வியாழன், 28 ஜூலை, 2016

கவிஞர் ஞானக்கூத்தன் காலமானார்


கவிஞர் ஞானக்கூத்தன் காலமானார்

கவிஞர் ஞானக்கூத்தன் (அகவை 78) சென்னையில் நேற்று  (ஆடி 12, 2047 : சூலை 27, 2016) இரவு காலமானார்.
  1938 இல் மயிலாடுதுறை அருகே  உள்ள திருஇந்தளூரில் பிறந்த ஞானக்கூத்தனின் இயற்பெயர் அரங்கநாதன். திருமந்திரம் நூல் ஏற்படுத்தி்ய தாக்கத்தால் ஞானக்கூத்தன் எனப் பெயர் வைத்துக் கொண்டார். 
 1968இல் கவிதைகளை எழுதத் தொடங்கினார் ஞானக்கூத்தன். இன்றைய புதுஉகக் கவிதைகளின் முன்னோடிகளில்  முதன்மையானவராகத் திகழ்ந்தவர்.
. , கசடதபற, கவனம் ஆகிய சிற்றிதழ்களின் ஆசிரியர் குழுக்களில் ஞானக்கூத்தன் இடம்பெற்றிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக