நாடகம்தான் இது. (கலைஞர் குடும்பத்தினருக்கும் மற்றவர்களுக்கும் இடையில் போட்டி என்றில்லாமல் அவரது குடும்பத்தினருக்கு இடையே மட்டும் போட்டி என்னும் சூழலை உருவாக்கியமையால்) போட்டியில் யார் தோற்றாலும் வெல்லப்போவது கலைஞரின் குடும்பத்தினர்தான் என்பதை அறிவர். எனவே, அடுத்த முதலமைச்சர் யார் என அறிவித்தது போல் அடுத்த தலைவர் யார் என அறிவிக்கவும் அதற்காக மூத்தவரின் ஈகங்களையும் திறமைகளையும் பட்டியலிட்டு இவரை விட வேறு யார் தகுதியானவர் எனக் கூறச் செய்வதிலுமே கட்சியின் கவனத்தைத் திருப்பும் வெற்றியே இது. கலைஞரைக் குறைவாக எடை போட வேண்டா.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/27/2010 3:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
லையங்கம்:நல்லது நடக்கட்டும்



மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக முதல்வர் கருணாநிதியின் நேரடிப் பார்வையில் தனித்துறை அமைக்கப்படும் என்று அண்மையில் நிதிநிலை அறிக்கையின்போது அறிவிக்கப்பட்டது.​ இத்தகைய தனித்துறை அமைக்கப்படுவது இந்தியாவிலேயே தமிழகத்தில் முதலில் நடைபெறுகிறது.​ ​இதுநாள்வரை,​​ மாற்றுத்திறனாளிகள் தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் சமூக நலத் துறையின் கீழ்,​​ சமூக நல அமைச்சரின் பொறுப்பில் நடைபெற்று வந்தது.​ தற்போது முதல்வர் நேரடிப் பார்வையில் இத்துறை செயல்படும் என்றாலும்கூட,​​ இத்துறைக்கென தனி அமைச்சரை நியமித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.​ ஏனெனில் அதற்கான தேவை இருக்கிறது.​ ​இந்தியாவில் கடந்தமுறை எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களின்படி 2.9 சதவீதம் பேர் மாற்றுத் திறனாளிகள்.​ தமிழ்நாட்டில் இவர்களின் எண்ணிக்கை 16.42 லட்சம்.​ அதாவது 2.6 சதவீதம்.​ இதில் மிகவும் சிக்கலானதும்,​​ முக்கியமானதும் என்னவென்றால்,​​ இவர்களில் 70 சதவீதம் பேர் கிராமங்களில் உள்ளனர்.​ நகர்ப்புறங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மட்டுமே அரசின் நலத் திட்டங்களின் பயனைப் பெற முடிகிறது என்பதும்,​​ கிராமப்புறங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அரசின் பயனையும் பெறாமல் கல்வியும் பெறமுடியாமல் மெல்ல மெல்ல காலவெள்ளத்தில் பின்தள்ளப்படுகிறார்கள்.​ மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தில் 1.25 லட்சம் பேர் தங்களைப் பதிவு செய்துகொண்டுள்ளனர்.​ இவர்கள் மட்டுமே அரசின் பலன்களை பெறுகிறார்கள்.​ மற்றவர்கள் அரசின் நலத்திட்டம் பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் இருக்கின்றனர்.​ ​மாற்றுத் திறனாளிகள் நலத் திட்டத்துக்காக நடப்பு நிதிநிலை அறிக்கையில் ரூ.176 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.​ இத்திட்டத்தில்,​​ மாணவர்களாக இருக்கும் மாற்றுத் திறனாளிகளின் உணவுப் படி ரூ.200 லிருந்து ரூ.450 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.​ ஆயினும்,​​ இன்னும் செய்யவேண்டியவை நிறைய இருக்கின்றன.​ அவற்றைச் செய்யும்போது இன்னும் நன்றாக இருக்கும்.உடற்குறையால்,​​ பார்வையிழப்பால்,​​ செவித்திறன் குறைவால் 40 சதவீதம் பாதிக்கப்பட்டோர்,​​ மூளைவளர்ச்சி குன்றியோர் ஆகியோரை மாற்றுத் திறனாளிகள் என்று வகைப்படுத்துகிறார்கள்.​ ஆனால்,​​ இவர்களுக்காக நடைபெறும் சிறப்புப் பள்ளிகளின் எண்ணிக்கை,​​ சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர் எண்ணிக்கையைக் கணக்கிட்டால்,​​ அவை தேவைக்குத் தகுந்தபடியாக இல்லை.இத்தகைய மாற்றுத் திறனாளிகளின் கல்விக்காக சில திட்டங்கள் இருந்தாலும்கூட,​​ இன்றைய நவீன உலகத்துடன் போட்டியிடும் வகையிலான தொழிற்கல்வி அளிக்கும் புதிய பயிற்சிகள் அரசு நிறுவனங்களில் கிடைப்பதில்லை.​ வழக்கமாக சொல்லித்தரும் அதே காலாவதியான அதே தொழிற்பயிற்சிகளைத்தான் அளிக்கின்றனர்.​ சில தனியார் அமைப்புகள்,​​ வெளிநாட்டு நிதியுதவியைக் கொண்டு அமைத்துள்ள,​​ மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சிக் கூடங்கள் ஆச்சரியத்தை தந்தாலும்,​​ அரசுத் தரப்பில் இத்தகைய முயற்சிகள் இதுவரை இல்லை என்பதே உண்மை.​ ​மாற்றுத் திறனாளி என்பவர் இரண்டு வகையிலும் பாதிக்கப்பட்டிருப்பவர்.​ அவரால் மற்றவர்களைப்போல செயல்பட முடியாது என்பது ஒரு பாதிப்பு.​ மற்றவர்களுக்கு இணையாகச் சம்பாதித்தாலும்,​​ தனது ஊனத்தை சரிக்கட்ட ஒரு தனிநபரை அமர்த்திக்கொள்ளும் கட்டாயம் இருப்பதால் அவரது வருமானத்தின் கணிசமான பகுதி அதற்காக செலவாகிப் போகிறது.​ ​மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக தன்னார்வ அமைப்புகள் நடத்தும் பகல்நேர மையம்,​​ உண்டுறைப் பள்ளி ஆகியவற்றுக்கு அரசு நிதியுதவி அளிப்பதுடன்,​​ மாற்றுத்திறனாளிகளின் தேவைக்கேற்றபடி கட்டடங்கள் கட்டுவதற்காக மானியம்கூட தருகிறது.​ ஆனால் மிகச் சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மட்டுமே உண்மையான தொண்டினை அளிக்கின்றன.​ மற்றவர்கள் அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு,​​ வெறுமனே தலைகள் கணக்கைக் காட்டி சம்பாதிக்கின்றன என்பதுதான் நடைமுறை உண்மை.​ இத்தகைய மோசமான தன்னார்வத் ​ தொண்டு நிறுவனங்களின் பதிவை ரத்து செய்வதன் மூலம்,​​ ஓரளவு ஒழுங்கை நிலைநிறுத்த முடியும்.அரசு அலுவலகங்கள் மிகச் சிலவற்றில் மட்டுமே மாற்றுத் திறனாளிகளுக்காக சாய்தள மேடை அமைக்கப்பட்டிருக்கிறது.​ குறிப்பாக,​​ இத்தகைய சாய்தள வசதி கொண்ட பள்ளிகள் எத்தனை என்று கணக்கிட்டால்,​​ விரல்விட்டு எண்ணிவிடலாம்.விமான நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்காக தனி கழிவறைகள் உள்ளன.​ அவை அவர்தம் ஊனத்தைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட கழிப்பறைகள்.​ ஆனால் இத்தகைய கழிப்பறைகள் அரசு அலுவலகங்களிலோ அல்லது பள்ளிகளிலோ கிடையாது.​ உடற்குறை,​​ பார்வை குறையுள்ளவர்கள் மற்றவர் உதவியில்லாமல் இந்தக் கழிவறையைப் பயன்படுத்த முடியாது.​ கழிவறையில் உட்கார்ந்தபின் ஊன்றி எழுவதற்கு ஏதுவாக,​​ சுவரில் கம்பிகள் பொருத்தப்பட்ட கழிவறைகளே இல்லை.​ பேருந்துகளில்கூட ஊனமுற்றவருக்காக ஒரு இருக்கை உள்ளதே தவிர,​​ அந்த இருக்கை சாதாரண மனிதர் அமரும் அதே இருக்கைதான்,​​ 40 சதவீத உடற்குறை உள்ளவர் இந்த இருக்கையில் அமர்ந்து எழ முடியாது.​ ​மூளை வளர்ச்சி குன்றியவர்கள் நீங்கலாக,​​ மற்ற மூன்று வகைகளில் பாதிப்புகள் கொண்ட மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கான ஊதியத்தை சம்பாதிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித்தர அரசினால் முடியும்.​ மகளிர் சுயஉதவிக் குழுக்கள் போலவே,​​ மாற்றுத்திறனாளிகள் சுயஉதவிக் குழுக்களை ஏற்படுத்தலாம்.​ இவர்தம் திறமைக்கேற்ப அரசுத்துறை வேலைகளையே அயல்பணி ஒப்பந்தமாக செய்துகொள்ள முடியும்.​ மேலும்,​​ கோயில்களில் காலணி பாதுகாத்தல்,​​ பஸ்நிலையங்களில் சைக்கிள் ஸ்டாண்டுகள்,​​ பேருந்து நிலையங்களில் ஓய்வறை நிர்வாகம்,​​ பொருள் வைப்பு நிர்வாகம் ஆகியவற்றை இத்தகைய மாற்றுத்திறனாளிகள் சுயஉதவிக் குழுக்களுக்கு மட்டுமே வழங்கினால்,​​ அவர்கள் பொருளாதார ரீதியில் தங்களை மேம்படுத்திக்கொள்ள உதவியாக அமையும்.​
கருத்துக்கள்

எதையும் கூர்ந்து நோக்கி எழுதும் தினமணிக்கு என்ன நேர்ந்தது? ஏற்கெனவே இருந்த ஊனமுற்றோர் துறைதான் பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இது வரை சமூகநல அமைச்சிடம் இருந்த இத்துறை இப்பொழுது முதலமைச்சிடம் உள்ளது. இதற்கெனத் தனி அமைச்சுததுறை -அமைச்சர் இருந்தால்தான் தனித் துறை எனக் கூற வேண்டும். குடும்பக் குழப்பம், கட்சிக் குழப்பம் நீங்கி அலலது அவற்றைச் சமாளித்துத் தனி அமைச்சரை நியமித்ததும் பாராட்டுங்கள். இருபபினும் (பாராட்ட வேண்டும் என்ற துடிப்புடன் எழுதுகோலை எடுத்து எழுதத் தொடங்கியதை மன்னித்துப் பார்த்தால்) பிற கருத்துகளுக்குப் பாராட்டுகள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/27/2010 2:58:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
பென்னாகரம்:​ போதுமான பாதுகாப்பு அளிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் திமுக மனு



சென்னை, ​​ மார்ச் 26:""பென்னாகரம் தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளில் போதுமான அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்'' என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவிடம் திமுக மனு அளித்துள்ளது.இதுகுறித்து, ​​ திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு,​​ மக்களவை திமுக கட்சிக் கொறடா டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் நவீன் சாவ்லாவிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனுவின் விவரம்:""பதற்றமான வாக்குச் சாவடிகள் எவை என்பது குறித்த பட்டியலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளர் மற்றும் திமுக தேர்தல் பிரிவுச் செயலாளர் டி.எம்.செல்வகணபதி ஆகியோர் தனித் தனியாக அளித்துள்ளனர்.​ அதன்படி,​​ 250 வாக்குச் சாவடிகளில் 62 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என அறியப்பட்டுள்ளன.கடந்த காலங்களில் பென்னாகரம் தொகுதியில் தேர்தல் நடைபெற்றபோது இந்து மதத்தைச் சேர்ந்த உயர் ஜாதியினர் தலித் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்துள்ளனர்.எனவே,​​ பதற்றமான வாக்குச் சாவடிகள் என தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்திலும் போதுமான அளவுக்கு போலீஸôரை பணியில் ஈடுபடுத்த வேண்டும்.​ தலித் சமுதாயத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் அமைதியான முறையில் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும்.பென்னாகரம் தொகுதியில் சனிக்கிழமை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உடனடியாக இந்தப் பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று மனுவில் கூறியுள்ளனர்.
கருத்துக்கள்

ஆளும்கட்சியும் தோழமைக் கட்சியுமே இவ்வாறு கூறுவது அரசின் கையாலாகாதத் தன்மையை வெளிப்படுத்துவதாகப் பழி ஏற்படும். அல்லது வன்முறையைத் தூண்டிவிட்டு அடுத்தவர் மேல் பழி போடத் திட்டமிட்டுள்ளதாகத் தவறான எண்ணத்தை விளைவிக்கும். எப்படி இருந்தாலும் ஆளும் கட்சிக்கும் அரசிற்கும் இச் செயல் இழுக்கையே தேடித் தரும்.

வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/27/2010 2:39:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
அதிமுகவுடன் பாமக ரகசிய கூட்டு; வன்முறையைத் தூண்டவும் திட்டம்: கருணாநிதி திடீர் தகவல்



சென்னை, ​​ மார்ச் 26:​ பென்னாகரம் இடைத் தேர்தலில் அதிமுகவுடன் பாமக ரகசிய கூட்டு வைத்துள்ளதாக முதல்வர் கருணாநிதி புகார் தெரிவித்துள்ளார்.மேலும்,​​ வாக்குப் பதிவின்போது வன்முறையைக் கட்டவிழ்க்கவும் அந்தக் கட்சி திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.பென்னாகரம் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெறுகிறது.​ இந்த நிலையில்,​​ ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சியினருக்கு முதல்வரும்,​​ கூட்டணியின் தலைவருமான கருணாநிதி வேண்டுகோள் விடுத்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:""பென்னாகரம் இடைத் தேர்தலில் வேறு எந்தக் கட்சிக்கும் ஏற்படாத காழ்ப்பும்,​​ வெறுப்பும் பாமக நிறுவனர் ராமதாஸýக்கு ஏற்பட்டு இருக்கிறது.​ அதிமுகவுக்குக் கூட ஏற்படாத அளவுக்கு அவருக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது.திமுகவைப் பற்றியும்,​​ குறிப்பாக என்னைப் பற்றியும் ஒருமையிலே பேசி தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.பென்னாகரத்தில் அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் வேண்டுகோள் விடுத்து உரையாற்றினேன்.​ அதைத் தொடர்ந்து ராமதாஸ் ஆற்றியுள்ள வன்முறைக்கான தூண்டுகோல் உரையும்,​​ எல்லோருடைய கவனத்துக்கும் வந்திருக்கும்.திமுகதான் தன்னுடைய முதல் எதிரி எனவும்,​​ அதை ஒழிப்பதுதான் தன்னுடைய முக்கிய பணி என்றும் அவர் கூறியுள்ளார்.​ அதற்காக,​​ அதிமுகவுடன் ரகசியமாக கூட்டுச் சேர்ந்து பென்னாகரம் இடைத் தேர்தலை சந்திப்பார் என்பதற்கு ஆதாரம் அவரது பேச்சில் இருந்து தெரிகிறது.தொலைபேசியில் பேசினார்:​​ இரண்டொரு வாரங்களுக்கு முன்பு என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் பேசிய பேச்சுக்கும்,​​ அந்தப் பேச்சிலே இருந்த மென்மைக்கும்,​​ திடீரென்று தீப்பொறி கக்க அவர் பென்னாகரத்தில் வெளியிட்டுள்ள கருத்துகளுக்கும் }​ மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.அந்த ஆச்சரியத்தைப் போக்கியது அவருடைய கடந்த கால நடவடிக்கைகளும்,​​ அறிக்கைகளும்,​​ பேச்சுகளும் என்பதை அனைவரும் அறிவர்.அதிமுகவையும் கூட்டுச் சேர்த்துக் கொண்டு இந்த இடைத் தேர்தலிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற வெறித்தனமான போக்கு அந்த வட்டாரத்தில் உருவாகியுள்ளது.​ நான் மட்டுமல்ல }​ நாளேடுகளில் அவருடைய அறிக்கைகள்,​​ பேச்சுகளைப் படிப்பவர்களும் புரிந்து கொள்ள முடிகிறது.வன்முறைகளை கட்டவிழ்த்தாலும்:​​ தேர்தலின் போது,​​ அவர்கள் என்னதான் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டாலும்,​​ களப் பணியாற்றும் கட்சியினர்,​​ தோழமைக் கட்சியினர் அவைகளைப் பொருட்படுத்த வேண்டாம்.பதிலுக்குப் பதில் என்ற நிலை உருவாகாத அளவுக்கு பண்போடும்,​​ அன்போடும்,​​ அமைதி காக்கும் மனத்தெம்போடும் வாக்காளர்களைச் சந்திப்பதிலும்}வெற்றி ஒன்றில் மட்டுமே நாட்டம் கொண்டு அராஜக ஆட்டம் போட திட்டம் தீட்டி செயல்படக் கூடிய தீய சக்திகளுக்கு,​​ தீவிரவாத சக்திகளுக்கு சற்றேனும் இடம் கொடுக்கக்கூடாது.கருமமே கண்ணாயினர் என்ற முதுமொழிக்கு ஏற்ப,​​ பணியாற்றி ஜனநாயகத்தை அலுங்காமல்,​​ குலுங்காமல் காத்திட வேண்டும்'' என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துக்கள்

வாக்காளர்களே! திமுகவின் சாதனைகளையும் தந்த வேதனைகளையும் சீர் தூக்குங்கள்! பாமக வின் தமிழ் நலப் பணிகளையும் சாதி நலப் பணிகளையும் அடுத்தவர் பக்கம் பந்தை எறிந்து விட்டுக் கை கட்டி நின்றதையும் சீர் தூக்குங்கள்! அதிமுக விற்குச் சொல்ல என்ன இருக்கின்றது? ஆளுங்கட்சியாகச் செயல்பட்ப பொழுது இருந்த நிலைகளையும் எதிர்க்கட்சியாகச் செயல்படாதிருக்கும் நிலைகளையும் சீர் தூக்குங்கள்! தனித்தனியே குற்றமும் குணமும் நாடி மிக்கவற்றைத் தொகுத்து அவற்றைத் தரப்படுத்தித் தமிழ் நாட்டில் தமிழுக்குத் தலைமை தரப் போராடும் வேட்பாளருக்கு வாக்களியுங்கள். ஒருவரும் தக்கவர் இல்லையென்றால் செல்லா வாக்காகப் பதிந்து வாருங்கள். ஒன்றும் குறைந்து போகாது. ஆனால் வாக்குரிமையைப் பயன்படுத்துங்கள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/27/2010 2:29:00 AM

முதல்வரின் உரையையும் வன்னியர் கட்சியின்- மன்னிக்கவும் பாட்டாளி மக்கள்கட்சியின் - தலைவர் உரையையும் படிக்கும் பொழுது ஒன்று மட்டும் நன்கு புரிகின்றது. இரு தரப்பாருக்குமே வெற்றி மீது ஐயப்பாடு வந்து குழப்பத்தில் உள்ளனர். தோல்வி அச்சத்தில் கூறுகின்றவற்றை இப்பொழுது கூறுகின்றனர். திமுக வென்றால் ஊழலின் வெற்றி என்று சொல்லவும் பாமக வெற்றி பெற்றால் வன்முறையின் வெற்றி என்று சொல்லவும் வெற்றி பெற்றவர் சன நாயகம் வென்றது எனவும் தோல்வியுற்றவர் பண நாயகம் வென்றது எனக் கூறவும் ஆயத்தமாகி விட்டனர். ஆனால், யார் வென்றாலும் தோற்பது வாக்காளர்கள்தாம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/27/2010 2:28:00 AM

Need of the hour, every to win. So Requesting CEC Central Election Authority to cancel pennagaram bi-election so that "democracy" and all political party win. Otherwise democracy and everyone will be defeated by vested entity. Also CEC Central Election Authority need to amend by working with govt in way that no bi-election all over country.

By reader
3/27/2010 2:19:00 AM

This guy uses the same tactics,whenever he feels his party might loose...way back in 2006 general elections for TN assembly he just blabered AIADMK is planning to give Rs200 crore to a leading actor in TN film industry for campaign....but he never came forward to prove it.Even though his party managed to get only 90+ seats and begged support from others and still its a minority govt.

By Vignesh
3/27/2010 12:35:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 26 மார்ச், 2010

வாழ்க தமிழ்!வளர்க தமிழ்!வளமாகட்டும் திமுக

தமிழ்த்திரையுலகை திமுக ஆக்கிரமித்து வருவது தமிழுக்கு நல்லது என “உடன்பிறப்புகள்”கலைஞர் புகழ்பாடிவரும் வேளையில்,கலைஞரின் அரசியல் வாரிசுகள் எப்படியெல்லாம் திரையுலகில் தமிழை வளர்க்கிறார்கள்(!) என்று பார்க்கலாம்!

“காகிதப்பூ”நாடகம் மூலம் தனது துணைவியார் ராஜாத்தி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்ட கலைஞர்,”பூம்புகார் புரடக்சன்”மூலம் தனது மருமகன் முரசொலி மாறனுக்கு திரையுலக வாய்ப்பை ஒளிமயமாக்கினார்.அவரும் திரைப்படத் தயாரிப்பாளராக,இயக்குனராக ஆக்கப்பட்டார்.கலைஞரின் மூத்த மனைவியின் மகன் மு.க.முத்துவை திரைப்பட நடிகராக்கினார்.இப்போது அவர் மகன் திரைப்பட பின்னணிப் பாடகராக்கப்பட்டுள்ளார்.அரசியல் பவனிக்கு முன்பாக,தனது இரண்டாவது மனைவியின் இரண்டாவது மகனான மு.க.ஸ்டாலினை “குறுஞ்சிமலர்”மூலம் சின்னத்திரையில் அறிமுகம் செய்தார். பின்னர் அரசியல் வாரிசாக “துணை முதல்வராக”ஆக்கப்பட்டார். இப்போது அவரது மகன் உதயநிதி ஸடாலின் திரைப்படத் தயாரிப்பாளராக ஆக்கப்பட்டுள்ளார்.

அவரது நிறுவனத்தின் பெயர் “ரெட ஜெயன்ட் மூவிஸ் “என்ற தூய தமிழ்ப்பெயர்.தனது மகன் அழகிரியை அரசியலில் மத்திய அமைச்சராக்கியுள்ளார்.இவர் “ராயல் வீடியோ “என்ற தமிழ்ப்பெயரில் ஒரு கடை நடத்திவருகிறார்.மேலும் “ராயல் கேபிள் விஷன்”என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.இவரது மகன் துரை தயாநிதி திரைப்படத் தயாரிப்பாளராக ஆக்கப்பட்டுள்ளார்.

இவர் உருவாக்கியுள்ள நிறுவனத்தின் பெயரும் தூய தமிழ்ப் பெயரான “கிலௌடு நைன”என்பதாகும்.ஏற்கனவே முரசொலி மாறன் குடும்பத்தினர் “சன்”என்ற தமிழ்ப்பெயரில் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தி வருகின்றனர்.இப்போது “சன் பிக்சர்ஸ்”என்ற தமிழ்ப்பெயரில் திரைப்படத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.சமீபத்தில் மு.க.அழகிரி,மு.க.ஸடாலின் குடும்பத்தையடுத்து மு.க.தமிழரசு மகனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கலைஞர் தான் கலந்து கொள்ளும் திருமண நிகழ்ச்சிகளில்

தன கட்சித்தொண்டர்களுக்கு கூறும் அறிவுரை ,

”உங்கள் குழந்தைகளுக்கு, நிறுவனங்களுக்கு தமிழ்ப்பெயரிடுங்கள்.
தமிழ்மொழிக்கு முன்னுரிமை கொடுங்கள்.”
தாத்தா சொத்து பேரன்களுக்கு…

தாத்தா சொல்வதை அப்படியே வழிமொழியும் வாரிசுகளும், பேரன்களும் ஊடகங்களை ஆக்கிரமிக்கும் தமிழக அரசியல் மற்றும் தமிழ்த்திரை உலகத்தில் தமிழ்மொழியை வளர்க்க எப்படியெல்லாம் பாடுபடுகிறார்கள் என “உடன்பிறப்புகள்”திமுக-கலைஞர் புகழ் பாடுவதை பொறாமையுடன் பார்க்காதீர்கள் !

ஹரப்பா தமிழன்

௧) வேறு யாரையும் தலைவராக ஏறக முடியாது என்றால் தன்னைத் தலைவராக அறிவிக்க பேரம் பேசுகின்றார் என்றுதான் பொருள். ௨.) அண்ணாவிற்குப் பிறகு யாரையும் தலைவராக ஏற்க மாட்டோம் என்றவர்கள என்ன ஆனார்கள்? காலச் சூழலே இதைத் தீர்மானிக்கும். ௩.) இத்தகைய அறிவிப்பிற்கெலலாம் காரணம் கலைஞருக்குப் பிறகு கட்சியிலும் ஆட்சியிலும் அவரது குடுமபத்தினரே இரு்க்க வேண்டும் என்ற எண்ணமே. அதற்கான ஆயத்தமே இது. உள் குடும்பச் சண்டை எனக் கருதினால் தவறு. ௪.) எல்லாப் பதவிகளிலும் ஒரு குடும்பத்தினரே இருபப்பது என்பது குடும்பத்தின் வல்லாட்சி மட்டுமன்று; சிறுபான்மைச் சாதியினரே தொடர்ந்து பிற சாதியினரை ஒடுக்கும் சமமற்றச் சமுதாயச் சூழலை உருவாக்கும் என்பதை யாரும் புரிந்து கொள்ள வில்லை.எனவே குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் பதவி ; அந்த ஒருவர் யார் என்பதை அக் குடும்பம் தீர்மானிக்கும் எனக் கொண்டு வரலாம். ஆனால். அப்பொழுதும் சிக்கல்தான். ஒற்றைக் குடும்பமாகக் கருதாமல் தனித் தனிக் குடும்பமாகக் கருதும் சூழலில் கலைஞர் என்ன செய்ய முடியும்? எனவே, அவர் தனக்குப் பின் யார் என அறிவிக்க வேண்டா. காலம் தீர்மானிக்கும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
++++++++++++++++++++++++++++++++++++++++

"உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக ஆங்கிலமே நீடிக்கும்'



நமது நிருபர்​​சென்னை, ​​ மார்ச் 25:​ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக ஆங்கிலமே நீடிக்கும் என்று தலைமை நீதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்கள்,​​ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக ஆங்கிலம் உள்ளது.​ ஒரு சில உயர் நீதிமன்றங்களில் ஹிந்தியும் வழக்கு மொழியாக உள்ளது.சென்னை உயர் நீதிமன்றம்,​​ சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்தத் தீர்மானம் மத்திய சட்டத் துறையின் பரிசீலனையில் உள்ளது.இந்த நிலையில் தமிழில் வாதாட அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள வழக்கறிஞர்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.​ அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய உயர் நீதிமன்ற அதிகாரிகள்,​​ ""உயர் நீதிமன்றத்தில் தமிழிலும் வாதாடலாம்' என்று அனுமதி அளித்தனர்.இதையடுத்து, ​​ உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு வழக்குகளில் ஆஜரான வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடினர்.​ உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தொடர்பாக தலைமை நீதிபதி அலுவலகத்தைத் தொடர்பு கொண்ட போது அவர்கள் தெரிவித்த பதில்:உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாடலாம் என்று நீதிபதிகள் குழுவோ,​​ தலைமை நீதிபதியோ எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.குறிப்பிட்ட நீதிபதிகள் அவர்களின் அதிகார வரம்புக்குள்பட்டு தமிழில் வாதாட வாய்மொழியாக அனுமதி அளித்துள்ளனர்.​ இதற்கு சட்டப்பூர்வ அனுமதியோ,​​ அங்கீகாரமோ இல்லை.எனவே,​​ உயர் நீதிமன்றங்களில் வழக்கு மொழியாக ஆங்கிலமே நீடிக்கும் என்று தலைமை நீதிபதி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.தமிழில் வாதாடலாம் என்பது தொடர்பாக வழக்கறிஞர்கள் தெரிவித்த கருத்துகள்:​​தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.பிரபாகரன்:​​ வழக்கறிஞர்களுக்கு தமிழில் வாதாட அனுமதி அளித்துள்ளது வரவேற்க வேண்டிய விஷயம்.​ தாய்மொழியில் வாதாடும் போது தனது தரப்பையும்,​​ வழக்கின் தன்மையையும் ஆணித்தரமாக எடுத்துரைக்க முடியும்.வழக்கறிஞர்களுக்கான சமூக நீதிப் பேரவையின் தலைவர் கே.பாலு:​​ உயர் நீதிமன்ற மதுரை கிளையில் எந்த உத்தரவும் இல்லாமல் வாய்மொழியாக தமிழில் வாதாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.​ இதில் எந்த சட்ட முக்கியத்துவமும் இல்லை.ஆனாலும்,​​ உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக தமிழை ஆக்க வேண்டும் என்ற பாதையில் எடுத்துவைக்கப்பட்ட முதல் அடியாக இதைக் கருதலாம்.​ தமிழ் உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக இதுவே போதுமானதல்ல.இது தொடர்பாக சட்டப்படியாக அறிவிப்பாணை வந்தால் மட்டுமே,​​ உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்குமொழி என்ற அந்தஸ்தைப் பெறும்.மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கச் செயலர் ஏகே.ராமசாமி:​ உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் வாதிடும்போது ஆங்கிலத்தில்தான் வாதாட வேண்டும் என்று சட்டம் இல்லை.​ தமிழில் பேசுவதற்குத் தடையும் இல்லை.வழக்கறிஞர் விஜயேந்திரன்:​ வழக்குகளை அந்தந்த மாநில மொழிகளில் விசாரிப்பதே,​​ நீதியை உரிய முறையில் பெற்றுத்தருவதற்கான ஏற்பாடாக இருக்கும்.வழக்கு ஆவணங்கள்,​​ தீர்ப்புகள் உள்ளிட்ட அனைத்தும் ஆங்கிலத்திலேயே உள்ளன.​ இவற்றை மொழிபெயர்ப்பு செய்த பிறகே உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவது சாத்தியமாகும்.​ இதற்குரிய ஏற்பாட்டை தமிழக அரசுதான் செய்ய வேண்டும்.
கருத்துக்கள்

கண்டிக்கத்தக்க இக்கருத்தைத் தமிழக அரசு நீக்கி, அனைத்து மன்றங்களிலும் தமிழில் வாதாட வகை செய்ய வேண்டும். செம்மொழி மாநாட்டிற்கு முன்னதாக இதனைச் செய்து முடிக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/26/2010 4:22:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
செம்மொழி மாநாடு இன்னும் 90 நாள்கள்: கல்லூரி மாணவர்களுக்கான விக்கிபீடியா தகவல் பக்க போட்டி



உ ​​லகத் தமிழ் இணைய மாநாட்டையொட்டி தமிழ்நாடு அரசு }​ தமிழ் விக்கிபீடியா இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான "விக்கிபீடியா தகவல் பக்கங்கள்' என்ற போட்டியை நடத்துகிறது.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஓர் அங்கமாக உலகத் தமிழ் இணைய மாநாடு நடைபெறுகிறது.​ இந்த மாநாட்டுக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள இணைய மாநாட்டுக் குழுவுக்கு,​​ கான்பூர் ஐ.ஐ.டி.​ தலைவரான மு.ஆனந்தகிருஷ்ணன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.உறுப்பினராக கனிமொழி எம்.பி.,​​ அமைப்பாளராக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை,​​ ஒருங்கிணைப்பாளராக தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் டேவிதார் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் அழைப்பு:​​ கலை,​​ அறிவியல்,​​ பொறியியல்,​​ மருத்துவம்,​​ விளையாட்டு,​​ வேளாண்மை,​​ சட்டம்,​​ இயக்குநர் மருத்துவம் ​(பிசியோதெரபி),​​ சித்த மருத்துவம்,​​ பல் மருத்துவம்,​​ செவிலியர்,​​ கால்நடை மருத்துவம்,​​ பல தொழில்நுட்பப் பயிலகம் என பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு,​​ தனியார்,​​ நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கல்லூரி மாணவ,​​ மாணவியர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.தமிழ் விக்கிபீடியா போட்டி:​​ தகவல் பக்கங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் நடுநிலைமையுடன் அமைய வேண்டும்.​ இனம்,​​ சமயம்,​​ அரசியல்,​​ தனிநபர் குறை,​​ வேறுபாடுகள் தொடர்பாக வெறுப்பைத் தூண்டாதவாறு,​​ தமிழ் விக்கிபீடியாவுக்கு ஏற்றதாக அமைய வேண்டும்.தகவல் பக்கங்களில் உள்ள சொற்களின் எண்ணிக்கை 250 முதல் 500 வரை அமைய வேண்டும்.தகவல் பக்கங்கள் ஏப்ரல் 30}ம் தேதிக்குள் நிறைவு செய்து http:​/​/​tamilint2010.tn.gov.in​ என்ற இணையதளத்தில் அனுப்ப வேண்டும்.மேலும் விவரங்களுக்கு http:​/​/​ta.wikipedia.org என்ற இணையதளத்தைப் பார்த்து வழிகாட்டு நெறிமுறைகளைத் தெரிந்து கொள்ளலாம்.​ தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் பக்கங்களை உலகளாவிய தமிழ் விக்கிபீடியாவில் அமைக்கப்படும்.கேமரா,​​ லேப்-டாப் பரிசுகள்...:​​ இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு லேப்}டாப்,​​ எம்.பி.​ 3 பிளேயர்,​​ டிஜிட்டல் கேமரா ஆகியவைப் பரிசாக வழங்கப்படும்.
தமிழ்-ரஷிய கலாசார உறவை வளர்ப்பதில் புதிய முயற்சிகள்



சென்னை,​​ மார்ச் 25: தமிழ்-ரஷிய கலாசார உறவை வளர்க்கும் புதிய முயற்சிகள் இப்போது நடைபெற்று வருகின்றன.இந்தியாவுக்கும், ​​ ரஷியாவுக்கும் இடையே பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பாரம்பரிய நட்புறவு நிலவி வருகிறது.​ குறிப்பாக ஒன்றுபட்ட சோவியத் யூனியன் இருந்த காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே அரசியல்,​​ அறிவியல்,​​ கலாசாரம் என அனைத்து துறைகளிலும் மிகுந்த ஒத்துழைப்பும்,​​ நட்புறவும் நிலவியது.அதிலும் குறிப்பாக தமிழ்}ரஷிய கலாசார உறவில் சோவியத் யூனியன் இருந்த காலத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.​ ரஷிய அரசியல்,​​ அறிவியல்,​​ இலக்கிய நூல்கள் ஏராளமானவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன.​ ரஷிய மொழி கற்பதற்காக இங்கிருந்து ஏராளமானோர் அந்நாட்டு அரசு சார்பில் மாஸ்கோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.​ மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென தனித்துறை ஏற்படுத்தப்பட்டது.1987}ம் ஆண்டு சோவியத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இந்தியத் திருவிழாவில் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி தலைமையில் ஆயிரக்கணக்கான இந்திய படைப்பாளிகளும்,​​ குறிப்பாக தமிழகத்திலிருந்து அதிக படைப்பாளிகளும் பங்கேற்றனர்.சோவியத் யூனியன் பிரிந்த பின்,​​ இத்தகைய உறவில் பின்னடைவு ஏற்பட்டது.​ இந்த சூழலில்,​​ தமிழ்}ரஷிய கலாசார உறவை வளர்ப்பதற்கான புதிய முயற்சிகள் இப்போது தொடங்கியுள்ளன.ரஷிய கலைவிழா:​​ இந்திய}ரஷிய கலாசார நட்புறவுக் கழகத்தின் ஏற்பாட்டில் வரும் மே மாதம் தமிழகத்தில் ரஷிய கலைவிழா நடைபெற உள்ளது.​ இதில் பங்கேற்க 25 ரஷிய கலைஞர்கள் தமிழகம் வர உள்ளனர்.​ பாலே நடனம்,​​ ரஷிய நாட்டுப்புற நடனம்,​​ ஜிம்னாஸ்டிக்,​​ மேஜிக்,​​ பாரம்பரிய ரஷிய இசைக் கருவிகள் மூலம் இசை நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.சென்னையில் தொடங்கி,​​ பின்னர் மாமல்லபுரம்,​​ தஞ்சாவூர்,​​ திண்டுக்கல்,​​ மதுரை,​​ சேலம்,​​ கோவை,​​ ஊட்டி ஆகிய நகரங்களில் ரஷிய கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.​ ​ரஷியாவில் திருவையாறு:​ ​ இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 25 கலைஞர்கள் ரஷியா செல்ல உள்ளனர்.​ சீர்காழி சிவசிதம்பரம் தலைமையிலான இக்குழுவினர் "ரஷியாவில் திருவையாறு' என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.திரைத்துறையில் உறவு:​​ சோவியத் யூனியன் இருந்தபோது வீரபாண்டிய கட்டபொம்மன்,​​ தில்லானா மோகனம்பாள்,​​ முதல் மரியாதை,​​ வேதம் புதிது என பல தமிழ்த் திரைப்படங்கள் ரஷிய மொழியில் "டப்பிங்' செய்யப்பட்டன.​ குறிப்பாக "தண்ணீர்,​​ தண்ணீர்' திரைப்படம் ரஷியாவில் 360 பிரதிகள் பிரிண்டிங் செய்யப்பட்டது.​ பின்னர் இதிலும் தேக்கம் ஏற்பட்டது.இப்போது தமிழ்த் திரைப்படங்கள் ரஷிய மொழியில் டப்பிங் செய்வது மீண்டும் தொடங்கியுள்ளது.​ இதற்காக "இந்திய}ரஷிய திரைப்பட பரிமாற்றக் குழு' என்ற அமைப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது."இப்போது சந்திரமுகி படம் டப்பிங் செய்து முடிக்கப்பட்டுள்ளது.​ அசல்,​​ புன்னகை மன்னன் ஆகிய படங்கள் டப்பிங் செய்யப்பட்டு,​​ ரஷியாவில் விரைவில் திரையிடப்பட உள்ளன.மேலும்,​​ இந்த அமைப்பின் மூலம் ரஷிய திரைப்பட பிரிவு விரைவில் சென்னையில் தொடங்கப்பட உள்ளது.​ அதன் பின்னர் ஏராளமான ரஷிய மொழி திரைப்படங்கள் சென்னையில் தயாரிக்கப்படும்' என்று இந்திய}ரஷிய நட்புறவுக் கழக பொதுச் செயலாளர் பி.​ தங்கப்பன் தெரிவிக்கிறார்.வீடியோ கான்ஃபரன்ஸிங் முறையில் தமிழக மாணவர்களுக்கு ரஷிய மொழியை கற்பிக்கவும்,​​ மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்களுடன்,​​ தமிழகத்தில் உள்ள தமிழ் அறிஞர்கள் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் உரையாடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.இவை யாவும் தமிழ்}ரஷிய கலாசார உறவில் புதிய பரிமாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துக்கள்

1.)இரட்டை நகரக்கலை பண்பாட்டு ப் பரிமாற்றங்கள் என்னும் நோக்கில் இரசிய நகரங்களு்ம் தமிழக நகரங்களும் (சா: மதுரை-மாசுகோ) இணைந்து செயல்படும் வகையில் கடந்த ஆட்சியில் ஒரு திட்டம் முன்னெடுக்கப்பட்டு அரசின் ஒத்துழைப்பின்றி வீணானது. அது போன்ற முயற்சிகைளைத் தொடர வேண்டும். 2) இரசியாவில் திருவையாறு என்னும் தலைப்பைப் பார்க்கும் பொழுது இத் திட்டத்தில் தமிழ்ப் பகைவர்கள கை ஓங்கி இருப்பது தெரிகிறது. தமிழ் இசையால் புகழ் பெறும் சீர்காழி சிவசிதம்பரம் இத் தலைப்பை மாற்றித் தமிழிசையே அங்கு நடத்த வேண்டும். இல்லையேல் விலக வேண்டும்.தமிழ் இரசியப் பண்பாட்டு உறவு என்ற பெயரில் ஆரியத்தையும் தெலுங்கிசையையும் பரப்ப எண்ணும் இம் முயற்சியை நீக்க அரசு உடனயாகத் தலையிட்டுத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/26/2010 4:04:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
நீதிபதிகளின் கருத்து வேதனை அளிக்கிறது​​: இராம.​ கோபாலன்



சென்னை, ​​ மார்ச் 25: திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது தவறல்ல,​​ என்ற உச்ச நீதிமன்ற நீதிகளின் கருத்து வேதனையளிக்கிறது என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.​ கோபாலன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:""திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும்,​​ பெண்ணும் இணைந்து வசிப்பதோ எவ்விதத்திலும் தவறல்ல'' என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.​ பாலகிருஷ்ணன்,​​ நீதிபதிகள் தீபக் வர்மா,​​ சவுகான் ஆகியோர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.பண்பாடு இல்லையெனில் பாரதம் இல்லை.​ சமுதாயத்தின் நம்பிக்கை,​​ அதன் சிறப்பு போன்றவற்றை கவனத்தில் கொண்டு இவர்கள் கருத்து தெரிவித்திருக்க வேண்டும்.திருக்குறள் காட்டும் கற்புநெறி,​​ கற்புக்கரசி கண்ணகி போன்ற தமிழகத்தோடு இணைந்துள்ள விஷயங்களை தூக்கி எறியலாமா?நீதிபதிகளின் கருத்து தேவையற்றது.​ வேதனையளிக்கிறது.​ இக்கருத்தை அவர்கள் திரும்ப பெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துக்கள்

திரையுலகிலும் சாமியார்கள் உலகிலும் பரவியுள்ள தவறான ஒழுகலாற்றை நீதிபதிகள் (சிலரைக் காப்பாற்ற வேண்டும் நோக்கில் முன் கூட்டியே) வரிந்து கட்டிக் கொ்ண்டு வரவேற்பது கண்டிக்கத்தக்கது. கண்டனைகள் பெருகட்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/26/2010 3:52:00 AM

அன்பான பெரியோரே !....தளர்ந்து போகாதீர் !!....நீதிப்தி அவர் கருத்தை சொன்னால் என்ன ?...நம் பாரத தேசத்தில் புனிதமான ஏகப்பட்ட கண்ணகிகள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் !!!....இனியும் வருவார்கள் ....புனிதத்துடன் வாழ்ந்து சிறபபடைவார்கள் !!!!

By rajasji
3/26/2010 2:08:00 AM

தமிழ்நாடு சிவசேனா கட்சித் தலைவர் குமாரராஜா, நித்தியானந்தர் வளர்ச்சியை பிடிக்காமல் சில சக்திகள், கிராப்பிக்ஸ் மூலம் பொய்யான மனிதரை நித்தியானந்தர் போல உருவாக்கியுள்ளனர். அதில் ஒரு பகுதிதான் நடிகையுடன் இருக்கும் வீடியோ காட்சி என்று தனது கையில் வைத்திருந்த அறிக்கையை படித்தார். பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் குமாரராஜா. எந்த ஆதாரத்தை வைத்து வீடியோவில் உள்ள காட்சிகளை கிராப்பிக்ஸ் என்று சொல்லுகிறிர்கள்? இதுபற்றி நித்தியானந்தத்திடம் தொடர்பு கொண்டு பேசினீர்களா? உங்களுக்கும் நித்தியானந்தாவிற்கும் எங்த வகை தொடர்பு? அவரை நீங்கள் சந்தித்துள்ளீர்களா? அவருக்கு உங்களை தெரியுமா? இந்து மக்கள் கட்சி உள்பட நித்தியானந்தாவின் பக்தர்களும் இந்த வீடியோ காட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்கள். அப்படி இருக்க நீங்கள் மட்டும் ஏன் அவருக்கு ஆதரவாக பேசுகிறீர்கள்? இது உங்களுடைய விளம்பரத்துக்காகவா? அல்லது அவரோடு உங்களுக்கு வேறு ஒப்பந்தம் உள்ளதா? என்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் காமெடியாக அளித்த ஒரே பதில், வீடியோவில் இருப்பது நித்தியானந்தாவின் கிராப்பிக்ஸ் உர

By saab
3/26/2010 1:58:00 AM

என்ன செய்வது அங்கிள்? வேதனையாகத்தான் இருக்கிறது. அது இருக்கட்டும். நீங்கள் குர்ஆனை தமிழில் படித்து முடித்து விட்டீர்களா? ஏனென்றால், உங்கள் சிஸ்ய கோடி ஒருவர் தில்லு தில்லு என்று ரொம்பவும் துள்ளுகிறார். அவருக்கு நாங்கள் பதில் சொல்லி முடியவில்லை. இனி நீங்களே அவருக்கு பதில் சொல்லுங்கள்.

By Abdul Rahman - Dubai
3/26/2010 1:55:00 AM

குஜராத் மாநிலத்தில் 200 கிலோ வெடிபொருள்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.​ இதுதொடர்பாக 4 ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இதன் பிண்ணியில் குஜராத் முதல்வர் தீவரவாதி மோடிக்கு தொடர்புண்டா என உளவுத்துறை தீவிர விசாரணை நடாத்திவருகிறது.புனேயில் நடந்த குண்டு வெடிப்புகளை இவர்கள் தான் நடாத்தி இருப்பார்கள் என உளவுத்துறை சந்தேக படுகிறது. ​குஜராத் மாநிலம் வால்சாத் மாவட்டத்தில் வாபி என்ற இடத்தில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.​ அப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டனர்.​ ​ ​அதில் 4 பைகளில் தலா 50 கிலோ எடையிலான அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் மற்றும் 600 டெட்டனேட்டர்கள் இருப்பது தெரியவந்தது.​ இதையடுத்து காரும்,​​ வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.​ ​ இதுதொடர்பாக காரில் வந்த 4 ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.​ இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக போலீஸார்

By maan
3/26/2010 1:54:00 AM

காஞ்சிக் காமக்கோடியின் காமக்களியாட்டங்களும், கொலைக் குற்றமும் வெளிப்பட்ட பிறகும் வாழாவிருந்த சங்க்பரிவார்களுக்கு நித்யானந்தாவின் நிழலுக அனுபவங்களை கண்டவுடன் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. நித்யானந்தாவிற்கு ‘ரா’ வில் தொடங்கும் நடிகையென்றால் காஞ்சிக்கு ‘எம்’ ’எஸ்’ நடிகைகளின் சேவைகள். கூடவே ‘அனு’வில் துவங்கும் எழுத்தாளரின் கசப்பான அனுபவங்கள். காரணம் புரிகிறது அவர் 'அவாள்’ ஆனதாலோ! அடப்பாவிகளா? ஒழுக்கச் சீரழிவிலும் ஜாதி வெறியா? காஞ்சிக் காமக்கோடி முதல் கடைக்கோடி அர்ச்சகன் வரை ஒழுக்கச் சீரழிவின் உச்சத்திற்கே சென்ற செய்திகள் அடிக்கடி வெளியான பின்னரும் அறியாமையிலிருந்து விடுபடாத பக்தகோடிகள் புரோகித கசமாலங்களின் காலடியில் வீழ்ந்தே கிடக்கின்றனர். மனிதனை மனிதன் என்ற நிலையில் பார்க்காமல் அவன் காட்டும் சில வித்தைகளால் உச்சத்தில் தூக்கிவைத்து கூத்தாடிவிட்டு அவனது ரகசிய செய்கைகள் வெளிப்படுத்தப்படும் பொழுது நிலைகுலைந்துப் போகின்றனர் இந்த அறிவிலிகள். இறைவன் யார்? மனிதனை இறைவன் எதற்காகப் படைத்தான்? அவனுக்கும் மனிதனுக்கு மிடையே இடைத்தரகர்கள் தேவையா? தான் படைக்கப்பட்டது ஏன்? என்பதை பற்றி உணராததன் கா

By man
3/26/2010 1:51:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்