: தலைப்பு-தமிழறியாதார் காதலைப்பழிப்பர்-பரிபாடல் thalaippu_thamizhariyaathaar_kadhalaipazhippaargal
காதல்காட்சி : paripaadal_padam

தமிழ் அறியாதவர்களே காதலைப் பழிப்பார்கள்!
அன்றே சொன்னது பரிபாடல்!

  தள்ளாப் பொருளியல்பில் தண்டமிழாய் வந்திலார்
            கொள்ளாரிக் குன்று பயன்    (பரிபாடல்: 9)
  “தள்ள வாராக் காதல் பொருளின் இலக்கணம் கூறும் தமிழை ஆராயாதவரே, மலையிடத்து நிகழும் களவொழுக்கத்தை ஓர் ஒழுக்கமென ஏற்றுக்கொள்ளார்” என்று குன்றம் பூதனார் காரணம் கூறிக் கழறுவர். பிற மொழிகள் எழுத்திலக்கணமும் சொல்லிலக்கணமும் உடையனவேயன்றி, மக்களின் வாழ்வை ஆராய்ந்த பொருளிலக்கணம் கண்டவையல்ல. தமிழ் மொழியோ எனின், முவ்விலக்கணமும் நிறைந்தது. தமிழின் பொருளிலக்கணத்தைக் கல்லாத அறிவுக் குறையுடையார் காதற் களவைக் குறை கூறுவர் எனவும், தமிழை ஆய்ந்தவர் களவு நெறியை உடன்படுவர் காண் எனவும் மேலைப் பரிபாட்டால் தெளிகின்றோம்.
மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார்:
தமிழ்க்காதல்
அட்டை-தமிழ்க்காதரல், வ.சுப.மாணிக்கம் : attai_thamizhkaathal01
காதல்காட்சிப் படம்: நன்றி எழுத்து.காம்.
பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் : peyar_gnanaprakasan_peyar